22. சர்வதோபத்ர... வியூகம்...!!! - வசுமதி

தன் கண் முன்னே படர்ந்து விரிந்திருந்த நிலப்பரப்பில் கம்பீரமாய் வீற்றிருந்த அந்தக் கோவிலைக் கண்டு ஒரு நொடி அழகாய் விரிந்துதான் போயின தியாவின் கண்கள்..
அதை வார்த்தையால் வெளிப்படுத்தினாள் அது தியா இல்லையே..
தன்னைக் கோவிலுக்கு அழைத்து வந்திருந்த தேவவ்ரத ஆச்சார்யாவிடம்,”நீங்க பில்ட் அப் விட்டதுக்கு நான் ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணிட்டேன்..”,என்று தனது தோளைக் குலுக்கியவள் அவரை அம்போவென்று விட்டு விட்டு கோவிலைச் சுற்றிப் பார்க்கத் துவங்கினாள்..
அவளது முக அசைவுகள் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தவருக்கு அவளது விரிந்த கண்களும் அதை அவள் நொடியில் மறைத்ததும் தப்பாமல் சிக்கியது..
அவளது அலட்சியபாவதைக் கண்டு கொண்டவர் மனதில் சின்ன சிரிப்புடன் இந்தப் பொண்ணு சரியான கேடி தான் போல மனதில் நினைத்தபடி அவள் செல்லும் திசைக்கு எதிர்புறம் நடக்கத் துவங்கினார்..
சிறிது நேரம் அந்த கோவிலைச் சுற்றிச் சுற்றி வந்தவளுக்கு புதிதாகவோ வித்யாசமாகவோ எதுவும் தென்படாததால் சோர்வுற்று அந்தக் கோவில் மண்டபத்தின் தூணில் சாய்ந்து அமர்ந்தாள்..
இந்த அகிலன் இருந்தா இந்த சோர்வே இருக்காதே என மனதில் நினைத்தவள் வெளியே வாய்விட்டு,”டேய் அணிலு..எங்கடா இருக்க..??”,என்றாள்..
ல ல ல ல லா..ல ல ல லா..என்ற ரஜினி பட மியூசிக்குடன் பறந்து வந்து தியாவின் தோளில் அடைக்கலமான அகிலன்,”என்ன பார்க்கம இருக்க முடியலையோ உன்னால..??”,என்றது அவளைப் பார்த்துக் கண்ணடித்தபடி..
தனது பற்களை நறநறவென கடித்த தியா,”மூஞ்சி..ஆசைதான் போடா..எனக்கு பசிக்குது..அதான் உன்னைக் கூப்பிட்டேன்..”,என்றாள் சிறிது நக்கலாக..
“பசிக்குதுனா போய் சாப்பிட வேண்டியது தானே..என்னை எதுக்கு கூப்ட..??”,என்று அவளை விட நக்கலாக கேட்டது அகிலன்..
“டேய்..தெரிஞ்சிட்டே கேட்கறியா லூசு..??”,என்று அவனை முறைதவள்,”ஆச்சார்யா வீட்ல களியா கிண்டி போடறாங்கடா..”,என்றாள் அழாத குறையாக..
அவளைப் பார்த்து வயிறு குலுங்க சிரித்தவன்,”ஒரு நிமிஷம் இரு..”,என்று தனது சிருகுகளை அசைத்து அவளது பேவரைட் ஹாட் சீஸ் பீட்ஸாவை வரவழைத்துக் கொடுத்தது..
அதனை சப்புக்கொட்டி சாப்பிட்டு முடித்தவள்,”எனக்கு இந்தக் கோவிலில் வித்தியாசமா எதுவும் தென்படலை டா..நீ என்னடான்னா இங்க வந்தா எல்லாத்துக்கும் முடிவு கெடச்சிரும்னு சொன்ன..??”,என்றாள் சிறிது கோபமாக..
“எல்லா பக்கமும் நீ நல்லா சுற்றிப் பார்த்துவிட்டாயா தியா..??”,என்று கேட்டது அகிலன் அவளை ஊடுருவியபடியே..
“நல்லா பார்த்துட்டேன் டா..”,என்றாள் அவளும் அழுத்தமாகவே அவனது பார்வையின் கேள்வி உணர்ந்தபடி..
“நல்லா யோசி தியா..நீ எதையோ விட்டுட்டன்னு நினைக்கறேன்..”,என்ற அகிலன்,”கண்டிப்பா உன்னுடைய அனைத்துக் கேள்விகளுக்கும் தேடலுக்கும் உனக்கு விடை கிடைக்கும்..”என்றது உறுதியாக..
“இந்த கோவிலையே புரட்டிப் பார்த்துட்டேன்..”,என்று டைலாக் விட்டவள் அகிலனின் பார்வையைக் கண்டு,” ப்ச்..இரு கோவிலை இன்னொரு ரவுண்ட் அடிச்சிட்டு வரேன்..”,என்று எழுந்தாள்..
தோளில் சாய்ந்திருந்த அகிலனை லேசாக வருடி தூணின் அருகில் நிறுத்தியவள்,”நீ வேணும்னா எங்கையாவது சுத்திட்டு வா..அதுக்குள்ள நான் ஏதாவது கண்டுபிடிக்கறனான்னு பார்ப்போம்..”,என்றுவிட்டு சென்றாள்..
மெது மெதுவாக ஒவ்வொரு இடமாக சுற்றிக்கொண்டு வந்தவள் கருவறையில் ஆனந்த சயனத்தில் வீற்றிருந்த பெருமாளைக் கண்டு,”ஒரு வேளை தசாவதாரம் படத்தில் கமல் செய்வது போல் இந்த பெருமாள் சிலையை நகர்த்தினால் அண்டர்கிரவுண்ட் ரூமுக்கு ஸ்டெப்ஸ் போகுமோ..”,என்று மனதில் நினைப்பதாய் வெளியே யோசித்தாள் வாய் விட்டு சற்றே சத்தமாக..
“நீ படம் பார்த்து ரொம்பக் கேட்டுப் போயிட்ட ஷ்ரனு..”,என்றார் தேவவ்ரத ஆச்சார்யா அவளது பேச்சைக் கேட்டு..
அவரது குரலைக் கேட்டு மனதில் திடுக்கிட்டவள்,“ஐயோ..போயும் போயும் இந்த கிழத்துக்கிட்ட நம்ம அசடு வடியனுமோ..நெவெர்..”,என மனதில் அசடு வழிந்து விட்டு,”நான் சாமிக்கிட்ட பேசிட்டிருக்கும் போது ஒட்டுக்கேட்கறது தப்பு..”,என அவரிடம் வாய்க்கு வந்ததை உளறிவிட்டு அவசரமாக இடத்தை காலி செய்தாள்..
பின்னால் ஆச்சார்யா தன்னை பின் தொடர்கிறாரா எனத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே வந்தவள் கோவில் தெப்பக்குளத்துப் படிகளில் பாசம் படிந்திருப்பதை கவனிக்காமல் அதில் கால்வைத்து வழுக்கி படிகளில் உருண்டு நீரில் மூழ்கிப்போனாள் சுயநினைவின்றி..
விடை கிடைக்குமா தியாவிற்கு..??
வியூகம் வகுக்கலாம்...
{kunena_discuss:1111}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.