(Reading time: 9 - 18 minutes)

27. சர்வதோபத்ர... வியூகம்...!!! - வசுமதி

Savathopathra... Viyoogam

நிலவு மகள் வானை அலங்கரித்திருக்க தியாவின் பெற்றோரைக் காண ஆவலாக விரைந்து கொண்டிருந்தான் வ்ருதுஷ்..

எவ்வளவு வேகமாக காரை ஓட்டமுடியுமா அவ்வளவு வேகமாய் செலுத்திக்கொண்டிருந்தான் அதை..

பிடித்த பாடல்கள் பின்னிசைப் பாடிக் கொண்டிருக்க அதனுடனேயே பாடியபடி பயனிதவனின் காரின் முன் வந்து வீழ்ந்தான் ஒரு சிறுவன்..

கிரீச்.. மூச்சு சற்றே நின்று துடித்தது வ்ருதுஷுக்கு..

காரை விட்டு இறங்கி அச்சிறுவனிடம் விரைந்தவன் அவனை எழுப்பி,”உனக்கு ஒன்னும் ஆகலையே..??”,சற்றே பதற்றத்துடன்..

இல்லை என்று தலையசைத்த சிறுவனைக் கண்டு இதயத் துடிப்பு சீரானாலும் அடுத்த நொடி பிறந்தது மூக்கின் மேல் கோபம்..

பிள்ளையை நடுரோட்டில் விளையாட விட்டிருக்கும் அவன் பெற்றவர்கள் மீது.. அவர்களின் பொறுப்பற்ற தன்மையை நினைத்து..

“உங்க அப்பா அம்மா எங்கேப்பா..”,கோபத்தை சிறுவனிடம் காட்டாமல் இறுக்கத்துடன் கேட்டான் வ்ருதுஷ்..

“அவங்க..”,என்று தொடங்கிய சிறுவனின் பதிலை மேலும் கேட்பதற்குள் வ்ருதுஷின் பின் மண்டையில் விழுந்தது பலமான ஓர் அடி..

கூடவே கையில் ஏற்றப்பட்ட போதை மருந்தின் விளைவால் விளையும் மயக்கமும் போதையும்..

நினைவு தப்பி மயங்கி கீழே வீழ்ந்தான் துப்பறிவாளன்..

முழுமையடையா அக்கட்டிடம் நிலவொளியில் பூத் பங்களாவை போல் காட்சியளித்தது..

அதன் மொட்டை மாடியில் இதோ என்னை சுட்டி விரலால் தொட்டாலே கீழே விழுந்துவிடுவேன் என்பது தள்ளாடிக் கொண்டிருந்தான் வ்ருதுஷ்..

அவனது தள்ளாட்டத்தை இரசித்தபடி ஒரு திண்டின் மேல் அமர்ந்திருந்தவர் தனது போனை எடுத்து தியாவிற்கு வீடியோ கால் செய்தார்..

தியா போனை எடுத்து அதில் தெரிந்த வ்ருதுஷைக் கண்டு கத்தியதும் மறுமுனை அகோர சிரிப்பொன்றை உதிர்த்தது..

அதனைக் கேட்க சகிக்காது, “யா..ரது..??”, சற்று கலவரதுடனேயே கேட்டவள் பதில் ஏதும் வராததால், “வ்ருதுஷ்.. வ்ருதுஷ்..”, என்று உரக்க கத்தினாள்..

“ஏய்.. சும்மா சும்மா வ்ருதுஷ் வ்ருதுஷ்னு கத்தாதே டீ.. காத்து வலிக்குது..”, என்று விட்டு front கேமை ஆன் செய்தவரது முகத்தைக் கண்டு அதிர்ந்து போனாள் தியா..

“நீ..ங்..க..??”

“அடையாளம் தெரியலையா தியா என்னை..??”,என்று அவளுக்காக பரிதாப படுவது போல் நொச்சுக்கொட்டியவர், “நான் தான் சீதாலட்சுமி.. தி கிரேட் ராமகிருஷ்ண ஆச்சார்யாவின் துணைவியார்..”

தியா மட்டும் அல்லாது சுற்றி இருந்த மற்ற அனைவரும் அதிர்ச்சியடைந்தனர் இப்பொழுது..

 “பெரியம்மா.. என்ன பண்ணிட்டு இருக்கீங்க..??”, கோபத்துடனும் நம்பமுடியா பாவத்துடனும் கேட்டான் ரிக்கி..

“பார்த்தா தெரியலையா மகனே.. என் பசங்களை சிறை வெச்சவனை கொல்லப்போறேன்..”, என்றார் ஆங்காரமாய்..

“பெரியம்மா அவன் பாவம்.. விட்டுடுங்க அவனை..”,கோபத்தை அடக்கியபடி கூறிய  விக்கியை துச்சமாக பார்த்தவர் வ்ருதுஷை ஒரு தள்ளு தள்ளினார்..

வ்ருதுஷ் மாடியில் இருந்து கீழே தள்ளப் பட்ட அதே நேரம் சென்னையில் கைது செய்யப்பட்டார் ராமகிருஷ்ண ஆச்சார்யா..

இரண்டு வாரங்களுக்குப் பிறகு..

நாசியில் நுழைந்த பச்சிலைகளின் மனம் உடலுக்கு புது தெம்பைக் கொடுக்க கண்களை லேசாக திறந்தான் வ்ருதுஷ்..

வரிசை வரிசையாக அன்று நடந்த சம்பவங்கள் அவன் நினைவலைகளை சுறுசுறுப்பாக்க அவசரமாய் எழ முயன்றான்..

அதற்குள் அவன் தோள்களை லேசாகப் பிடித்து அவனைத் தடுத்த அகிலன்,”வ்ருதுஷ்..அமைதியாக இரு..”,என்று கட்டயிட்டுவிட்டு அவனை மீண்டும் படுக்கவைத்தான்..

அகிலனின் குரல் கேட்டு சற்றே நிதானப் பட்டவன் மெதுவாக..மிக மெதுவாக தன் கண்களைத் திறந்தான்..

அகிலனுடன் ஒரு பெரியவர் அமர்ந்திருப்பது கண்டு யாரிவர் என்பது போல் கண்களால் கேள்வி எழுப்பினான் அகிலனிடத்தில்..

“இவர் தேவவ்ரத ஆச்சார்யா.. ராமகிருஷ்ண ஆச்சார்யாவின் பெரியப்பா..”

அவருக்கு கசந்த முறுவலை பரிசளிதவன் அகிலனிடம் திரும்பி,”இது என்ன இடம் அகிலா..?? நான் எப்படி இங்கே வந்தேன்...??”,குழப்பமாய் கேட்டான்..

“இது செழுவூர் வ்ருதுஷ்..”,ஆசார்யாவிடமிருந்து பதில் வந்தது வ்ருதுஷிற்கு..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.