(Reading time: 7 - 14 minutes)

“என்னப்பா ஆச்சார்யா.. களைப்பா வந்த பிள்ளைங்களை வாசல்ல வெச்சு கேள்வி கேட்டுட்டு இருக்க..?? முதலில் அவர்கள் களைப்பாறிவிட்டு வரட்டும்.. அப்புறம் நீ கேள்வியா கேட்டிட்டு இரு..”,என்றார் அவ்வளவு நேரம் அவர்களை பார்த்துக்கொண்டிருந்த அழகி எழிலின் பாட்டி..

அவரது பேச்சிற்கு மறு பேச்சு பேச முடியாமல் பொதுவாக,”அதான் அம்மா சொல்றாங்கல்ல போங்க.. போயி ரெப்ரெஷ் ஆயிட்டு வாங்க..”,என்று விட்டு தனது கைபேசியுடன் வெளியே சென்றார்..

மேப்பைக் கொடு என்று ஆச்சார்யா கேட்டவுடன் திடுக்கிட்ட அனைவரது உள்ளமும் பாட்டியின் குரலில் ஐஸ் மழை பொழிந்தது போல் ஆனது..

ஆச்சார்யாவின் தலை மறைந்ததும் அனைவரும் தங்களது அறை நோக்கி செல்லத் துவங்கினர்..

பாட்டியை நெருங்கிய எழில் அழகி என்றழைத்தபடி அவரை குறுகுறுவென பார்த்தான்..

அவரோ,”என்னடா பேராண்டி..??”,என்று கேட்டார் ஒன்றும் தெரியாதது போல்..

“நீ ஆம்பளைங்க பேசும்போது குறுக்க பேசும்போது குறுக்க பேசமாட்டியே.. இன்னைக்கு என்ன புதுசா..??”,போட்டு வாங்கும் விதமாக..

”என்கிட்டயே போட்டு வாங்கிறையா பேராண்டி..”, என்றவர், ”அந்த ஆளு.. அதான் உன்னோட முதலாளி ஆச்சார்யா..அவருகிட்ட ஏதோ தகிடித்தனம் இருக்கு கண்ணு.. பார்த்து நடந்துக்கோ..”,என்று எச்சரித்தவர்,”போ போயி குளிச்சிட்டு சாப்பிடு..”,என்று என அனுப்பிவைத்தவர் ஆச்சார்யா சென்ற பாதையை பார்த்துக்கொண்டிருந்தார்..

ன்று இரவு வ்ருதுஷைத் தவிர மற்ற அறுவரும் ஒரு அறையில் அமர்ந்திருக்க அங்கு வந்த ஆச்சார்யா சுற்றி வளைக்காமல்,“மேப்பை கொடுங்கள்..”,என்றார்..

“எங்களது அம்மா அப்பா இங்கு வந்தால்.. உங்களது மேப்பை நாங்கள் தருகிறோம்..”,என்ற விக்கியை அதிர்ந்து போய் பார்த்தார் ஆச்சார்யா..

சுதாரித்தவர்,“விக்கி என்ன.....”

“மேலும் மேலும் பாவத்தை சேர்க்காதீர்கள் சார்.. எங்களது அம்மா அப்பா எங்க இருக்காங்கன்னு ஒழுங்கா சொல்லுங்க..”,கோபமாகக் கேட்டாள் க்ரியா..

“உனது அம்மா அப்பாவா..??”,கண்களை சுருக்கி கேட்டார் ஆச்சார்யா..

“நாங்கள் இருவரும் நரசிம்ஹன் வேதக்ரிபாவின் மகள்கள்..”,என்றாள் தியா..

“நரசிம்ஹன் பொண்ணுகளா நீங்க..??”,மீண்டும் அதிர்ச்சி..

இது எப்படி சாத்தியம்.. ஒருவருக்கும் நமது ரகசியங்கள் தெரியாது என்றல்லவா நினைத்தோம்.. இவர்களுக்கு எப்படி..??

மனதின் உள்ளே பட்டிமன்றங்கள் பல நடக்க அதை வெளிக்காட்டாமல் இருக்க பிரயத்தனங்கள் பல எடுத்துக்கொண்டிருந்தார் அவர்..

அதற்குள் ரிக்கி,“உங்களை எவ்வளவு நம்பினோம்..?? ஆனால் நீங்கள்..??”,என்று விட்டு,”ஒழுங்கா உண்மைய சொல்லுங்க.. எங்க அம்மா அப்பா எங்கே..??”

தடுமாறிய ஆச்சார்யா,”எல்லாரும் என்ன உளறிக் கொண்டிருக்கிறீர்கள்..??”,சீறலாக முகத்தை இறுக்கமாக வைத்தபடி கேட்டார்..

“இன்னும் கூட உங்களால் உண்மையை ஒத்துக்கொள்ள முடியவில்லையா..??”,இது விக்கி..

“விக்கி ரிக்கி அவங்க தான் ஏதோ தெரியாம சொல்றாங்கன்னா.. நீங்களும் அதை நம்புகிறீர்களா..??”,என்றார் பாவமாக..

“இப்படி நடித்து நடித்து தானே எங்களை இவ்வளவு நாள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்..”,விரக்தியாக சொன்ன ரிக்கி,”உண்மையை இப்பொழுதாவது சொல்லுங்கள் பெரியப்பா.. ப்ளீஸ்..”

“இதற்கு மேலும் நடிக்காதீர்கள்.. உண்மையை சொல்லுங்கள்.. நீங்கள் லாரியை வைத்து ஆக்ஸிடென்ட் செய்தது..அநாதை பிணங்களை எங்களது தாய் தந்தையரின் உடலுக்கு பதிலாக மாற்றி வைத்தது.. அவர்களை மறைத்து வைத்தது என அனைத்தும் எங்களுக்கு தெரியும்..”,என்றாள் க்ரியா..

தான் வசமாக சிக்கிவிட்டோம் என்று உணர்ந்தார்.. இருந்தாலும் அதை ஒத்துக் கொண்டால் அது ஆச்சார்யா இல்லையே..

“டோன்ட் ப்ளாபர் இடியட்ஸ்..”,என்று உரக்க கத்தியவர்,”உங்க எல்லாருக்கும் பைத்தியம் பிடிச்சிருக்கு.. கண்டதையும் உளறுகிறீர்கள்..”,என்றார்..

அந்த நேரம் தியாவின் அலைபேசியில் வ்ருதுஷ் மெசேஜ் வந்திருப்பதற்கான அறிகுறி காட்ட அதனை ஓபன் செய்து பார்த்தவளின் இதழ்களில் சிறு புன்னகை..

“இந்தாங்க சார்.. இதை பார்த்துட்டு அட்லீஸ்ட் உண்மையை சொல்லுங்க”, என அதனை ஆச்சார்யாவிடம் நீட்டினாள்..

அலட்சியமாக அதனை வாங்கி அதனைப் பார்க்கத் துவங்கியவர் காட்சிகள் மாற மாற அவரது முகம் வெளுக்கத் துவங்கியது..

வணக்கம் நண்பர்களே..

உங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

இந்த அத்தியாயம் எப்படி என்பதை படித்துவிட்டு கூறவும்..

நன்றி.. 

வியூகம் வகுக்கலாம்...

Episode # 24

Episode # 26

{kunena_discuss:1111}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.