(Reading time: 11 - 21 minutes)

“பார்த்தாச்சா.. இப்போ புரியுதா..”என்றவள் அவனருகே வந்து அவனின் கழுத்தில் தன் கையை மாலையாய் கோர்த்துக்கொண்டு, “என்ன ஹஸ்பண்ட் முழிக்கிறீங்க.. நமக்கு பர்ஸ்நைட் எப்போ.. இன்னிக்கே வைச்சுகலாமா.. என கூறியதைக்கேட்டு அவளை அதிர்ச்சியுடன் பார்த்தான்..

“அடிப்பாவி..நீ ஒன்றும் தெரியாத குழந்தைனு நினைச்சா,நீ என்ன பேச்சு பேசுற..”

“உன்னையாரு என்னை குழந்தையா நினைக்க சொன்னது.. இது ட்ரையல் தான் மாமோய்.. இதுக்கே அதிர்ச்சி ஆனா எப்படி,. சரி இதை விடுங்க, எனக்கு என் செயின் வேண்டும்..”

“குடுத்ததை திரும்ப வாங்குறதுக்கு எதுக்கு தரணும்.. இதுக்கு தராமலே இருக்கலாம்..”

“மை லூசு கணவா.. நான் போட்டதை கேட்கல.. நீங்க ஆல்ரெடி போட்டுருந்த செயின் வேணும்..”

“அது எதுக்கு உனக்கு..”

“அந்த டிசைன் நல்லா இருந்ததே.. பார்க்கலாமுனு கேட்டேன்” என பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டாள்..

“ப்ளீஸ் மாமு.. பார்த்துட்டு தரேனே..” என அவள் கெஞ்சவும்,

அய்யோ, இப்படி கொஞ்சுறளே.. மாமு..ங்கற.. புருசா..ங்கறா.. கணவா..ங்கறா.. கண்ட்ரோல் விக்ரம் என மனதில் சொன்னவன் அதை கழற்றினான்.. அவளும் அதை வாங்கி ஆராய்ச்சி செய்வதுபோல் பாவனை செய்தவள், அவள் கழுத்தில் அணிய முயற்சி செய்தாள்.. அதாவது முயற்சி செய்வது போல் நடித்தாள்..

“என்னால போட முடியல.. நீங்களே போட்டு விடுங்க ப்ளிஸ்.. போட்டு பார்த்ததும் தந்துடறேன்..” என்றவளை கண்டவன் அவளுக்கு அதை அணுவித்தான்.. அதை கண்மூடி ரசித்தவள் அவன் புறம் திரும்பி,

“இப்போ நீங்களும் எனக்கு தாலி கட்டியாச்சு.. தேங்க்யூ மை ஹஸ்பெண்ட் என்றவள் அவன் கன்னத்தில் முத்தம் ஒன்றை தந்து விட்டு அங்கிருந்து  ஓடினாள்.. விக்ரமோ ஒரு நிமிடம் திகைத்தவன் பின் புன்னகைத்தான்.. சரியான வாலு என் பொண்டாட்டி என்று அவன் மனதில் நினைத்ததைக்கண்டு சிரித்தான்.. இப்படி பண்றாளே.. இது கன்டினியூ ஆச்சுனா நாளைக்கே அவளை கல்யாணம் பண்ணிடுவேன்.. சின்ன பொண்ணாச்சுனு பார்த்தா என்னன்ன பேசுறா.. என நினைத்தான்.. இந்தவருட பிறந்தநாள் அவனுக்கு மறக்க முடியாத பிறந்தநாள் ஆக இருந்தது..

அமிர்தாவும் நிம்மதியடைந்தாள், தன் காதலை கூறிவிட்டோம் என்று.. விக்ரமின் செயின் அவன் அத்தையான நந்தினிதேவியின் சிறுவயது பிறந்தநாள் பரிசு.. அன்றிலிருந்து இன்று வரை ஒரு முறைகூட கழற்றியது இல்லை.. அதை யாருக்காகவும் கழற்றாதவன் இன்று தனக்காக கழற்றி அதை தனக்கு அணுவிக்கும் போதே தெரிந்துவிட்டது தன்மேல் இருக்கும்  அவனின் காதல்.. என நினைத்தவள் அவனிடம் பேசிய வார்த்தையும், முத்தத்தையும் நினைத்து பார்த்து வெட்கம் கொண்டாள்..

ங்காதரனின் முன் சேகர் தனது வேலையை விளக்கிக்கொண்டு இருந்தான்..

“இது சரி வருமா.. அவ ஒருத்திக்காக அவ கூட இருக்கறவங்க பாதிக்கபடுவாங்க.. எனக்கு அவ மட்டும் தான் எதிரி.. அதுதான் யோசிக்கிறேன்..”

“வேறு வழி இல்லை.. அவளுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு இருக்கு.. காலேஜில் இப்போ அவளுக்கு பாதுகாப்பு குறைவாக இருக்கு.. அதனால அங்க நான் கலவரத்தை உண்டாக்க போறேன்.. அந்த கலவரத்தில் அவ சாக போறா.. இதனால மத்தவங்களும் பாதிக்கப்பட போறாங்க தான்.. என்ன பண்றது? நானே டேரக்டா அவளை இன்னிக்கு  கொல்றேனு சொன்னதுக்கு நீங்க ஒத்துக்கொள்ளல.. இப்போ கூட சொல்லுங்க, நான் முடிச்சிடுறேன்..”

“வேண்டாம்..ஏற்கனவே ஒருவன் என்னால இப்போ ஜெயிலில் இருக்கான்.. அதே தப்பை நான் மறுபடியும் பண்ண விரும்பல..”

“நான் போலிஸில் மாட்ட மாட்டேன்.. என்ன நீங்க நம்பனும்..”

“நான் தான் வேண்டாம்னு சொல்றேனே.. அதோடு அந்த பேச்சை விடு..இந்த பிளானை 4 நாளைக்குள் முடிக்கனும்..சரியா..”

“ம்ம்..சரி...” என்றவன் அங்கிருந்து சென்றான்..

தொடரும்

Episode # 10

Episode # 12

{kunena_discuss:1158} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.