(Reading time: 8 - 15 minutes)

ஆள்நடமாட்டமே இல்லாதிருந்த இடத்திற்கு அந்த கற்கோவிலைக் காணவே இப்பொழுது பத்திருபது பேர் வரத்துவங்கியிருந்தனர்..

கற்கோவிலின் பெரிய கதவில் சாய்ந்தவாறு யாரையோ எதிர்பார்த்தார் போல் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டிருந்தாள் தியா.. துணையாய் சற்று தூரத்தில் அலைபேசியில் பேசியபடி விக்கி..

போனை வைத்தவன் தியாவிடம் சீரியஸான குரலில், “தியா பெரியம்மாவுக்கு எதிரா எந்த ஆதாரமும் இல்லாததால் அவர்களுக்கு எதிராக நாம் கொடுத்த கம்ப்ளைன்ட் நிராகரக்கப்பட்டுவிட்டதாம்..”, என்றான்..

“சரி விடு விக்கி.. பார்த்துக்கலாம்..”, நிதானாமகவே பதில் வந்தது தியாவிடமிருந்து..

“நான் சீரியஸா சொல்றேன்.. நீ என்ன அசால்டா பார்த்துக்கலாம்னு சொல்ற..”, கொஞ்சமே கொஞ்சம் எகிறினான் விக்கி..

“வேற என்ன சொல்ல சொல்ற விக்கி.. நூறு கொலை கேஸ் இல்லை இல்லை ஆயிரம் கொலை கேஸ் அவங்க மேல நாம ஆதாரத்துடன் போடறோம்னு வெச்சுப்போம்.. அதை ஒடைக்க அவங்களுக்கு சில மணி நேரம் போதும்..”

“சோ அவங்க என்ன வேணும்னாலும் பண்ணட்டும் அதை நாம வேடிக்கை பார்க்கலாம்னு சொல்றியா..??”

“இல்லை.. இனி எது பண்ணாலும் நிதானமாகவும் பொறுமையாகவும் பண்ணலாம்னு சொல்றேன்.. நாம் யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு விஷயமும் நம்முடன் இருப்பவர்களை பல மடங்கு பாதிக்கும்.. சோ இப்பொழுது நமக்கு பொறுமை ரொம்ப அவசியம்..”, என்றாள் பொறுமையில் அழுத்தம் கொடுத்தபடி..

தியாவை அவ்வளவு நேரம் உறுத்தி விழித்துக்கொண்டிருந்தவன் அவளின் கூற்றிலிருந்த உண்மை புரிந்து அமைதியாகி சற்று தள்ளி அவளது வலதுபுறம் அமர்ந்தான்..

திரவன் முழுவதுமாக கற்கோவிலுக்கு பின் சென்று மறைய அங்கு வந்து சேர்ந்தான் அகிலன்..

இருவரும் அமர்ந்திருக்கும் பொசிஷனைப் பார்த்தவன் கள்ளசிரிப்பை கண்ணில் தேக்கி, “ஒரு மாநாடே நடந்து முடிந்திருக்கிறது போல..??”, என்றான் நக்கலாக..

அவனை உறுத்து முறைத்தவள், “இதுதான் நீ சீக்கிரம் வருகிறேன் என்று சொன்ன லட்சணமா..??”, கேள்வியில் அனல் கக்கியபடி..

“சின்ன வேலை தியா..”, என்று மழுப்பியவன், “மற்றவர்கள் எல்லாம் எங்கே..??”, என்று கேட்டான்..

“மண்டபத்தில் இருக்கிறார்கள் அகிலா.. ஆமாம் வ்ருதுஷ் எங்கே..?? அவனை இங்கு அழைத்து வருவதாய் சொன்னாயே..??”

“வ்ருதுஷ் தேவவ்ரத ஆசார்யாவுடன் அவருக்குத் துணையாய் இருக்கிறான்..”, என்றவன் திடீரென, “நாம் எல்லோரும் உடனே அங்கு செல்ல வேண்டும்..”, என்று அவசரப்படுத்தினான்..

அவனது அவசரம் கண்டு, “என்னாச்சு அகிலா..??”, இது விக்கி..

“உங்களைத் தேடி அவர்கள் வருகின்றனர்.. நாம் உடனடியாக இங்கயிருந்து கிளம்பவேண்டும்..”, என்ற அகிலன் இருவரையும் இழுத்துக்கொண்டு கல்மண்டபம் நோக்கி விரைந்தான்..

“யார் வருகிறார்கள் அகிலா..??”, அவன் இழுப்புக்கு இசைந்தபடி கேட்டான் விக்கி..

“உன் பெரியப்பாவும் சுபலராஜாவும்..”

“சுபலராஜாவா..?? யார் அவர்..??”, இது தியா..

“சுபலராஜா.. ராஜா மாமா.. அவர் பெரியம்மாவின் அண்ணன்.. ஆனால் அவர் எதற்கு இங்கு வருகிறார்..”, இது விக்கி..

“சூத்திரதாரி இங்கு வந்தால் தானே எல்லாம் நல்லபடியாக முடியும்..”, என்று முணுமுணுத்த அகிலன், ”அவர் எதற்காக இங்கு வருகிறார் என்பது இப்பொழுது முக்கியமில்லை.. நாம் இங்கிருந்து இப்பொழுது செல்வதே முக்கியம்..”, என்றவன் இப்பொழுது இருவரையும் இழுத்துக்கொண்டு கல்மண்டபம் வந்திருந்தான்..

அங்கிருந்தவர்களை ஒரு முறை பார்த்தவன் தன் உருவத்தை கொஞ்சம் கொஞ்சமாக பெரியதாக்கத் துவங்கினான்..

இவனின் வித்தியாசமான நடவடிக்கையில் குழம்பியவர்கள் அவன் முகத்தில் தோன்றிய மாற்றங்களைக் கண்டு அமைதியாகி அவன் செய்வதை வேடிக்கை பார்க்கத் துவங்கினர் அமைதியாக..

இறகுகளை படிக்கட்டுகள் போல் அமைத்த அகிலன், “விக்கி தியா ரியா நீங்கள் மூவரும் என் வலது பக்கம் வந்து ஏறுங்கள் ரிக்கி மயா எழில் நீங்கள் எனது இடது புறம்..”, என்றவன் அவர்கள் தன்னை பே என்று பார்ப்பது கண்டு, “வந்து ஏறுங்கள்..”, என்றான் கட்டளையாக..

அறுவரும் தன்னை கெட்டியாக பிடித்திருக்கிறார்கள் என்பதை உறுதி செய்துகொண்டவன் உயரப்பறக்கத் துவங்கினான்..

அதே நேரம் ஒரு வேகத்துடனும் குரோதத்துடனும் அக்கோவிலுக்குள் நுழைந்தனர் சுபலராஜாவும் ராமக்கிருஷ்ண ஆச்சார்யாவும்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.