(Reading time: 9 - 18 minutes)

என்ன மாதிரியான சூழ்நிலையில் தாங்கள் இரு வாரமாக அலைந்து கொண்டிருக்கிறோம்.. ஒரு முறையேனும் அவளை வந்து பார்க்காதவனைக் கண்டு சீற்றம் பொங்கியது அவள் கண்களில்..

அதையெல்லாம் கண்டு கொண்டால் அவன் அகிலன் அல்லவே..

தன்னை யோசனுடன் பார்த்துக்கொண்டிருந்த எழிலிடம்,”என்ன எழில் யோசனையெல்லாம் பலமாக இருக்கிறதே..??”,என்றான்..

“நீ இப்போ என்னவோ சொன்னியே..??”

“அவன் என்னவோ சொல்லிட்டுப் போறான் எழில்.. நம்ம போலாம்.. இவனைப் பார்க்கவே எனக்கு பிடிக்கலை..”,என்றாள் தியா..

“எதற்கு எடுத்தாலும் கோபப்படுவதை நிறுத்து தியா கொஞ்சம்”,என்று தியாவிடம் எரிந்து விழுந்த எழில் புன்னகைத்தபடியே தன் தோளின் வந்து அமர்ந்த அகிலனிடம்,”நீ என்னமோ சொன்னியே.. அது என்ன..??”,என்றான் கூர்மையாக..

“உயிருடன் இல்லாத ஒருவனை பற்றி நீ என்ன புகார் அளிப்பாய் எழிலான்னு சொன்னேன்..”,என்றது அகிலன் அழுத்தமாக..

“உயிருடன் இல்லாதனா..??”,நெற்றி சுருங்க கேட்டான் எழில்..

“அகிலா நீ.. நீ.. சுஜன் அண்ணாவை சொல்ற..?? அவருக்கு என்னாச்சு..”,பதற்றமாகவே வெளிவந்தது தியாவின் குரல்..

“அதான் சொன்னேனே.. அவன் முடிவைப் பற்றி..”

அலையோசையைத் தவிர வேறெந்த சத்தமும் எழவில்லை அங்கு சில நிமிடங்களுக்கு..

“எப்படியாச்சு அகிலா..??”,தொண்டையை சரி செய்த படி கேட்டான் எழில்..

“சாவியை எடுக்கச் சென்றான்.. புதைக்குழியில் மூழ்கிப்போனான்..இதற்கு மேல் என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்..”,என்ற அகிலன்,”நீங்கள் அனைவரும் செழுவூருக்கு வரும் நேரம் நெருங்கிவிட்டது..”,என்றது..

“வ்ருதுஷ்.. உனக்கு வ்ருதுஷிற்கு நடந்ததைப் பற்றித் தெரியும் என நினைக்கிறேன்.. அவனைக் கண்டுபிடிக்காமல் நாங்கள் எங்கும் அசைவதாய் இல்லை..”,தீர்மானமாய் வெளிவந்தது தியாவின் குரல்..

கடல் அலைகள் எதிரொலிக்க சிரித்த அகிலன்,”வ்ருதுஷைக் காணத் தான் உங்களை செழுவூருக்கு அழைக்கிறேன்..”,என்றது..

அதிர்ச்சியடைந்த இருவரையும் கண்டு மேலும் சிரித்தவன்,”அவனுக்கு ஒன்றும் நேரவில்லை.. சிறு கீறல் கூட இல்லாமல் நலமாக இருக்கிறான்..”,என்றது..

“சிறு கீறல் கூட இல்லையா..??”,என்ற யோசனையுடன்,”அவன் ஒன்பதாம் மாடியில் இருந்தல்லவா கீழே விழுந்தான்..??”,சந்தேகத்துடன் கேட்டான் எழில்..

“கீழே தள்ளப்பட்டான் தான்.. ஆனால் அவன் விழவில்லையே..”

“விழவில்லையா..?? எப்படி..??”,இது எழில்..

“அதுக்குள்ள நீ அவனை கீழே விழாமல் பிடிச்சிட்டியா..”,என்று குதூகலித்த தியா அகிலனை எழிலில் தோளிலிருந்து எடுத்து அவன் நெற்றியில் முத்தம் பதித்தாள்..

அவசரமாக அதைத் துடைதுக்கொண்டவன்,”நீ தான் என் மேல கோவமாக உள்ளேயே.. வேண்டாம் உன் முத்தம்..”,என்றது ரோஷமாய்..

இப்பொழுது அகிலனைக் கண்டு சிரிப்பது மற்றிருவரின் முறையானது..

செழுவூர்..

சிறு ஓட்டு வீடு அது.. மரங்கள் சுற்றி காடு போல் வளர்ந்து அந்த வீட்டை மறைத்திருந்தது..

யாரின் கவனத்தையும் கவராத வண்ணம் அதன் முன்னே வந்து நின்றது ஒரு இம்போர்டட் கார்..

ப்ளாக் அன்ட் வயிட் ஹேர் ஸ்டைலில் ட்ரிம் செய்யப்பட தாடியுடன் சுமார் ஐந்தரையடி உயரத்தில் ஒருவர் இறங்கினார்..

ஐம்பதுகளில் முடிவில் இருக்கும் அவர் தனது தந்திரக் கண்களால் சுற்றியும் ஒரு முறை பார்வையிட்டார்..

தன்னை யாரும் கவனிதுவிடவில்லை என்று உறுதி செய்த பின் கார் ட்ரைவரிடம் திரும்பியவர் நீ கிளம்பு என்பது போல் கண்களால் கட்டளையிட்டு விட்டு மரங்களுக்கு நடுவில் புகுந்து அவ்வீட்டை நெருங்கினார்..

உள்ளே கார சாரமாய் விவாதம் நடந்து கொண்டிருக்க அதை அலட்சியம் செய்தவராய் உள்ளே நுழைந்தார் அவர்..

யார் அவர்னு அடுத்த ud ல சொல்றேன்.. அதுவரை கொஞ்சம் வெயிட் கரோ பிரெண்ட்ஸ்..

வியூகம் வகுக்கலாம்...

Episode # 26

Episode # 28

{kunena_discuss:1111}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.