(Reading time: 11 - 22 minutes)

சுமியும், சைந்தவியும் “ஒரு நாளாவது உங்க சாப்பட்டுலேர்ந்து விடுதலை கொடுங்களேன்” என்று கத்தினர்.

மித்ராவோ, “ஏய். ஏண்டி உங்களுக்கு இந்த கொழுப்பு? அத்தை ஷாப்பிங் சீக்கிரம் முடிஞ்சதுன்னா இங்கேயே வந்துடறோம் “ என்று கூறினாள்.

ஷ்யாம் காரோடு அருகில் வந்தவன் “மா.. இந்த புள்ளபூச்சி சொல்றத நம்பி சாப்பாடு வைக்காதீங்க.. அவளுங்க ஒருத்திக்கு செலக்ட் செய்யவே மூணு மணி நேரம் ஆக்குவாங்க.. இதில் ரெண்டு பேருக்கு செலக்ட் செய்யணும், போதாகுறைக்கு நம்ம வீட்டு கொசுறு ஒன்னு செலக்ட் செய்யும். இன்னைக்கு நைட் சாப்பாட்டுக்கவது வரோமன்னு பாருங்க. அனேகமா நாங்க வெளியில் தான் சாப்பிடுவோம் “ என்று விட்டு

“தாய்குலங்களே... தங்கள் திருப்பாதங்களை என்னுடைய மகிழ்வுந்தில் பதித்து அமர்வீர்களாக “ என்று நாடக வசனம் பேசினான்.

“ஹ்ம்ம். அருள் புரிந்தோம் பக்தா” என்று கோரசாக மூன்று பேரும் கூற, அவர்கள் தலையில் தட்டினான் ஷ்யாம்.

அவர்கள் கார் கிளம்பவும், மைதிலி உள்ளே வந்தவள்

“ராம் பசங்க ஒன்னும் சாப்பிட வர மாதிரி தெரியல” என்று கூறினாள்.

“விடு மைதிலி.. அவங்க என்ஜாய் பண்ணட்டும்.. “ என்றவன்

“முரளி, சந்தோஷ் நீங்க இங்கியே இருந்துருங்க.. எல்லோரும் இங்கேயே சாப்பிட்டு பேசிட்டு இருக்கலாம். அவங்க வந்ததும் வீட்டுக்கு போகலாம்” என்றான்.

சந்தோஷ் “டேய் ராமா. நாமளும் ஒரு சேஞ்க்கு எங்கியாவது வெளியில் போகலாம்டா” என

சற்று யோசித்தவன் “சரி. ஒரு ஹால்ப் அன் ஹவர் கொடுங்க.. நான் ரெடி ஆகி வருகிறேன். நாம போட் கிளப் வரைக்கும் போய் வரலாம்.” என்று முடிவு செய்தான்.

சொன்னபடி அரை மணி நேரத்தில் வந்தவன், அவர்கள் இருவரின் காரை வீட்டில் விட்டு விட்டு, தன்னுடைய ஆடி காரில் எல்லோரையும் அழைத்து சென்றான்.

ஷாப்பிங் மாலில் மூவரும் புடவை தேர்ந்தேடுப்பதற்குள் ஷ்யாமை ஒரு வழியாக்கி விட்டு இருந்தார்கள்.

ஒருத்தி எடுத்த டிசைனில் வேறு வேறு கலர் கேட்க, இவர்கள் கேட்ட கலர் டிசைனில் இல்லை. கலர் இருந்தால் டிசைன் இல்லை. இரண்டும் பொருந்தி வந்தால் துணி மெடீரியல் நன்றாக இல்லை.

இப்படி ஒவ்வொன்றாக தட்டி கழித்து சைந்தவியும், சுமியும் செலக்ட் செய்து முடிக்க, மித்ராவோ இன்னும் திணறிக் கொண்டு இருந்தாள். அவளின் திணறலை பார்த்த ஷ்யாம், மெதுவாக அவளின் தேவையை கேட்டு அதற்கேற்றார் போல் புடவை எடுத்து போட சொல்லி விற்பனையாளரிடம் சொல்ல, அதில் ஒன்றை எடுத்து ஷ்யாமின் அபிப்ராயம் கேட்டாள். அவளுக்கு அது நன்றாக பொருந்துவதாக கூற, அதையே எடுத்தாள் மித்ரா.

போட் கிளப் சென்ற பெரியவர்கள் அனைவரும் போடிங் போய் விட்டு, சற்று நேரம் அமர்ந்து இருந்தவர்கள் சாப்பிட அமர்ந்தனர். சாதரணாமாக பேசிக் கொண்டு இருந்தவர்கள், முரளி ராமை அழைத்தான்.

“ராம் மச்சான்”

“சொல்லுங்க முரளி “

“நம்ம மித்ராவிற்கு கல்யாணத்துக்கு பாக்கலாமான்னு யோசிக்கிறோம்”

“நல்ல விஷயம் தான். ஆனால் அவள் படிப்பு இன்னும் முடியலையே”

“இது கடைசி செமஸ்டர் தானே. எக்ஸாம் முடிச்சுதான் அவகிட்டே பேச போறோம்”

“அப்போ சரி.. பையன் எப்படி பார்க்க போறீங்க மாப்பிள்ளை. மேட்ரிமோனி மூலமாவா இல்லை தரகர் கிட்டே சொல்லியா?

“இப்போ ஊரில் இருந்து ஒரு வரன் வந்துருக்கு மச்சான். பையன் படிச்சு அங்கியே பிசினஸ் பண்ணிட்டு இருக்கான். தூரத்து சொந்தம் தான். அவ எக்ஸாம் முடிஞ்சதும் பொண்ணு பார்க்க வர சொல்லலாம்ன்னு இருக்கோம்”

“சரிதான்.. பையன பத்தி குடும்பத்தை பத்தி எல்லாம் விசாரிச்சீங்களா?

“தெரிஞ்ச குடும்பம் தான். பையனும் நல்ல பையன்தான். “

“அப்போ நல்லது.. எக்ஸாம் முடிஞ்சதும் மித்ராவை கேட்டுட்டு மேற்கொண்டு ஏற்பாடுகள் செய்யலாம். அதுவரைக்கும் பசங்க கிட்டே சொல்ல வேண்டாம். யாரவது வாய் தவறி சொல்லிட்டாங்கன்னா மித்ரா படிப்பு பாதிக்கப்படலாம்.” என்று ராம் கூற, எல்லோருமே ஒத்துக் கொண்டனர்.

மைதிலி மட்டும் சற்று கவலையோடு சபரியிடம் “மித்ராக்கு அந்த இடம் சரிபட்டு வருமான்னு நல்லா யோசிச்சுக்கோ சபரி. அப்படி ஏதாவது நெருடலா தோணினா , கொஞ்சம் பொறுமையாவே அவளுக்கு நாம வரன் பார்க்கலாம்” என்றாள்.

“ஆமாம் அண்ணி.. நானும் அப்படிதான் யோசிக்கிறேன்.. இருந்தாலும் முதல் முதலில் வரும் சம்பந்தம் தட்டி விட்டதா இருக்க வேணாமேன்னு தான் வந்து பார்க்க சொல்லலாம்னு ஒரு எண்ணம்” என்று கூறினாள்.

“அதுவும் சரிதான் சபரி” என்று முடித்தாள் மைதிலி.

இவர்களின் எண்ணம் நிறைவேறுமா?

தொடரும்

Episode # 02

Episode # 04

{kunena_discuss:1187}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.