(Reading time: 11 - 21 minutes)

விக்ரம் சிலையாய் நின்றான்.. தன் காதலி காதலை சொல்ல தன்னை எதிர்பார்க்காமல் அவளே கூறிவிட்டாள்.. அதுவும் பரிசுடன், அவன் எதிர்பார்க்கவே இல்லை.. காதலை கூறிவிட்டு தன்னை அணைத்துக்கொண்டிருக்கும் தன் நிலவைக் கண்டான்.. அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது மறுபக்கம் குழப்பமாக இருந்தது.. பின் அவளை மெல்லமாய் விடுவித்து அவளை தன் படுக்கையில் அமர வைத்து அவளிடம் பேச அருகில் அமர்ந்தான்..

அம்முவால் நம்பமுடியவில்லை.. அவள் காதலை கூறிவிட்டாள்.. மிகவும் நிம்மதியாக சந்தோஷமாக உணர்ந்தாள்.. ஆனாலும் அவள் உடம்பு உதறல் எடுத்தது..

“நீ புரிந்துதான் பேசறயானு எனக்கு தெரியல.. நான் உன்கிட்ட இப்பவே பேசி புரிய வைக்கனும்னு நினைக்கிறேன்..” என்றவனை கண்டு கேள்வியாய் “என்ன?..” என கண்ணால் கேட்டாள்..

“அமிர்தா.. நான் சொல்றதை கோபப்படாமல் கேளு.. நீ இப்போ டீன்ஏஜில இருக்குற.. இந்த நேரத்தில் என் மேல் ஒருவித ஈர்ப்பு ஏற்படுவது நார்மலான ஒன்னு.. ஆனா அது லவ்னு நீ நினைச்சிட்டு இருக்கலாம்..” என்றதும் அவளுக்கு கோபம் வந்தது..

“அப்போ என் காதல் உங்களுக்கு விளையாட்டா தெரியுதா..”என கோபமாய் கேட்டவளை அமைதிப்படுத்தியவன்,

“நான் சொல்றதை முழுசா கேளு அம்மு.. காதல் என்பது வேறு, பிடிக்கும் என்பது வேறு.. அதற்கான அர்த்தம் உனக்கு புரியாது..  இந்த வயசுல உனக்கு  என்மேல  ஈர்ப்பு ஏற்படுவது சகஜம்.. அது காதலானு  தெரிஞ்சிக்க நீ  காத்திருக்கனும்.. இரண்டு வருடம் கழித்து இதே எண்ணம் உன் மனசில் இருந்ததுனா அப்போ இதைப்பத்தி பேசலாம்.. ஒருவேளை 2வருசத்துக்கப்புறம்  என்னை உனக்கு பிடிக்காமல் கூட போகலாம்., இப்போ நீ படிப்பில்தான் கவனம் செலுத்தனும்.. காதல்ல அல்ல..”

“ஏன் இப்படி பேசுறீங்க, நான் நல்லா தான் படிக்கிறேன்.. என் காதலால என் படிப்பு கெடாது.. நான் உண்மையா உங்கள காதலிக்கிறேன்.. என் வயது தான் உங்களுக்கு ப்ராபிளம்மா? மெசூரிட்டி இல்லாத பொண்ணுனு நீங்க தயங்குறீங்களா?..” என வருத்தத்துடன்  கேட்டாள்.

“லூசு மாதிரி உளறாதடீ..” என கோபமாய் கூறியவன் பின் அமைதியாய், “இந்த வயசுல சரியான முடிவு எடுக்க முடியாதுடா.. உன் வாழ்க்கையின் முக்கியமான முடிவே உன் லைப் பார்ட்னரை தேர்ந்தெடுப்பது தான்.. அதில் எதற்கு அவசரப்படுற.. என்னைப்பத்தி உனக்கு என்ன தெரியும்? நான் உனக்கு பொருத்தமானவனா? நல்லவன்னா? உனக்கு ஏத்தவனானு யோசித்து பார்த்திருக்கயா.. என் ப்ளஸ் என்ன? மைனஸ் என்னனு தெரியுமா? அதை அனுசரித்து உன்னால இருக்க முடியுமா? இதுமாதிரி நிறைய இருக்கு.. உன் காதலை நான் தப்பு சொல்லலை.. அது அவசரமுடிவா இருக்கக்கூடாது.. இப்போ ஓகே சொல்லிட்டு பின்னாடி நீ வருத்தப்படக்கூடாது..னு தான் நினைக்கிறேன்.. உன் கவனம் படிப்பில் இருக்கட்டும்.. நான் உன் நல்ல தோழனா எப்போதும் இருப்பேன்.. காத்திருப்பதில் தப்பு இல்லயே..” என கூறி முடித்தவன் அம்முவின் கண்களில் கேலி தென்பட, என்ன? என புருவத்தை உயர்த்தி கேட்டான்..

