(Reading time: 9 - 17 minutes)

20. இவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

Love

ஹாய் ஃபிரண்ட்ஸ், ஸாரி லாங்க் டைம் ஆயிடுச்சு அப்டேட் கொடுத்து

இனிமே பாஸ்டா கொடுக்க ட்ரை பண்றேன்.. ஷார்ட் அப்டேட் தான்அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.. smile

வீட்டின் முன்னும் பின்னும் சிறிய பந்தல், வீட்டின் உள்ளே எளிய முறையில் அலங்கரிக்கப்பட்ட பூ அலங்காரம், திவ்விய காட்சிதான், வாசலை அடைத்து பரப்பியிருந்த ரங்கோலிக் கோலம், எல்லாம் கண்ணுக்கு விருந்தாக, கருத்தை கவருவதாக இருந்தாலும், விக்னேஷின் கண்கள் அவன் இதயம் திருடியவளைத் தான் தேடியது.

விக்னேஷின் வீட்டினர் சபையில் அளித்த புடைவையை, செல்விக்கு பாங்காக உடுத்திவிட்டாள் தர்ஷினி, ஒப்பனை செய்ய வந்திருந்த அழகுக்கலை நிபுனரான பெண்மணி கூட கொஞ்சம் அசந்து தான் போனார், மெலிதான ஒப்பனை பிறர் கண்களை உருத்தாது, அவள் தீபத்தின் ஒளிச்சுடராய் நின்றாள்.

“எல்லாம் சரியா இருக்கு, இனிமேல் ஃபோட்டோ செஷன் தான் பாக்கி!” – தர்ஷினி

“போதுமே.. ஏற்கனவே எக்கசக்கம் எடுத்தாச்சு காலைல இருந்து..” -செல்வி

“அதெல்லாம் சோலோ பெர்ஃபாமன்ஸ்.. இனிமே தான் ஃபங்கஷனே இருக்கு.. பாவம் விக்கி நீ வர்ற வரைக்கும் தரைல விட்ட மீன் ஆயிட்டாரு.. எவ்வளவு நேரம் தான் நீ வர்றதிசையையே பார்த்துட்டு இருப்பாரு..சீக்கிரம் போலாம்..” – அவள் கையைப்பற்றி இழுக்க…

உள்ளே ஜோடியாய் ரிஷியும் காவ்யாவும்.

இருவரையும் பார்த்து ஒரு மென்மையான புன்னகைமட்டும் வெளியே வந்தது செல்வியிடமிருந்து.

“கங்கிராட்ஸ்” – ரிஷி

இதழ்கள் புன்னகைக்க “தேங்க்ஸ்” – மென்மையாக செல்வி சொன்னாள்.

“செம அழகா இருக்கீங்க போங்க…, ஆமா தர்ஷூ உங்கிட்ட கைவசம் பல தொழில் இருக்குபோல… பக்காவா செல்விய ரெடி பண்ணிட்ட – காவ்யா

“ஆமாண்டி ஏன் சொல்லமாட்ட காலைல இங்க ட்ராப் பண்ணினதோட சரி, அப்புறம் ஆள் அட்ரசே காணும்… பார்த்த நீ ரிஷிய பார்க்க அப்ஸ்கான்ட் ஆயிட்ட.. ம்ம்”

“பின்ன உன்ன மாதிரியா…வழியத்தான் காட்ட முடியும்… நான் கோடு போட்டதுக்கு நீ இன்நேரத்திற்கு ரோடு போட்டிருக்கனும்.. !.. “ – காவ்யா

“அது சரி…” உங்கிட்ட இன்மே ட்யூஷன் தான் படிக்கனும்.. “ – தர்ஷினி

அனைவரும் புன்னகைக்க..

“கீர்த்தனா வரலையா ரிஷி…” – செல்வி

“அனைவரும் ரிஷியின் முகத்தைப்பார்க்க, “ஹான் கொஞ்சம் அர்ஜன்ட் வேலை அதான் அப்பா அவள பார்க்க சொல்லிருக்காங்க… “

“ஆமா அதான் நாங்க எஸ்கேப் ஆயிட்டோம்..” – காவ்யா சிரிக்க.. செல்வியை அழைத்துக்கொண்டு மேடைக்கு வந்தனர்.

சிறப்பாகவும் விருத்தியாகவும், இன்னும் சொல்லப்போனால் கண்களுக்கு விருந்தாகவும் அந்த நிகழ்வு நடக்க, அங்கிருந்த ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு கனவு விரிந்தது.

காவ்யா ரிஷியின் தோள்களில் சாய, “நான் அப்பவே சொன்ன இந்த ஃபங்க்ஷன கட் பண்னீட்டு பாண்டிச்சேரி வரைக்கும் ட்ரைவ் போலாம்னு நீ தான் கேக்கல, இப்ப ஃபீல் பண்ணீ ஒன்னும் ப்ரோயோஜனம் இல்ல்..”

“ச்சீ எப்ப பார்த்தாலும் இதே பேச்சு தானா, வர வர உன் கூட வரவே பயமா இருக்கு.. எங்கயாவது கடத்தீட்டு போயிடுவியோனு..”

“ஹையோ இவ ஒன்னும் தெரியாத நொள்ள உன்ன கடத்திக்கிட்டு வேர போணுமா? வாடினா பின்னாடி வந்திருப்ப..”

“யேய் ரொம்ப இமேஜின் பண்ணாதே.. அதுக்கெல்லாம் இன்னும் நிறைய டைம் இருக்கு..” – காவ்யா

“எவ்ளோ டைம் பங்க்ஷன் முடியுற வரைக்குமா?”

காவ்யா ரிஷியைப்பார்த்து முறைக்க அவன் முகத்தில் எக்கசக்கமாய் குறும்பு கொப்பளித்தது.

“உண்மைய சொல்லு, ஏன் கீர்த்தனா வரல?” - காவ்யா

“ம்ம் எனக்கும் அதே ட்வுட் தான் இரண்டு நாளா அப்பா ஒரே உர்ர்னு இருக்காரு, நான் வீட்டுக்கே போகல,  இன்னும் இரண்டு நாள்ல சரி ஆயிடும், பட் இன்னிக்கு அவ வர்றது டவுட் தான்” – ரிஷி காவ்யாவின் முகத்தை ஆராய, அவளோ இன்னும் தீவிர சிந்தனையில்…

அத்தனை கூட்டத்திலும் விழா சிறப்பாக நடக்க, இளமாறன் இதயம் மட்டும் சொல்ல முடியாத வேதனையில் தவித்தது. அதை அவன் முகம் இன்னும் கண்ணாடியாய் பிரதிபலித்தது.

“சீ என்ன மனுஷன் நான், பங்கஷனுக்கு வாநு நா கூப்பிட்டு இருக்கனும்.. அப்படியே நான் அழைச்சாதான் அவ வரனுமா என்ன? அவளுக்கு வர்றதுக்கு உரிமை இல்லையா? இன்னும் தாருமாறாய் எண்ணங்கள்  ஓட.. அதற்கு கடிவாளம் இட முடியாது அவன் உள்ளம் தவித்தது.

கண்கள் எவ்வளவு துழாவியும் காண முடியாத அவள் முகத்திற்கு இப்போது உள்ளம் ஏங்கியது.. ஏனோ அத்தனை உறவுகளுக்கு இடையும் தனிமையாய் நெஞ்சம் தவித்தது. ஏனோ தனித்து விடப்பட்டதாய் உள்ளம் தத்தளித்தது.

தனிமையாய் அவளை ஒருமுறை சந்திக்க உள்ளம் ஏங்கியதை அவனால் உணர முடிந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.