(Reading time: 10 - 20 minutes)

26. சர்வதோபத்ர... வியூகம்...!!! - வசுமதி

Savathopathra... Viyoogam

வானின் மின்னல் ஈட்டியாய் தன் நெஞ்சில் பாய்ந்தது போல் உணர்ந்தார் ராமக்கிருஷ்ண ஆச்சார்யா..

அனைவரையும் ஆட்டிப்படைத்தவர் தன்னை இப்பொழுது ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தவளைக் கண்டு ஆடித்தான் போனார்..

நெற்றியில் வேர்வைத் துளிகள் பூத்திருக்க தியா கொடுத்த செல் போனை வெறித்தவரின் முகத்தில் அதிர்ச்சி பாசம் கோபம் பயம் என மாறி மாறி உணர்வுகள் வந்து போய் கொண்டிருந்தது இப்பொழுது..

அதனைக் கண்ட தியா திரையில் ஒரு சேரில் கட்டிப்போட்டபடி அமர்த்தப்பட்டிருந்த இருவரைக் காட்டி,“இவங்க உங்க பசங்க சுயோதன் சுஷாஷன் தானே..??”,என்று கேட்டாள் ஏளனக் குரலில்..

“தியா யூ ஆர் கிராஸிங் யுவர் லிமிட்..”,என்றார் கோபமாக..

அதனை அலட்சியப் படுத்தியவள்,”யூ ஹேவ் கிராஸ்ட் இட் இயர்ஸ் பிபோர்..”, என்றாள் அவருக்கு மேல் குரலை உயர்த்தி..

“ஒழுங்கு மரியாதையா என் பசங்களை விட்டுடு.. இல்லைனா..”

“இல்லைன்னா என்ன பண்ணுவீங்க..??”,திமிராக..

அருகில் இருந்த சோபாவில் சாவதானமாக அமர்ந்தவர்,“பிரணதீசன் சகுந்தலா.. உங்கத் தாத்தா பாட்டி தானே..??”,என்று கேட்டார்..

“அவங்களை தூக்க போறீங்களா..??”,என்று அலட்சியமாக கேட்டவளை இப்பொழுது விழி விரித்து திகைப்புடன் பார்த்தனர் அனைவரும்..

க்ரியாவோ,”தியூ.. நம்ம தாத்தா பாட்டி..”

“ரியா அவங்க இன்னைக்கு காலை நான்கு மணிக்கே இந்தியாவை விட்டு பறந்துட்டாங்க.. நோ வரீஸ்..”

“வாட்..??”,கோரஸாய் வினவினர் ஆசார்யாவும் ரியாவும்..

“உங்கள் பாடிகார்டிகார்ட்ஸிடமிருந்து அவர்கள் எப்படித் தப்பினர் என்று தானே பார்க்குறீர்களா..??”, என்று கேள்வி கேட்டவள் விஷமப் புன்னகை ஒன்றை உதிர்த்தபடி, ”எல்லாம் உங்கள் பெரியப்பா தேவவ்ருத ஆச்சார்யாவின் மகிமை தான்..”,என்றாள் கண்ணடித்து..

“பெரிய..ப்..பா..”,என்று பல்லைக் கடித்த ராமக்ரிஷ்னரிடம்,”இன்னைக்கு நைட்டுக்குள்ள எங்க அம்மா அப்பா வந்தாகனும்.. இல்லைனா..”,என்ற தியா வ்ருதுஷிற்கு வீடியோ கால் செய்தாள்..

தியா அழைத்ததும் உடனே அதை அட்டென்ட் செய்தவன்,”இங்க எல்லாம் ரெடி தியா..”,என்றான்..

“அப்போ எங்களுக்கு எல்லாம் லைவ் காட்டலாம்ல..??”,கொஞ்சமே கொஞ்சம் குரோதத்துடன்..

உடனே மொபைலின் கேமராவை சுயோதன் சுஷாஷன் பக்கம் திருப்பினான் வ்ருதுஷ்..

அப்பொழுது தான் சற்றே மயக்கம் தெளிந்திருந்தது இருவருக்கும்..

போனில் தெரிந்த தியாவின் முகத்தைப் பார்த்து தாங்கள் வசமாக சிக்கிவிட்டோம் என்று உணர்ந்தவர்கள்,”தியா.. ஒழுங்கா எங்களை விட சொல்லு..”,என்றனர் ஆச்சார்யாவைப் போலவே திமிராக..

“உங்க அப்பா கொஞ்சம் கோப்பரேட் பண்ணா உங்களை விட்டடறோம்..”,என்றான் அவர்கள் அருகில் இருந்த வ்ருதுஷ் சுயோதனுக்கு ஒரு குத்து விட்டபடி..

“வ்ருதுஷ்..”,என்று இங்கு கத்திய ஆச்சார்யா,”அவங்களை ஒன்னும் பண்ணிடாதே..”, என்று இங்கு கத்தினார் ஆச்சார்யா..

“அவங்களை விடனும்னா இன்னைக்கு நைட்டுக்குள்ள எங்க நாலு பேரோட அம்மாவும் அப்பாவும் இங்கு வந்தாக வேண்டும்..”,என்றாள்..

தனது இயலாமையை நினைத்து காற்றில் கையை குத்திய ஆச்சார்யா சரி என்பது போல் தலை தலையசைத்து விட்டு யாருக்கோ அழைத்து அவசரமாக கட்டளைகள் விதிக்கத் துவங்கினார்..

திநிலவு அன்று ஏனோ வானில் நட்சத்திரங்களோடு போட்டி போட்டுக் கொண்டு பூமியை கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது..

கதிரவன் மறைய கூடு திரும்பும் புறாக்கள் கூட அன்று எழிலின் வீட்டுத் திண்ணையில் அன்று அங்கு நடக்கவிருக்கும் சம்பவங்களைக் காண கண்கள் விரித்து அசையாமலும் ஓசை எழுப்பாமலும் அமர்ந்திருந்தன..

“தியா.. தாத்தா பாட்டிகிட்ட நான் நேற்று காலையில் தான் பேசினேன்.. அவர்கள் வெளியில் செல்வது போல் ஏன் என்னிடம் எதுவும் சொல்லவில்லை..??”,என்று கேட்டாள் க்ரியா..

“இதெல்லாம் தேவவ்ரத ஆச்சார்யா தாத்தாவோட ப்ளான்.. ஒரு அரை மணி நேரத்திற்கு முன்னால் தான் எனக்கு தெரியும் ரியா..”

“ஓ..”

“என் மேல கோபமா ரியா..??”

“ச்சே.. ச்சே.. அதெல்லாம் ஒன்னும் இல்லை.. எனக்கு உன்னைப் பற்றி நல்லாத் தெரியும் தியூ.. நீ எது பண்ணாலும் அது எங்க எல்லாரோட நல்லதுக்கு மட்டும் தான்.. எனக்கு என்னைக்கும் உன் மேல் கோபமோ வருத்தமோ இருந்ததில்லை.. எந்த ஒரு விஷயத்திலும்..”,என்றவள் தியாவைத் தோளோடு அணைத்துக்கொண்டாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.