(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - என் நிலவு தேவதை – 11 - தேவிஸ்ரீ

En nilavu devathai

விக்ரம் தன் கையை பிடித்து அவனறைக்கு இழுத்து செல்வதைக்கண்டு அமிர்தா குழப்பம் அடைந்தாள்.. அவனறைக்கு சென்றதும் அவன் கேட்ட கேள்வியில் திகைத்து நின்றாள்..

“சொல்லு அமிர்தா.. நீ என்னை விரும்புகிறாயா..” என விக்ரம் அவள் கண்களை பார்த்துக் கொண்டே வினவ,

“ஆங்.. எ..ன்..ன......?..” என தடுமாறுவதை கண்டவன்,

“புரியாதமாதிரி நடிக்காத..” என அவன் கேட்டதும் அவளுக்கு கோபம் வந்தது..

இவர் மனசுல என்ன நினைத்துட்டு இருக்காரு.. நான் நடிக்கிறேனு சொல்றாரே, என கோபமாக மனதினுள் நினைத்தவள், ஒருவேளை போட்டு வாங்குறாரோ.. இருந்தாலும் நான் ஏன் லவ் பண்றதை ஒத்துக்கனும்.. இவர்தான் முதலில் சொல்லனும் என நினைத்தவள், அவன் புறம் திரும்ப..

“என்ன.. என்ன பொய் சொல்லலாமுனு யோசிச்சிட்டயா..” என அவன் வினவ, சண்டைக்கு தயார் ஆனாள்.

“நான் ஒன்றும் யோசிக்கல, நீங்க சொன்னதுக்கான அர்த்தம் எனக்கு இப்போதான் புரிந்தது.. அதுசரி, எதை வைத்து இந்த மாதிரி கேள்வி கேட்கறீங்க.. நான் ஏன் உங்களை லவ் பண்ணனும்.. உங்களமாதிரி சிடுமூஞ்சிய யாராவது லவ் பண்ணுவாங்களா?...” என கோபமாய் கேட்டவளை உற்றுப்பார்த்தவன்,

“நம்பிட்டேன்..” என கிண்டலாய் கூறவும் வெகுண்டு எழுந்தாள்..

“ஏன்..ஏன்..ஏன்... நான் சொன்னது தான் உண்மை.. நம்புன நம்புங்க, நம்பாட்டி போங்க, எனக்கென்ன..என அறையை விட்டு வெளியேறவும் விக்ரம் அவள் கையைப் பிடித்து இழுக்க நேராக அவன் நெஞ்சில்வந்து மோதினாள்..  இருவருக்கும் இதயம் படபடவென துடித்தது.. அமைதியாய் மெதுவாய் அவளை அணைத்தவன் அவள் முகவாயை நிமிர்தவும் வெக்கத்தில் அவள் முகம் சிவந்திருந்ததை கண்டு..

“உன் முகச்சிவப்பே ஆதாரம்.. நீ என்னை லவ்பண்றேனு.. நீ என்னை பார்த்து உருகி உருகி பாடுறதை பார்த்தாலே தெரியுது” என கிசுகிசுப்பாய் அவள் காதோரம் கூறியதும் அவளுக்கு என்னென்னவோ போலிருந்தது.. மயக்கத்தில் இருந்தவள் பிறகுதான் அவன் கூறியதை புரிந்து கொண்டு அவனை தள்ளி விட்டு,

“அதெல்லாம் ஒன்னுமில்ல.. அது எனக்கு பிடிச்ச பாட்டுனு பாடினேன்.. அப்புறம் முதன்முதலில் ஓர் ஆண் இப்படி தொடுறதுனால தான் இப்படி நடந்தது..” என அவனை முறைத்துக்கொண்டே கூற,

“ஓ.. அப்படியா மேடம்.. ஒருவேளை நான் இல்லாம வேற ஒருத்தன் இப்படி பண்ணாலும் இப்படி தான் கன்னம் சிவக்குமோ.. என அவன் கேட்டதும், அவள் கோபத்தில்

“அவன் கன்னம் சிவந்திருக்கும், நான் கொடுக்கும் அறையால..”

“ஓ.. அப்போ நான் மட்டும் என்ன ஸ்பெஷல்?..”

“ஆங்.. நீங்க மித்ராவோட அண்ணன்.. நீங்க வேணும்னே இப்படி பண்ண மாட்டிங்க.. நீங்க நான் உங்களை லவ் பண்றதை ஒத்துக்கத்தான் இப்படி பண்றீங்க.. என்றவள்  சொன்னதை உணர்ந்து அதிர்ச்சியில் தன் வாயை கைகளால் மூடினாள்.. கடங்காரன்., கடங்காரன்., என் வாயை பிடுங்கி உண்மையை சொல்ல வைச்சுட்டான் என மனதினுள் திட்டினாள்.. அவனே வெற்றிப் புன்னகையுடன் அவளைப் பார்த்து புன்னகைத்தான்..

இந்த ஸ்மைல வைச்சே என்னை கவுத்துடரான்.. சரி, இன்னிக்கு ஐயாவோட பிறந்தநாள்.. இன்னிக்கே சொல்லிடலாம்.. என முடிவெடுத்தவள்.. பெருமூச்சுடன்..

“இப்போ என்ன வேணும் உங்களுக்கு?..”

நீதான் வேண்டும் என சொல்ல அவனுக்கு ஆசைதான்.. இருந்தாலும் அவள் படிப்பை கருத்தில் கொண்டு.. ஏதும் பேசாமல் அமைதியாய் நின்றான்.. இதை நான் செய்துருக்க கூடாது.. இப்படி கேள்வி கேட்டுருக்ககூடாது.. அவ மனசை அலைபாய வைச்சிட்டேனோ.. என மனதினுள் புலம்பினான்..  அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் ஒரு முடிவுக்கு வந்தவளாய்,

“ஒரு நிமிடம் வெயிட் பண்ணுங்க..” என்றவள் அவளறைக்கு சென்று அவனுக்காக வாங்கிய பரிசை எடுத்துக் கொண்டு அவள் பின்னே மறைத்தபடி அவனிடம் சென்றாள்.. பின் அவன் கண்களை பார்த்துக் கொண்டே..

“ஆமாம்.. நான் உங்களை லவ் பண்றேன்.. உங்களை மட்டும்தான் அதிகமாக லவ் பண்றேன்.. நீங்கதான் என் உயிரா நினைக்கிறேன்.. உங்களைப்பத்தி எப்போ மித்ரா சொல்ல ஆரம்பிச்சாளோ அப்போது இருந்தே உங்களை விரும்ப ஆரம்பிச்சுட்டேன்.. உங்களை முதன்முதலா பார்த்தபோதே என் காதலை நான் முழுமையாய் உணர்ந்துட்டேன்.. நீங்களும் என்னை விரும்புறீங்கனு எனக்கு தெரியும்.. என்றவள் கையில் இருந்த சிவப்புரோஜா பூங்கொத்தை அவன் கையில் கொடுத்துவிட்டு, இன்னோர் கையில் இருந்த பெட்டியை திறந்தவள் அதனுள் இருந்த கோல்ட் செயினை எடுத்து அவன் பக்கம் சென்று அவன் கழுத்தில் அணுவித்து அவனை அணைத்துக்கொண்டு ஐ லவ் யூ விக்ரம்மாமா.. என கூறினாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.