(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - காதல் இளவரசி – 06 - லதா சரவணன்

kadhal ilavarasi

த்மினி அறைக்குள் சென்றவுடன் பழைய நினைவுகளை அசை போட்டுக்கொண்டு இருந்த உத்ரா முன்னர் பணிபுரிந்த ஜவுளி நிறுவனத்தில் முதல் வருடம் நந்தம்பாக்கம் அருகில் நடத்திய கண்காட்சியில் நல்ல இலாபம் பார்த்தாலோ என்னவோ அதேபோல் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றிலும் ஜவுளிகள் கண்காட்சியை ஏற்படுத்தியிருந்தார். விற்பனை பிரிவில் பங்கு பெற்ற உத்ராவே நிர்வகித்தாள். ஒவ்வொரு ரகங்களையும் தனித்தனியே பிரித்து அந்தந்த பிரிவிற்கு ஆளையும் தேர்ந்தெடுத்து விற்பனையைத் துவக்கியபின் மதிய உணவிற்கு ஐந்து பணியாளர்களையும் அனுப்பிய பிறகு தன்னுடைய உணவுப் பொட்டலத்தைப் பிரித்தாள்.

பணிபுரிவது பெரிய நிறுவனமானலும், சம்பளத்தைத் தவிர வேறு எந்த சலுகைகளையும் அவர்களிடத்தில் எதிர்பார்க்க முடியாது அப்படியொரு கண்டிப்பு, கழுகுக் கண்களைக் கொண்டு எப்போது வேலையில் குற்றம் கண்டுபிடிக்கலாம் என்று திரியும் மேனேஜர், பெரியவரையும் தாண்டி அங்கு பணிபுரிவதே பெரிய விஷயம். 

குடும்ப சூழல் கருதி சில நேரம் வேலை பளுவால் மனம் அலுத்தாலும், பொறுத்துக் கொள்வாள் உத்ரா. ஆனால் சின்ன முதலாளியின் வருகையும், அவனின் ஊடுருவும் பார்வையும் மட்டும் அவளால் சகித்துக் கொள்ளவே முடியாது. ஆனால் இந்த மூன்று நாட்களும், வரவு செலவு கணக்குகளை பார்த்துக்கொள்ள வந்த பெரியவர் இன்று வர இயலாதாம் அதற்குப் பதில் சின்ன முதலாளிதான் வருவார் என்று மதியம் வந்த தகவலில் இருந்தே நிலை கொள்ளாமல் மனம் தவித்துக் கொண்டுதான் இருந்தது.

ஏன் டல்லா இருக்கே உத்ரா என்று அக்கறையாய் கேள்வி கேட்ட சக ஊழியையிடம் கூட அதைப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை,

ஐந்து நட்சத்திர ஓட்டல் என்பதால் வருபவர்கள் அனைவருமே சற்று வசதி படைத்தவர்களாகத்தான் இருப்பார்கள். கண்ணைப் பறிக்கும் நிறங்களோடு கல் ஜிமிக்கி வேலைப்பாடுகளோடு கொண்ட செக்ஷன் பக்கம் சத்தம் அதிகம் கேட்கவே சாப்பிட்டுக் கொண்டு இருந்தவள் அரக்கப் பரக்க ஓடிவந்தாள். 

சேல்ஸ் செய்யும் பெண்ணிடம் நவநாகரிக யுவதி ஒருத்தி சத்தம் போட்டு கொண்டு இருக்க, அருகில் இருந்த இளைஞன் யார் பக்கம் நியாயம் என்று கூட கேட்காமல் அசட்டையாய் நின்றிருந்தான்.

உத்ரா அந்த சேல்ஸ் பெண்ணிடம் பார்வையைத் திருப்பினாள் என்னாச்சு சசிரேகா ?!

மேடம் இந்த வெள்ளையும் பிங்க் நிறமும் கொண்ட அடர் நிறத்திலான பார்டர் சேலையில் வேலைப்பாடுகள் மிகவும் அதிகம் அதை அணிவித்து பார்க்கவேண்டும் என்று கேட்டார்கள். விலையைப் பற்றி சொன்னதும் கோபம் வந்துவிட்டது.

