(Reading time: 11 - 22 minutes)

தொடர்கதை - காதலான நேசமோ - 03 - தேவி

Kaathalana nesamo

ஹாய் பிரெண்ட்ஸ்,

போன எபிசொடலே மித்ராவிற்கு கற்றல் குறைபாடு இருப்பதாக கூறி இருந்தேன். அதை பற்றின விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் நார்மலாக தான் இருப்பார்கள். மிக நெருங்கியவர்க்கே அந்த குறைபாடு தெரிய வரும். அப்படி ஒரு பாத்திராமாக தான் மித்ராவை உருவாக்கியுள்ளேன்.

தெளிவாக பேசும் குழந்தைகள் கூட தான் கிரகித்துக்கொண்டதை வெளிப்படுத்த முடியாமல் போவதுதான் கற்றல் குறைபாடு. இதை லேர்னிங் டிசபிலிட்டி எனவும் சுருக்கமாக எல்.டி என்றும் மருத்துவத்துறையினர் பெயரிட்டுள்ளனர். எல்.டி யின் பாதிப்பு மூளை கட்டமைப்பில் ஏற்படும் கோளாறு காரணமாகத்தான் குழந்தைகளின் புரிந்து கொள்ளும் திறனில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினைக்கு உள்ளான குழந்தைகள், படு திறமைசாலியாக இருப்பர்; சில குழந்தைகள் திறமை குறைவாக இருப்பர். எல். டி பாதித்த குழந்தைகள் சிலருக்கு எந்த ஒரு விஷயத்தையும் புரிந்து கொள்ளத் தெரியாது; அது போல, தெரிந்த விஷயத்தை ஒன்றுடன் ஒன்று சேர்த்து புரிந்து கொள்ளவும் முடியாது. சில சமயம், ஒரு அரிய விஷயத்தைப் புரிந்துக் கொள்வதைப் பார்த்து வியப்பாக இருக்கும்; அதையே எழுதும் போதும், திரும்பச் சொல்லும் போதும் மந்தத் தன்மை இருக்கும். படிக்கும் போதும், எழுதும் போதும், அப்படி கற்ற விஷயத்தை, கணித்ததை மீண்டும் சோதித்துப் பார்க்கும் போது, அறவே முடியாத நிலை தான் எல்.டி.,

சைந்தவி , சுமித்ரா இருவருக்கும் சில மாதங்களே வயது வேறுபாடு.. ராம் வீட்டில் எல்லோருமே அவர்களின் பிசினஸ் சம்பந்தப்பட்ட படிப்பே படிக்க, சுமித்ராவோ அவர்களிடமிருந்து வேறுபட்டு மருத்துவ துறை தேர்ந்தேடுத்தாள்.

ஆரம்பத்தில் அஸ்வின் ஷ்யாம் செய்வதையே செய்து கொண்டு இருந்தவன், ஒரு கட்டத்தில் தன்னுடைய தங்கைக்காக மருத்துவம் படிக்க கிளம்பினான்.

சைந்தவிக்கு சற்று வித்தியாசமாக உணவு கட்டுப்பாடு மற்றும் திட்டமிடல் பற்றிய ஆர்வம் இருந்ததால் ஹோம் சயின்ஸ் எடுத்து இருந்தாள்.

மித்ராவிற்கும் தியரி எழுதவதை விட செய்முறை பயிற்சியாய் படிப்பது சற்று இலகுவாக இருக்கவே, அது அதிகம் உள்ள ஹோம் சயின்ஸ் பற்றி மற்றவர்கள் பரிந்துரை செய்ய அவளும் அதையே எடுத்தாள்.

காலேஜ் உள்ளே சென்ற மித்ரவிந்தா , அவளுக்காக காத்து இருக்கும் சைந்தவியை கண்டதும் அவளின் அருகே சென்றாள்.

“ஹாய் சந்து..”

“வாடி.. மத்து.. ஏன் இன்னிக்கு லேட்.. ? இன்னிக்கு  ஷ்யாம் அண்ணா வந்த மாதிரி இருக்கு?”

“ம்ச்ச்.. ஆமாமா..”

“என்னடி இவ்ளோ சலிப்பு?”

“நான் மட்டும் ஏன் இப்படி இருக்கேன்?”

“லூசாபா நீ? நேத்து அந்த குரங்கு கூட்டம் ஏதோ சொல்லுச்சுன்னு காலையிலேயே அண்ணன் கிட்டே மேட்டூர் டேம் திறந்து விட்டியாக்கும்?”

“அந்த கும்பல் சொன்னதுக்காக இல்லை.. நேத்திக்கு போய் கூகிள் சர்ச் பண்ணி பார்த்தேன். அப்புறம் தான் எனக்கு என்ன பிரச்சினைன்னு புரிஞ்சது. ரொம்ப அப்செட் ஆயிட்டேனா.. அதான் அத்தான வர சொன்னேன்”

“கூகிள்லே பிரபாஸ் வரலாறு, இஷ்க் பாஷ் ஹீரோ நகுல் மேத்தா பத்தி சர்ச் பண்ணினோமான்னு இல்லாம, தேவை இல்லாததுக்கு எல்லாம் கூகிள் சர்ச் செய்யுங்கடி. இப்போ என்ன நாம யுனிவெர்சிட்டி ரேங்க், கோல்ட் மெடல் வாங்கவா படிக்கிறோம்.. நாம படிக்கிறது நமக்குதான் புரியுதா?”

“ச்சு.. அது இல்லடி.. என்னை தத்தின்னு சொன்னாங்கன்னு வருத்தபடலடி. ஆனா ஆடிசம் பிரச்சினை உள்ளவன்னு சொல்லும்போது கஷ்டமா இருந்தது..”

“அட லூசே. இவளுங்க என்ன டாக்டரா ? உனக்கு என்ன பிரச்சினைன்னு சொல்றதுக்கு.?

அதான் அத்தான் கிட்டே பேசி தெரிஞ்சிகிட்டேன்.”

“அதுக்கு அண்ணா என்ன சொன்னங்க?”

“கொஞ்சம் பிரச்சினை இருக்குதான். ஆனால் பயப்படுற அளவு இல்லைன்னு சொன்னங்க”

“அப்புறம் ஏன் மூஞ்சிய மூஞ்சி புக்லே வர அங்க்ரிபர்ட் எமொஜி மாதிரி வச்சுருக்க ? ப்ரீயா விடு கண்ணு”

“சரி வா. கிளாஸ் போகலாம்”

“ஆமாம்.. பர்ஸ்ட் ஹவர் அந்த மந்தாகினி கிளாஸ்.. என்னவோ தான் ஒரு சமையல் ராணி மல்லிகா பத்ரிநாத்ன்னு நினைப்பு அந்தம்மாவுக்கு.. உருளைகிழங்கு வேக வைப்பதையும், கீரை கடையரதையும் சொல்லி கொடுத்துட்டு புதுசா ஏதோ சொல்லிகொடுத்த மாதிரி பில்டப் பண்ணிட்டு இருக்கும்.”

“ஹேய்.. ஏண்டி இப்படி மரியாதை இல்லாம பேசற? அவங்க சொல்லிக் கொடுக்கிறதும் ஏதோ ஒரு விதத்தில் நமக்கு உபயோகபடுது தானே”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.