“ஒன்னுமில்ல.. உங்களுக்கு இவ்ளோ அறிவா னு யோசிக்கிறேன்..” என கிண்டல் செய்ய,

“விளையாடாதே அம்மு..”

“நீங்கதான் விளையாடுறீங்க.. நான் ஒன்னும் குழந்தை இல்ல.. எனக்கு 18 வயசு பிறக்க போகுது(இப்போதானேமா உனக்கு 17வயசு பிறந்தது..) அதுவும் இல்லாம எனக்கு காதல்னா என்ன? ஈர்ப்பு னா என்னனு வித்தியாசம் நல்லாவே தெரியும்.. ஒருத்தரோட ப்ளஸ்,மைனஸ் கவனிச்சு வருவது காதல் அல்ல.. உங்களை காதலிக்கிறேன் என்றால் உங்க ப்ளஸ்,மைனஸையும் காதலிக்கிறேனுதான் அர்த்தம்.. உங்களைதவிர வேறு யாரும் எனக்கு பொருத்தம் கிடையாது.. அதுவும் இல்லாமல் நீங்க சொன்ன 2 வருசம் நான் வெயிட் பண்றதுல குறைந்திடமாட்டேன்தான்.. ஆனாலும் என்னால் இப்போவே உறுதியா சொல்லமுடியும், உங்களை நான் காதலிக்கிறேனு.. அப்புறம் ஒன்னு சொன்னீங்களே, தோழன்னு... எனக்கு சிரிப்பு தான் வருது.. என் லவ்வர் என்கிட்ட தோழமையாய் இருப்பது தவறல்ல.. ஆனால் காதல் இல்லாமல் வெறும் தோழமை மட்டும் இருப்பதுதான் தவறு.. இப்போ சொல்றேன் கேளுங்க.. நான் உங்க சேலஞ்சுக்கு ரெடி.. நான் 2 வருசம் வெயிட் பண்ணுவேன்.. ஆனா நீங்க சொல்றீங்களே தோழன் பதவி.. அதை இன்னும் ஒரு வாரத்தில் காதலன் பதவிக்கு மாத்திகாட்டி நீங்களே என்கிட்ட வந்து லவ் பண்றேனு கதறி என்னை லவ் பண்ண சொல்லி கதற வைக்கிறேன்..நான் ஜெயிக்கிறேன்.. என திமிராக கூறி அவனறையை விட்டு வெளியே சென்றாள்..

ஒரு புயல் ஓய்ந்ததுபோல் இருந்தது விக்ரமுக்கு.. ஐயோ கடவுளே.. என்னை காப்பாத்துப்பா.. இவ என்னை பாத்தாலே நான் கவுந்துடுவேன்.. இதுல சேலஞ்சு வேற பண்றாளே.. கண்டிப்பாக நான் தோற்பது உறுதி என மனதினுள் புலம்பினான்.. அதே நேரம் மறுபடியும் அங்கு வந்த அம்மு..

“ஹாய் புருசா..” எனவும்,

“என்ன உளறுற..”

“அதுக்குள்ள மறந்துட்டயா.. நான் உனக்கு தாலி கட்டிடேன்பா.. உன் கழுத்தை பாரு..”என்றவளை கண்டு குழப்பம் அடைந்தவன் தன் கழுத்தில் வழக்கமாய் இருக்கும் செயினுக்கு அருகில் மற்றோரு செயின் இருப்பதை கண்டான்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.