தன் பங்கிக்கு எல்லாம் முடித்தாகிவிட்டது இனி இந்த ராங்கிக்காரியை உத்ரா பார்த்துக்கொள்வாள் என்ற நம்பிக்கையில் சசிரேகா அமைதியாகிவிட்டாள்.

ஆனால் வந்தவள் அப்படியில்லை

நான் யார் என்னவென்று தெரியாமல் அதென்ன விலையைப் பற்றிப் பேசுகிறாய் ? என்று மீண்டும் கத்த தொடங்க, கூட வந்த இளைஞனை ஒரு தரம் பார்த்துவிட்டு,

மன்னிக்கவும் மேடம் காலையில் இருந்து இந்த புடவை நாலைந்து பேர் பார்த்துவிட்டார்கள். அழகில் மயங்கினாலும் சற்று விலை கூடுதல் என்பதால் அமைதியாய் சென்றுவிட்டார்கள். இந்த விற்பனைப் பிரிவில் உள்ள ஆடைகளை மறுபடியும் நாங்கள் கடையில் கொண்டு சேர்ப்பிக்க வேண்டும். வெள்ளை நிறம் என்பதால் சற்று அழுக்காகும் அபாயமும் உள்ளது. எனவே இம்மாதிரி விலையுயர்ந்த புடவை மற்றும் ஆடைகளை எடுத்துக்கொள்வதாய் பில் போட்டு உறுதி செய்தபிறகுதான் உடுத்திக் கொள்ள அனுமதிக்க முடியும். எங்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களில் அதுவும் உண்டு. அப்படியிருக்க வேலைபுரியும் நாங்கள் எப்படி அதை மாற்ற முடியும். உங்கள் அந்தஸ்த்துக்கு இது குறைச்சல் என்றாலும் எங்களுக்கு சில மாத சம்பளம் இந்த புடவையின் விலை, இது உங்களின் நிறத்திற்கு மிகவும் எடுப்பாகவே இருக்கும் எடுத்துக் கொள்வதானால் நான் பில் போடச்சொல்கிறேன் ஸார் பணம் கட்டுவதற்குள் நீங்கள் இதை அணிந்து பார்த்து விடலாம் இதற்கு மேட்சாக சோளி கூட இருக்கிறது என்று சிலதை ஏற்ற இறக்காமல் தன்னையும் இறக்கி அந்த நாகரிக யுவதி ஏதும் பேசமுடியாமல் இனியிந்த புடவையை எடுக்கவில்லை என்றால் அவளுக்குத்தான் அவமானம் என்று ஒருவாறு சொல்லிமுடித்ததும் இம்முறை பேசாமல் விழிப்பது அந்த பெண்ணின் பக்கமாயிற்று.

பரத் எனக்கு இது மிகவும் பிடிக்கிறது நீங்கள்......ஆனால் எனக்காக நீங்கள் இதை எடுத்துத் தருவீர்களா ? குயிலின் குரல் கூட அவளின் குழைவில் தோற்றுவிடும் போல அத்தனை இனிப்பை தடவியிருந்தது. 

வந்திருந்த இளைஞன் பெண்ணே நீ கெட்டிகாரிதான் எப்படியோ அந்த சேலையை என் தலையில் கட்டிவிட்டாய், இவள் பண்ண அட்காசத்திற்கு இப்போது இதை வாங்காவிட்டால் எனக்கு மானப்பிரச்சனை ஆகிவிடுமே !

பில் போடச்சொல்லி சைகை செய்துவிட்டு பணத்தைக் கட்டினான்.

ஒஹோ யூ ஆர் மை டார்லிங் என்று அவன் கன்னத்தில் எம்பி முத்தமிட்டாள் அந்த யுவதி அத்தனை பேரின் முன்னிலையிலும், மற்றவர்கள் முகத்தைத் திருப்பிக் கொள்ள எனக்கு இதை அணிவித்து காட்டு என்று அதிகாரமும் கொஞ்சம் குழைவுமாய் அவள் சொன்னதும் மறுபேச்சு பேசாமல் உத்ரா மற்றவளுக்கு அதை அணிவித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.