(Reading time: 10 - 20 minutes)

அவள் தன்னை மீட்டுக் கொண்டாள் என்றுணர்ந்த க்ரியா,”ஆச்சார்யா எங்க தியா..??”,என்று கேட்டாள் இறுக்கத்துடன்..

“அவர் ஆன் தி வே டூ சென்னை.. அப்பா அம்மா வந்த கார்ல கிளம்பிட்டார்..”,என்றாள் தியா கூலாக..

“எதுக்கு தியா அவரைப் போக விட்ட.. ஹி இஸ் அ பக்கா கிரிமினல்..”

“ஐ நோ ரியா.. வ்ருதுஷ் தான் அவரை அங்கு அனுப்ப சொன்னான்.. அவர் அங்கு கால் வைத்தவுடன் அவரை அரெஸ்ட் செய்ய போலிஸ் காத்திருக்கிறது..”

“ஆனால் டாட் அண்ட் மாம் வந்த கார் ஆச்சார்வோட கார்..”

“அவர் போகும் காருக்கும் முன்னும் பின்னும் வ்ருதுஷோட ஆளுங்க போறாங்க.. சோ நோ வரீஸ்..”,என்றாள்..

தியாவிடம் ஏதோ கேட்க வந்த ரியாவைத் தடுத்த சிம்ஹன்,”கிருஷ்ணனைப் (ராமகிருஷ்ண ஆச்சார்யா) பற்றிய பேச்சு இப்போ வேண்டாம்.. தியா நீங்க நாங்க பாதியில் விட்ட ப்ராஜெக்ட்டை பண்றதா எழில் சொன்னான்.. அதைப் பற்றி உங்க எல்லார் கிட்டயும் முக்கியமா சக்ரவர்த்தி ஹம்சன் இவங்க இரண்டு பேர் கிட்டயும் டிஸ்கஸ் பண்ணனும்..”,என்றார்..

“இப்போ தான் தப்பிப் பொழச்சு வந்திருக்கோம்.. அதுக்குள்ள..”,என்று ஆரம்பித்த வேதாவை நிறுத்தியவர்,”இனி வரும் காலம் முழுதும் நாம் நிம்மதியா இருக்கணும்னா இந்த விஷயத்தை முடிச்சே ஆகணும்..”,என்று அவர் வாயை அடித்தார் நரசிம்ஹன் நரசிம்மனாகவே ஒரு வித ஆக்ரோஷத்துடன்..

பால் நிலவு காய தியாவைத் தவிர அனைவரும் மொட்டை மாடியில் காத்திருந்தனர்..

“எலி.. இந்த நேரத்தில் தியா எங்க போயிட்டா..??”,எழிலின் கையை சுரண்டிய படி கேட்டாள் மயா..

“தெரியல மயா.. இங்க என்ன நடக்குதுன்னு ஒன்னுமே புரியல..”

“டேய் எலி.. தியா எங்கன்னு தானே டா நான் கேட்டேன்..?? நீ என்னடான்னா சம்பந்த சம்பந்தமே இல்லாமல் உளறுற..??”,கடுப்பாக..

“இங்க நடக்கறது அப்படி இருக்கு..”,என்றவன் ரியாவிடம் திரும்பி,”உன் உடன்பிறப்பு எங்கே..??”,என்று கேட்டான்..

“அவள் இந்த ப்ராஜெக்ட் பத்தி கலெக்ட் பண்ண டீட்டெயில்ஸ் அப்புறம் அந்த மேப் எல்லாத்தையும் எடுத்துட்டு வரப் போயிருக்கா எழில்..”

“ஓ.. ஆமா வ்ருதுஷ் கிளம்பியாச்சா சென்னையில் இருந்து..??”

“ஆச்சார்யாவை அரெஸ்ட் பண்ண ஏற்பாடு பண்ணிட்டு பைவ் ஹவர்ஸ்க்கு முன்னாடியே கிளம்பிட்டதா சொன்னான்..இப்போ எங்க வந்திருக்கான்னு கேக்கறேன்..”,என்றவள் தனது போனை எடுத்துக் கொண்டு சற்று தள்ளிப் போனாள்..

எப்படியோ எல்லாம் நல்ல படியா முடிஞ்சா சரி என்று மனதில் நினைத்த எழில் ரியா யோசனையுடன் திரும்பி அவர்கள் அருகில் வருவது கண்டு,”என்னாச்சு க்ரியா..?? எனி ப்ராப்ளம்..??”,என்று வினவினான்..

“தெரியலை..”

“தட் மீன்ஸ்..”

“வ்ருதுஷ் போனைத் தொலைச்சுட்டான் போல.. அவனுக்கு கூப்டப்போ ஒருத்தவங்க அட்டென்ட் பண்ணி போன் கீழ கிடந்ததாகவும் யாரோடதுன்னு தெரியாம அவங்க எடுத்து வெச்சிருக்கரதாகவும் சொன்னங்க..”,என்றாள் குழப்பமாக..

“இதில் என்ன குழப்பம் தியா..??”

“கார்ல ட்ராவல் பண்ணும் பொழுது டெஸ்ட்டினேஷன் ரீச் பண்ற வரை அவன் வண்டியை எங்கும் நிறுத்த மாட்டான்.. அப்புறம் எப்படி எங்க போனை மிஸ் பண்ணுனான்.. அதான் ஒன்னும் புரியல..”

“போன் அட்டென்ட் பண்ணவங்க கிட்ட கேட்ருக்கலாமே..??”

“அதுக்குள்ள கால் கட் ஆகிடுச்சு.. திருப்பி கூப்டா ஸ்விட்ச் ஆப்னு வருது..”,என்றாள் முடிச்சுடனேயே..

“டென்ஷன் அடிக்காதீங்க ரியா.. மே பி ஏதாவது எமேர்ஜென்ஸிக்காக காரை நிறுத்திருக்கலாம்.. அப்போ போனை மிஸ் பண்ணிருக்கலாம்..”,என்றாள் மயா..

மயாவின் கூற்றில் முழுவதும் சமாதானம் ஆகாவிட்டாலும் ஏனோ தானோ வென்று தலையை அசைத்து வைத்தவள் தன் தந்தையின் அருகில் நின்று கொண்டாள் அமைதியாகவும் சஞ்சலமாகவும்..

அதே நேரம் தனது தந்தை கேட்டவற்றை எடுத்துக் கொண்டு மொட்டை மாடி வந்த தியாவிற்கு ஒரு வீடியோ கால் வந்தது..

வெறும் நம்பர் மட்டும் டிஸ்ப்ளே ஆனதால் யோசனையுடன் அதை அட்டென்ட் செய்தவள் அதில் வ்ருதுஷ் ஏதோ ஒரு கட்டடத்தின் மேல் நின்று தள்ளாடிக் கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சியாய் வ்ருதுஷ் என்று கத்தினாள் முகத்தில் வேர்வை பொங்க..

வியூகம் வகுக்கலாம்...

Episode # 25

Episode # 27

{kunena_discuss:1111}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.