(Reading time: 9 - 18 minutes)

“செழுவூரா..?? இங்கே நான் எப்படி..??”

“நான் தான் உன்னைக் கொண்டு வந்தேன்..”,என்றது அகிலன்..

“மற்றவர்கள் எல்லாம் எங்கே..?? என்னைத் தேடவில்லையா..??”

லேசாக சிரித்த அகிலன்,”உன்னைத் தான் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர்..”, என்றுவிட்டு அவன் நாசிக்கு அருகில் ஒரு பச்சிலையை வைத்தது..

அதிலிருந்து வெளிவந்த சுகந்தமான வாசனை வ்ருதுஷை மீண்டும் அழ்ந்த ஒரு மயக்கத்தில் ஆழ்த்தியது..

“எதுக்கு அகிலா இப்பொழுது இவனுக்கு மயக்க மருந்து கொடுத்த..??”,இது தேவவ்ரத ஆச்சார்யா..

“இதை அளித்திருக்கவில்லையென்றால் நம்மால் அவன் கேள்விகளுக்கு பதில் அளித்திருக்க முடியாது.. அதுவும் இல்லாமல் இவன் உடல் தேற இந்த மயக்கம் தேவை.. இன்னும் ஒரு பதினெட்டு மணி நேரம் உறங்குவான்..”,என்ற அகிலன்,”நீங்கள் இங்கிருந்து இவனைப் பார்த்துக் கொள்ளுங்கள்.. எனக்கு சில வேலைகள் பாக்கி உள்ளது..”,என்ற அகிலன் சிறகு விரித்து வானில் பறக்கத் துவங்கினான்..

சிங்கார சென்னை..

டல் அலையின் சீற்றத்தைப் போல் சீறிக் கொண்டிருந்தது தியாவின் மனம்..

ஆழிப் பேரலையில் அடித்து ஓய்ந்தது போல் அவள் தோற்றம் இருந்தாலும் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலை போல் சீறிக்கொண்டிருந்தது அவள் உள்ளம்..

அன்று சீதாலட்சுமி போனை வைத்தவுடன் வேதனையும் குற்றவுணர்வும் மாறி மாறி அவளது நெஞ்சை கிழிதெறிந்தது..

தன்னால் தான் அவனுக்கு இந்நிலைமை என்று புலம்பியவளை அவள் தந்தையால் கூட சமாதானப் படுத்த முடியவில்லை..

எழிலின் நம்பனின் மூலம் தியாவிற்கு வந்த வீடியோ கால் நம்பரை ட்ரேஸ் செய்தவர்கள் அந்த இடத்தை அடைய மறு நாள் மாலையாகிப் போனது..

அந்த பாழடைந்த கட்டிடத்தின் உயரம் கண்டு மிரிண்டு போனாலும் வ்ருதுஷிற்கு ஒன்றும் நேர்ந்திருக்காதென்ற அல்ப நம்பிக்கையுடன் அந்தக் கட்டிடத்தையும் அதனை சுற்றியும் சள்ளடையிட்டனர்..

அங்கு வ்ருதுஷ் இருந்ததற்கான எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் போக பயம் பிடித்துக் கொண்டது அனைவருக்கும்..

சீதாலட்சுமியும் தலைமறைவாகியிருக்க வ்ருதுஷ் உயிருடன் இருக்கானா இல்லையா என்பதும் கேள்விக் குறியாகி இருக்க கடந்த இரண்டு வாரங்களாக அவர்கள் படும் அவஸ்த்தை நரகம் தான்..

 “தியா.. இன்னும் இவ்வளவு நேரம் இங்க நிக்கறதா உத்தேசம்..??”,என்று கடலை வெறித்த வண்ணம் ஒரு மணி நேரமாய் நின்றுகொண்டிருந்த தியாவின் தோளை தட்டியபடி கேட்டான் எழில்..

தனது நினைவுகளிலிருந்து வெளிவந்தவள்,”என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியல எழில்.. சீதாலட்சுமி ஆன்ட்டி இப்படிப் பண்ணுவாங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைத்து பார்த்ததில்லை..”

“நானும் தான்..”,என்றவள்,”வ்ருதுஷின் நிலைமைக்கு சீதாலட்சுமி ஆன்ட்டியைத் தவிர்த்து இன்னொருவருக்கும்பங்கிருக்குமோ எனத் தோன்றுகிறது..”

“இன்னொருத்தருக்கா யாருக்கு..??”

“சுஜன் அண்ணா..”

“சுஜன் அண்ணாவா..??”

ஆம் என்பது போல் தலையசைதவள்,“செழுவூரிலேயே அவரை நோட் பண்ணேன் எழில்.. அவரிடம் ஏதோ ஒன்றை மறைக்கும் பாவம்..எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு மழுப்பலாகவே பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.. அவர் ஊருக்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்ற அன்று ஆச்சார்யா போனில் சுஜனிடம் பேசுவதைக் எதற்சையாய் கேட்டேன்..

அவர் சுஜனிடம் யாருக்கும் உன் மேல் சந்தேகம் வரவில்லையல்லவா.. வெரி குட்.. நான் உன்னை திரும்பியும் அழைக்கும் வரை நீ இங்கு வரவேண்டாம் என்றுவிட்டு அழைப்பை அணைத்துவிட்டார்..

அன்று நடந்ததையும் இப்போ வ்ருதுஷ் விஷயத்தையும் கனெக்ட் பண்ணிப் பார்க்கும் பொழுது இதில் சுஜனும் சம்பதப்பட்டிருப்பான் என்று தோன்றுகிறது.. சீதாலட்சுமி ஆன்ட்டியால் வ்ருதுஷை தனி ஆளா கடதிருக்க முடியாது.. அதுனால தான் எனக்கு சுஜன் அண்ணா மேல சந்தேகமா இருக்கு..”

“நம்ம ஏன் வ்ருதுஷைப் பற்றி விசாரிக்கும் இன்ஸ்பெக்ட்டரிடம் சுஜன் அண்ணாவைப் பற்றி சொல்லக்கூடாது..??”

“உயிருடன் இல்லாத ஒருவனை பற்றி நீ என்ன புகார் அளிப்பாய் எழிலா..??”, இருவரின் தலைக்கு மேலே பறந்து கொண்டு அகிலனைக் கண்டு ஒரு நிமிடம் கோபம் பொங்கி வந்தது தியாவிற்கு..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.