(Reading time: 5 - 10 minutes)

தொடர்கதை - என் நிலவு தேவதை – 22 - தேவிஸ்ரீ

En nilavu devathai

ங்காதரனின் மனம் உலைகலமாய் கொதித்து கொண்டிருந்தது.. அவரால் ஆதி பிழைத்து வந்ததை கேள்விப்பட்டு நம்ப இயலாமல் வீட்டில் உள்ள பொருட்களை போட்டு உடைத்துக்கொண்டிருந்தார்.. பின் சுவரில் இருந்த புகைப்பட பிரேமில் புன்னகைத்து கொண்டிருந்த தன் தங்கை தேன்மொழியை கண்டு கண் கலங்கியவரின் முகம் பயங்கரமாய் மாறியது..

அதே சமயம் ஆதி இதுவரை கூறிய உண்மைகளை தன் குடும்பநபர்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என்று தன் மனைவி, தங்கையின் கணவர் வாசுதேவன், தாயம்மாவிடம் கேட்டுக்கொண்டார்.. அதோடு சில விசயங்களை ஆலோசித்து கொண்டிருந்தனர்...

அடுத்தநாள் காலை அனைவரும் பரபரப்புடன் கிளம்பி கொண்டிருந்தனர்.. அம்முவுக்கு ஒன்றும் புரியவில்லை., அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த மித்ராவை தடுத்து நிறுத்தினாள் அம்மு..

“இங்கு என்ன நடக்குது சங்கு.. எல்லோரும் எங்க கிளம்புறாங்க..” என புரியாமல் கேட்ட அம்முவை கண்விரித்து பார்த்த மித்ரா,

“நாம எங்கே போறோம்னு உனக்கு உண்மையாகவே தெரியாதா அம்மு..”

“அதைதானே நான் இப்போ கேட்டேன்..” என முறைத்தவளை கண்டு சிரித்தவள்,

“லூசு, இன்னைக்கு உனக்கும் அண்ணாவுக்கும் கல்யாணத்துக்கு தேவையான முகூர்த்த புடவை, நகை, தாலி, பட்டு சட்டை, வேட்டி, இதெல்லாம் எடுக்க காஞ்சிபுரம் போறோம்..”

“என்ன???.. என்கிட்ட சொல்லவே இல்லை..”

“அதுதான் இப்போ தெரிந்துடுச்சில்ல.. போ.. கிளம்பு” என கூறிவிட்டு சிட்டாய் பறந்தாள் மித்ரா.. அதைகண்டு கோபத்துடன் தரையை உதைத்தவள் அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க, பாவம் விக்ரம் தெரியாமல் அங்கு வர அம்முவிடம் மாட்டிக்கொண்டான்..

அங்கு வந்த விக்ரமை கண்ட அம்மு அவனை தரதரவென்று அவளறைக்கு இழுத்து செல்ல, அவனோ,

“நிலா.. என்ன பண்ற.. யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க..” என புன்சிரிப்புடன் கேட்டவனை முறைத்தவள்,

“இன்னைக்கு எங்கே போறோம்னு உங்களுக்கு தெரியுமா?..”

“ம்ம் தெரியுமே..”

“எல்லோருக்கும் தெரிந்துருக்கு.. எனக்கு யாரும் சொல்லல..” என்று அம்மு கோபமாய் பல்லை கடிக்க, மெல்ல அவளருகே வந்தவன் அவள் இடுப்பில் கைவைத்து தன்புறம் இழுக்கவும், அதை எதிர்பாராதவள் அவன் மீது மோதினாள்..

தன் கையணைப்பில் அவளை கொண்டு வந்தவன் அவள் கண்களை காண,  அவள் இமைகள்  படபடவென அடித்துக் கொண்டது.. பின் அவன் அவளை நெருங்கி வந்து கண்களில் முத்தமிட்டான்.. பின் இரு கன்னங்களிளும் மென்மையாக முத்தமிட்டவன், அவள் இதழை நோக்கி குனிய, சட்டென்று விழித்தவள் அவனை பலமாய் தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து ஓடினாள் தோட்டத்திற்கு..

அவள் ஓடியதை கண்டவாறு புன்னகைத்துக்கொண்டே விக்ரம் வெளியே வர, மித்ரா அவனை பிடித்துக் கொண்டாள்..

“என்ன நடக்குது இங்க..”

“ஒன்னுமில்லை மித்ரா..”

“அம்மு ரூம்ல என்ன பண்றீங்க..”

“அம்மு கிட்ட பேசலாம்னு வந்தேன்.. நான் கிளம்பனும் பை..” என கடகடவென பேசிவிட்டு அங்கிருந்து ஓடினான் விக்ரம்.. அதைக்கண்டு மனதினுள் சிரித்துக்கொண்டாள் மித்ரா..

இங்கு அம்மு அவளையே திட்டிக்கொண்டு இருந்தாள்.. விக்ரமை டார்ச்சர் செய்யவேண்டும் என நினைத்து விட்டு, அவனிடமே மயங்கி நின்றுவிட்டோமே என எண்ணி தன்னைத்தானே திட்டிக்கொண்டிருந்தாள்..

அனைவரும் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தனர்.. முதலில் முகூர்த்த புடவை எடுக்க முடிவானது.. எனவே அம்முவுக்கு குங்கும கலரில் அதிக ஜரிகையிட்ட புடவை, அதனுடன் அதற்கு பொருத்தமான அணிகலன்கள் எடுக்கப்பட்டது.. பின் மாப்பிள்ளைக்கு பட்டுவேட்டி, சட்டை எடுக்கப்பட, மாங்கல்யமும் நல்ல நேரம் பார்த்து வாங்கப்பட்டது..பின் ரிசப்ஷனுக்கு தேவையான உடைகளை அம்மு, விக்ரமையே தேர்ந்தெடுக்க சொல்லி விட்டு அவரவர்களுக்கு தேவையான உடைகளை எடுக்க சென்றுவிட்டனர்.. அம்முவும், விக்ரமும் தனித்து விடப்பட, முதலில் அம்மு தான் பேச ஆரம்பித்தாள்..

“நான் முதலில் யம்முவுக்கு உடை எடுக்கணும்.. அப்புறம் நமக்கு எடுக்கலாம்..” என்றவள் மடமடவென யம்முவுக்கு பிடித்த மாதிரி அனைத்து விசேசத்திற்கும் தேவையான உடைகளையும், அதற்கு பொருத்தமான அணிகலன்களும் எடுத்தாள்.. பின் அவனருகே வந்தவள் அவள் ஆடை பிரிவுக்கு அவனை அழைத்துச் சென்றாள்..

நேரம் கடந்துகொண்டிருந்தது.. முழுதாய் நான்கு மணிநேரம் ஆகியும் அம்மு அவளுக்கு தேவையான உடையை எடுக்கவே இல்லை.. விக்ரமை நன்றாக காக்க வைத்தாள்.. அவள் முதல் பத்து நிமிடத்திலே தனக்கு தேவையான உடையை அவனுக்கு தெரியாமல் எடுத்து வைத்துவிட்டாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.