(Reading time: 10 - 20 minutes)

அவனைப் பார்த்து பயப்படாதே அவன் எழுந்திருக்க இன்னும் தாமதம் ஆகும். நீ சொல்வது உண்மையா பொய்யான்னு எனக்குத் தெரியலை, ஆனா ஏன்னு தெரியலை உன்னை நம்பாமலும் இருக்க முடியலை, 

நான் நல்ல குடும்பத்திலே பிறந்த பொண்ணு ஸார் குடும்ப கஷ்டம்

இப்போ என் அறையிலே இருக்காளே அவ கூட இப்போ அதைச் சொல்லித்தான் என் கூட இருக்கா ?! ஏன் அப்படி பாக்குறே ? அவன் பிடித்ததில் ஏதாவது அடிகிடி பட்டுடுச்சா

அவளின் கன்னம் அருகில் கைகள் நீண்டு வர அவசரமாய் பின்னோக்கி

இல்லை.... நீங்க இரண்டுபேரும் நினைச்சேன். 

லவ்வர்ஸன்னு நினைத்தாயா ?

இல்லை கல்யாணம் செய்யப் போகும் பெண் என்று ?!

கல்யாணமா ?! ஏதோ பெரிய ஜோக்கை கேட்டதைப் போல சிரித்தான்

இதெல்லாம் கல்யாணம் வரை வரும் கேஸ் இல்லைம்மா. பிக்கப் அண்ட் டிராப் நாளைக்கு காலையில் அவள் பர்ஸில் கனம் ஏறியதும் நான் யாரோ அவள் யாரோ ?! என்னைப் பற்றி விடு இப்போ உனக்கு சரியாயிடுச்சா ? நீ கீழே போ இவன் இப்படியே கிடக்கட்டும்.

உத்ரா அவனேயே பார்த்தபடி நிற்க என்ன டியர் என்று கண்ணடித்தான் ?! 

பதறியபடியே ஒண்ணுமில்லை ஸார் நான் கீழே போறேன்.

அவளின் பதட்டத்தை ரசித்தபடியே வழியினையும் விட்டான் அந்த இளைஞன்.

அன்றைய தினமே அந்த வேலையை விட்டு வெளியே வந்துவிடவேண்டும் என்று முடிவு செய்தாள் நடந்ததை எல்லாம் பெரிய முதலாளியிடம் அவரின் அண்ணனிடம் சொல்லியதும்,

மன்னித்துவிடும்மா நீயொரு நல்ல உழைப்பாளி இப்படி திடுமென்று நிற்க வேண்டாம். இனிமேல் அதாவது இந்த வேலையைக் காட்டிலும் நல்ல வேலை கிடைக்கும் வரையில் நீ இஙகேயே இருக்கலாம் அவனால் எந்த தொல்லையும் இல்லாமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார்.

வெளிப்படையாக இவளுக்கு உதவுவதைப் போல் தோன்றினாலும் அவரின் மனதில் இந்தப்பெண் ஏதாவது எக்குத்தப்பா உளறிவைத்தால் பிள்ளைக்கு தண்டனை கிடைப்பதோடு, மேற்கொண்டு இந்தப் பெண்ணே பணம் கூட மேறகொண்டு கேட்கலாமே என்ற எண்ணத்திலும் தான் சொன்னார். ஏதோ மரியாதைக்காக பிள்ளையை கடைப்பக்கம் வர விடமாட்டேன் என்றாலும், ஒரு சிக்கல் என்று வரும்போது பெற்றவர் பிள்ளையின் பக்கம் தானே நிற்பார். எனவே மறுத்துப் பேசாமல் வேறு வேலைக்கு முயற்ச்சிக்க ஆரம்பித்தால் உத்ரா. 

ன்றைக்கு பிறகு இன்றைய தினம் தான் பரத்தைப் பார்க்கிறாள் ஆனால் அவனிடம் அன்றும் நன்றியுரைக்கவில்லை, இன்றும் நன்றியுரைக்கவில்லை

நீண்ட பெருமூச்சோடு அவளுக்கென்ற அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

ஆனால் அடுத்த முறை பரத்தை சந்திக்கும் போது அவளின் நாவு நிச்சயம் அவனை குற்றம் சுமத்தத்தான் போகிறதே தவிர, நன்றியுரைக்கப் போவதில்லை என்று அப்போது உத்ராவிற்கு தெரியவில்லை. 

தொடரும்...

Episode # 05

Episode # 07

Go to Kathal Ilavarasi story main page

{kunena_discuss:1201}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.