(Reading time: 9 - 17 minutes)

விழா முடிந்து அனைவரும் கிளம்ப, செல்வியின் கைகளை மென்னையாக பற்றிக்கொண்டு நின்றான் விக்னேஷ்.

“கிளம்பட்டுமா?”

“பின்ன இங்கேயேவா இருக்க முடியும்”  - செல்வி

“முடியாதுதான் உன் அண்ணன் கடிச்சு குதறிடுவான்.. ஏதோ ஃபங்ஷன் வேலைல நம்மள இன்னும் கவனிக்கல..”

“இனிமே அவன் ஒன்னும் சொல்ல மாட்டான்”

“அப்போ எல்லாதுக்கும் க்ரீன் ஆ..”

“ம்ம் … “ செல்வி முறைக்க்

“உன்ன வந்து பார்க்க, வெளில கூட்டீட்டு போக அத சொன்னேன் மா…”

“இன்னும் கால் சரி ஆகல..”

“தூக்கீட்டு போவேன்.. பேசாம இப்பவே என் கூட வீட்டுக்கு வந்திடு எனக்கும் கம்பெனி உனக்கும் போர் அடிக்காது..”

“சும்மா பறக்காதீங்க அடுத்த மாதம் கல்யாணம் இன்னும் முழுசா இருபது நாள் கூட இல்ல.. “

“ஐயோ.. இன்னும் இருபது நாள் இருக்குடீ” அவன் கண்கள் சிமிட்ட முதன் முறையாய் அவன் இவளுக்காக ஏங்குவது பெண்ணின் மனதை நனைக்க.. மனதோடு உடலும் மென்மையாய் ஒரு நொடி நடுங்கியது.

“டேய்.. வாடா, அவள விடு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.. வீட்டுக்கு போனவுடனே எப்படியும் அவளுக்கு கால் பண்ணப்போற.. “ விக்னேஷின் அப்பா அழைக்க அவளிடமிருந்து விடைபெற்று நடந்தான் விக்னேஷ். செல்வி இன்னும் அவன் ஸ்பரிசம் கலையாமல் மௌனமாய் அந்த நினைவுகள் தழும்ப நின்றாள்.

விழா முடிந்து ரிஷி கிளம்பிவிட, காவ்யாவும் தர்ஷினியும் செல்வியிடமும், வனிதாவிடமும் விடைப்பெற்று கிளம்பி வெளியே வந்தனர்.

“ஏண்டி கீர்த்தனா வரல” – தர்ஷினி

“க்ளியரா தெரியல, ரிஷியும் மேலோட்டமா தான் சொன்னாரு”

“அப்டியென்ன அவ பிஸி..”

“நீ கூட தான் காலைல பிகு பண்ணின.. “

“நானும் அவளும் ஒன்னா”

“பின்ன என்ன வித்யாசம் ..? “

ஏதோ சொல்ல வந்தவள் அவசரமாய் நிறுத்திக்கொண்டாள்.. தர்ஷினி..

“மச்சி வர வர எங்கிட்ட இருந்து நீ நிறைய விசயத்த மறைக்க இல்ல..

“சீ இல்லடி..”

“அப்புறம் ஏன் இப்போ ஆடு திருடுனவ மாதிரி முழிக்க..”

தர்ஷினி மௌனமாய் நின்றாள்.

“இங்க பாரு, காவ்யா கண்ணுல இருந்து எதுவும் மிஸ் ஆகாது .. அந்த திருட்டு கல்யாணம் மேட்டர் ஐ நோ..!”

தர்ஷினிக்கு  தூக்கிவாரிப்போட்டது. சுற்றும் முற்றும் பார்த்தவள், அவளை இழுத்துக்கொண்டு காருக்குள் ஏற..

“உனக்கு எப்படி தெரியும் காவீ..?

“இத யாராச்சும் வந்து வேர சொல்லனுமா? நாந்தான் வனிதா ஆன்ட்டி தாலிய பிரிச்சு கோற்கும்போதே பார்த்துட்டேனே, அது மட்டும் இல்லாம இலாவும், கீர்த்தனாவும் விட்ட ஃபேஸ் ரியாக்ஷன் இருக்கே ஹப்பா.. ஐ காட் இட்!”

“காவீ, அப்டியெல்லாம் நம்மளா ஒரு விசயத்த முடிவு பண்ணக்கூடாது..”

“இருக்கலாம்.. ஆனா எவ்வளவு நாள் சைலன்டா இருக்க முடியும்? இலாவுக்கும் கீர்த்தனாவுக்கும் ஏதோ ஊடல்.. பட் அது சால்வ் ஆயிடும் … ஆனா விஸ்வம் அங்கிள் தான் டெரர் பார்ட்டி …. “

“நீ நினைக்கிற மாதிரி இலாவும் கீர்த்தனாவும் விருப்பப்பட்டு இந்த கல்யாணம் நடக்கல.. “

காவ்யா தன் முட்ட்டைக் கண்னை விரித்து தர்ஷினியைப்பார்க்க…

“நீ வண்டிய எடு, போகும்போது சொல்றேன்.. அப்பா வீட்டுல இருப்பாங்க.. சீக்கிரம் போகணும்…” – தர்ஷினி

காவ்யா காரைக் கிளப்ப.. கீர்த்தனாவின் மென்மையான காதலை தன் போக்கில் சொன்னாள் தர்ஷினி..

வீட்டின் முன் அலுவலக அறையில் விஸ்வத்தின் எதிரே அமர்ந்து கீர்த்தனா, கணினியில் கோப்புகளை ஆராய்ந்துக் கொண்டிருந்தாள்,  கண்கள் கணினித் திரையை மொய்த்ததே தவிர உள்ளம் இன்னும் இளமாறனை காணும் ஆவலில் தான்..

காலையிலிருந்து கடுவன் பூனையாய் வீட்டினுள் சுத்தும் விஸ்வத்தை எதிர்கொள்வது கடினாமாய் தான் இருந்தது. இன்னும் பிரச்சனை முடிந்தபாடாய் இல்லை. அரைமணிநேரமாய் தன்னை அலங்கரித்து விழாவிற்கு கிளம்பியவளை வலுக்கட்டாயமாக தன் முன்னே அமர்த்தி அலுவலக பணிகளைத் தினித்துவிட்டவர் இன்னும் எழுந்து போனபடியாய் இல்லை.

“கீர்த்தனா” – விஸ்வத்தின் குரல் சற்றி அழுத்தி ஒலித்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.