(Reading time: 10 - 20 minutes)

“அம்மா அப்பாவைப் பார்க்கப் போறோம்னு நினைக்கும் பொழுது எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு ரியா எனக்கு..”

“சேம் ஹியர் கேர்ல்ஸ்..”,என்ற படி உள்ளே நுழைந்தனர் விக்கியும் ரிக்கியும்..

இவர்களின் மகிழ்ச்சியைக் கண்டு பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்..

“தாங்க்ஸ் பார் எவரிதிங் தியா..”,என்று மனப்பூர்வமாக என்றான் விக்கி..

அவனை நோக்கி புன்னகைத்த தியா இருவர் முகத்தில் மறைக்கப்பட்ட எதுவோ ஒன்றை உணர்ந்து,“என்னாச்சு இரண்டு பேருக்கும்..?? ஏன் உங்க இரண்டு முகம் சரியில்லாம இருக்கு..??”,என்று கேட்டாள்..

“எங்க பெரியப்பாவை நினைத்துத் தான்..”,என்று பெருமூச்சு விட்ட ரிக்கி,”எங்கனால டைஜெஸ்ட் பண்ணிக்கவே முடியல அவர் பண்ணது..”,என்றான் கண்களை எங்கோ வெறித்து பார்த்தபடி..

“ப்ச்.. விடுங்க ரிக்கி.. அதான் எல்லாம் குட் என்டிங்கா முடியப் போகுதே.. ஜஸ்ட் ரிலாக்ஸ்..”,என்றாள் க்ரியா..

இவர்களின் மகிழ்ச்சியின் ஆயுள் முழுதும் நிலைத்து நிற்குமா...??

ற்று நேரத்திற்கெல்லாம் வாயிற் பக்கம் கார்கள் வந்து நிற்கும் சத்தம் கேட்க அனைவரும் ஒரு பரபரப்புடன் அங்கு விரைந்தனர்..

முதல் காரிலிருந்து தியா மற்றும் க்ரியாவின் தாய் தந்தையர் இறங்க கண்களில் நீருடன் இருவரையும் கட்டிக்கொண்டனர் தியாவும் க்ரியாவும்..

இரண்டாம் காரிலிருந்து ரிக்கி விக்கியின் தாய் தந்தையர் இறங்க அங்கு ஒரு பெரும் பாசப் போராட்டம் நிகழ்ந்து முடிந்தது..

எழிலின் தாய் வந்தவர்களுக்கு ஆர்த்தி எடுக்க மனம் நிறைய மகிழ்ச்சியுடம் நிறைவிடனும் உள்ளே நுழைந்தனர் அனைவரும்..

நீண்ட வருடங்களுக்குப் பிறகு அவர்கள் கூடியிருக்க அங்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மட்டுமே நிரம்பி வழிந்தது..

அனைவரும் தங்களது தனி உலகத்திற்குள் நுழைந்திருக்க தியா ஆச்சார்யாவை அடைத்து வைத்திருந்த அறைக்கு சென்றாள்..

“உங்க பசங்க இரண்டு பேரும் உங்கள் வீட்டிற்கு சென்று விட்டனர்.. நீங்களும் உங்கள் வீட்டிற்கு கிளம்பலாம்.. எங்கள் அப்பா அம்மா வந்த வாகனம் உங்களுக்காய் தயாராக இருக்கிறது..”,என்றாள்..

அவளைக் கண்ட ஆச்சார்யா வஞ்ச புன்னகை ஒன்றை உதிர்த்து,”உங்களது நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைவடையும் நேரம் நெருங்கிவிட்டது தியா.. என்னையே நீ பகைத்து கொண்டிருக்கிறாய்.. அதற்கு இனி நீ அனுபவிக்க போகிறாய்..”,என்றார்..

“இதை விட நாங்கள் நிறையா பார்த்துட்டோம்..”,என்றவள் கப்போர்டில் இருந்த ஆச்சார்யாவின் பொருட்களை எடுத்து அவர் கையில் திணித்து,”கெளம்புங்க.. நேரமாச்சு.. இப்போ ஸ்டார்ட் பண்ணா தான் நாளை மதியம் அட்லீஸ்ட் உங்கள் வீடு போய் சேரமுடியும்..”,என்றாள் ஏளனமாய்..

அவளது ஸ்லாங் அவரை இன்னும் உசுப்பேற்றி விட,”யூ ஆர் கோயங் டூ பே பார் திஸ்..”,என்றார் ஆங்காரமாக..

அதை காதில் வாங்காதது போல்,”முன் வாசல் வழியாக செல்லவேண்டாம்.. உங்கள் மேல் அனைவரும் கொலைவெறியில் உள்ளனர்..”,என்றவள் அவரின் சிவந்த முகம் கண்டு,”உங்களை பின் வாசல் வழியா போக சொல்லல சார் சைட் வாசல் வழியா போங்க..”,என்று நக்கலாக சொன்னவள் எழிலின் வீட்டில் வேலை பார்க்கும் ஒருவரை அழைத்து ஆச்சார்யாவிற்கு வழி காட்ட சொன்னவள் தன் தாய் தந்தையர் இருந்த அறை நோக்கி சென்றாள்..

லை தாயின் மடியிலிருக்க கால்கள் இரண்டும் தந்தையின் மடியில் வைத்து இருவரிடமும் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள் ரியா..

“ரியூ.. நீயே எல்லா இடத்தையும் ஆக்குப்பை பண்ணிக்கிட்டா நான் எங்க படுக்க..”,சிணுங்கலாக ஒலித்த தியாவின் குரலில் அவளை மூவரும் அட் அ டைம் நிமிர்ந்து பார்த்தனர்..

மூவரையும் பார்த்து கண்ணடித்து சிரித்தவள் ஓடிச் சென்று அவர்களைக் கட்டிக் கொண்டு ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்..

ஒரு நிமிடம் தீயாய் தகித்தவள் மறுநிமிடம் பனியாய் அன்பில் அனைவரையும் கரைத்தவள் இன்று தனது பதிமூன்று வருட இறுக்கத்தை தனது இறுகிய அணைப்பிலும் மடை திறந்த வெள்ளமாய் தனது கண்ணீரிலும் புதைக்க முயன்றாள்..

அவளுடன் இல்லையென்றாலும் அவளின் உணர்வுகளை உணர்ந்த க்ரியா, தியாவின் ஒவ்வொரு தேம்பளுக்கும் அவளின் தலையைக் கோதி சமாதானப் படுத்த முயன்றாள்..

நிற்காமல் சுமார் அரை மணி நேரம் அழுதவளின் கையை மென்மையாய் வருடிய நரசிம்ஹன்,”குட்டிமா..”,என்றார் அழுத்தமாக..

தேம்பலும் விசும்பலும் இன்னும் கொஞ்சம் மிச்சம் இருந்தாலும் தன் தந்தையின் கம்பீர குரல் கேட்டு எப்பொழுதும் போல் புன்னைகை பூத்தது பெண்ணுக்கு..

வேகமாய் தன் கண்களைத் துடைத்துக் கொண்டவள் சிறு வயதில் கூறுவது போல் இன்றும்,”நான் நரசிம்ஹனோட பொண்ணு.. சிங்கக்குட்டியாக்கும்.. எதுக்கும் என்னைக்கும் கலங்க மாட்டேனாக்கும்..”,என்றாள் அழுத்தமாக..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.