(Reading time: 8 - 15 minutes)

28. சர்வதோபத்ர... வியூகம்...!!! - வசுமதி

Savathopathra... Viyoogam

ரங்கள் மறைத்திருந்த அவ்வீட்டிற்குள் ஹை டெபிசெளில் பேச்சு வார்த்தை அரங்கேறிக்கொண்டிருந்தது..   

ஒரு சிறிய சோபா ஒன்றின் ஒரு பக்கம் சீதாலட்சுமி அமர்ந்திருக்க மறுபக்கம் அவரை முறைத்தபடி ஒரு கண்ணாடி டீப்பாயின் மேல் கால்களை வைத்து அமர்ந்திருந்தார் ராமகிருஷ்ண ஆச்சார்யா..

ஆமாங்க ராமகிருஷ்ண ஆச்சார்யாவே தான்.. அவர் சிறையில் இருந்து வெளிவந்து நாட்கள் இரண்டைத் தொட்டுவிட்டது..

பெயிலில் வெளி வந்தவர் சீதாலட்சுமி செழுவூரில் தலைமறைவாக இருப்பது தெரிந்து நேராக அங்கேயே வந்துவிட்டார்..

தன்னை முறைதுக்கொண்டிருந்த ஆச்சார்யாவிடம், “நான் அவனை ஒன்னும் செய்யாம சும்மா விட்டிருக்கனும்னு சொல்றீங்களா..??”, ஆங்காரமாக கேட்டார் சீதாலட்சுமியின்..

“சும்மா விடனும்னு சொல்லல.. நிதானமா செஞ்சிருக்கலாம்னு சொல்றேன்..”, அழுத்தமாக வெளிவந்தது ராமகிருஷ்ண ஆச்சார்யாவின் குரல்..

ராமகிருஷ்ண ஆச்சார்யாவின் அழுத்தமான குரல் சீதாலட்சுமியை ஒரு நொடி பாதிக்க அமைதியாக அவரை வெறித்தார் அவர்..

அவ்வமைதியின் மத்தியில் வெளிப்பக்கம் கேட்ட சீரான காலடி ஓசை இருவரையும் விழிப்படையச் செய்து வாயிலைப் நோக்கவைத்தது..

ஒரு அலட்சியபாவத்துடன் உள்நுழைந்தவரை எதிர்பாரா இருவரும் திகைத்துப்போய் எழுந்து நின்றனர்..

வேக நடையுடன் சீதாலட்சுமியை நெருங்கியவர் தன் முழுபலத்தையும் பயன்படுத்தி டீப்பாயை உடைத்தெறிந்தார் தன் ஆத்திரத்தை தீர்க்க..

“அண்ணா..”, என்று சீதாலட்சுமி அருகில் வர அவரைத் தடுத்தவர், “அங்கேயே நில்லு லட்சுமி.. நான் உன் மேல் ரொம்ப கோபமா இருக்கேன்..”, என்றார் கர்ஜனையாக..

அதைக் கேட்டு ராமகிருஷ்ண ஆச்சார்யாவை ஏதாவது செய்யுங்கள் என்பது போல் பார்த்தார் சீதா..

அதைப் புரிந்து கொண்ட ஆச்சார்யாவும், “ராஜா கோபம் வேண்டாம்..”, தன்மையாக மற்றவரிடம் உரைத்தார் ஆச்சார்யா..

“ராம் நீ அவளுக்காக என்கிட்ட பேச வராதே..”, கடுப்பாக வெளியில் தெரித்தது ராஜா என்கிற சுபலராஜனின் குரல்..

“ராஜா.. அவள் ஏதோ கோபத்தில் செய்துவிட்டாள்.. விடேன்..”

“எப்படி விட சொல்ற ராம்.. அவனை போட்டுத்தள்ளனும்னு நினைக்கறவ ஒன்னு நிதானமா காத்திருந்து செஞ்சிருக்கனும்.. இல்லன்னா ஆதாரம் இல்லாம செஞ்சிருக்கனும்.. ஆனால் இவ..”, என்ற சுபலராஜாவின் குரல் ஏகத்துக்கும் ஒலித்தது..

“அண்ணா நான் அப்போ இருந்த மனநிலையில் அவங்களை கதறவிடனும்னு நெனச்சேன்.. அதுக்கு ட்ரம்ப் கார்டா அந்த விருதுஷ் சிக்கினான்.. என் ஆத்திரத்தை தீர்துக்கிட்டேன்.. அவ்வளவுதான்..”, தான் செய்தது தவறே இல்லையென்பது போல் பேசிய சீதாலட்சுமி, “அதான் பார்த்துக்க நீ இருக்கியேங்கற தைரத்தில் எல்லாம் செஞ்சுட்டேன்..”, இப்பொழுது அசால்ட்டாக விழுந்தது வார்த்தைகள்..

“நீ சொன்னாலும் சொல்லலனாலும் நான் இருப்பேன் உன்னுடன் என்றும்..”, என்று அழுத்தமாக கூறியவர் ஒரு போனை தனது பாக்கெட்டிலிருந்து எடுத்து சீதாலட்சுமியின் கையில் திணித்த சுபலராஜா, “இந்தா தியா உனக்கு எதிராக பதிவு செய்திருந்த ஆதாராம்..”, என்றார்..

சீதாலட்சுமியிடம் இருந்த போனை பிடுங்கி அதனை திருப்பிப் பார்த்த ராமகிருஷ்ண ஆச்சார்யா, “இது தியாவோட போன் தான்.. இது எப்படி உன்கிட்ட வந்துச்சு..??”, என்று வினவினார்..

“பணம் பத்தும் செய்யும் கேள்விப்பட்டதில்லை..??”, விட்டேத்தியாக..

“ஆனால் சீதாலட்சுமியின் கேஸை ஹாண்டில் செய்பவர் நேர்மையானவர் ஆச்சே..”, என்றார் ஆச்சார்யா யோசனையாக..

“அவர் மட்டும் நேர்மையாக இருந்தால் போதுமா..??”, புருவங்களை உயர்த்தி..

“அப்போ..??”, இது சீதாலட்சுமி..

“எல்லாம் அவன் அசிஸ்டன்ட் குமரனின் மகிமை..”

கேள்வியாக உயர்ந்தது சீதாலட்சுமியின் புருவம்..

“குமாருக்கு ஒரு பொண்ணு இருக்கு.. அது ஆசைப்பட்ட காலேஜ்ல சீட்டு வாங்கிக் கொடுத்தேன்.. போனை கொண்டுவந்து யாருக்கும் தெரியாம கொடுத்திட்டு போயிட்டான்..”, என்றார் ஏக வசனத்தில்..

“அப்போ இனி சீதாலட்சுமிக்கு எந்த ஆபத்தும் இல்லை அல்லவா..”, என்ற ஆச்சார்யா சுபலராஜாவை அணைத்துக்கொண்டார் நெகிழ்ச்சியுடன்..

அது தற்காலிகமோ..?? பொறுத்திருந்து பார்ப்போம்..

ந்தி வானம் சிவந்திருக்க அந்த கற்கோவிலின் கோபுரத்திலுள்ள கலசங்களின் நடுவில் தொடங்கியது சூரிய அஸ்த்தமனம்..

அன்று கூடாரங்கள் போடப்பட்டிருந்த இடத்தில இப்பொழுது ஒன்றிரண்டு குடிசைகள் முளைத்திருந்தது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.