(Reading time: 17 - 33 minutes)

தொடர்கதை - என் நிலவு தேவதை – 12 - தேவிஸ்ரீ

En nilavu devathai

மிர்தா தன் செயலை நினைத்து வெட்கப்பட்டாள்.. அவள் காதலை அவனிடம் கூறியதை அவளால் நம்ப இயலவில்லை..எதோ ஒரு வேகத்தில் கூறிவிட்டாள்.. ஆனாலும் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.. அவனும் தன்னை விரும்புவது போல் தன இருந்தது.. ஏன் மறுக்கிறார் என்று தெரியவில்லை.. ஆனாலும் தன் காதலை ஏற்றுகொள்வார் என நினைத்தாள்.. தன் காதலை ஸ்பெஷல் ஆக கூற வேண்டும் என நினைத்து இப்படி அவசர கதியில் கூறவேண்டியதாயிற்றே என உள்ளுக்குள் மருகினாலும் அவள் ப்ரொபோஸ் பண்ணிய விதத்தை நினைக்கும் போது அவள் குடுத்த முத்தமும் ஞாபகம் வந்தது.. தனக்குள் சிரித்தவள், பின் அவனிடம் firstnight பற்றி பேசியதை நினைத்து பார்த்தாள்.. உண்மையாலுமே அவளுக்கு அதை பற்றி ஒன்றும் தெரியாது.. விளையாட்டிற்காக அவனிடம் சொன்னது.. அவனும் அதை பற்றி கிளறவில்லை என்பதால் தப்பித்தாள்..

இங்கு விக்ரமும் தூக்கம் வராமல் தவித்தான்.. அவனும் அவள் தன் காதலை இன்று கூறுவாள் என எதிர்பார்க்கவில்லை, ஒரு புறம் அவனுக்கு மகிழ்சியாக இருந்தாலும், மறுபுறம் இனி என்ன செய்யலாம் என தவித்தான்.. அவனுக்கு அவள் சந்தோசமே பெரிது.. அவள் படிப்பு முடிந்ததும் தன காதலை சொல்லலாம்.. இப்போது ஒரு எல்லையுடன் நல்ல நண்பனாக நடந்துகொள்ள வேண்டும்.. தன் கோபத்தையும் அவள் பழகிக்கொள்ள வேண்டும் என எதிர்பார்த்தான்.. ஏதேதோ நினைத்த படியே உறங்கியும் போனான்...

அடுத்த நாள் காலை...

மித்ரா ரெடி ஆகினாள்.. இப்போது அவளது கை ஓரளவு சரி ஆகிருந்தது..என்றும் அல்லாத புதிதாய் மித்ரா சேலை அணிந்து கொண்டு கீழே படியிறங்கி வந்தாள்.. அதை கண்ட விக்ரமுக்கு ஆச்சர்யம் தங்கவில்லை.. அதை கேட்டும் விட்டான்..

“என்ன மித்து.. புதுசா சேலை எல்லாம் கட்டிக்கிட்டு.. என்ன ஆச்சர்யம்???....”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணா....” என அவள் வெட்கப்பட்டே சிரிக்க, அதை கண்டவன்,

“இல்ல, எதோ இருக்கு.. முகத்துல வெட்கம் தெரியுது.. என்னடா??..” என மென்மையாக கேட்டான்..

“இல்லைணா.. அன்னைக்கு புகழ் எனக்கு கிப்ட் பார்சல் அனுப்பிருந்தாரு.. அதுல இந்த saree இருந்தது.. அதான்.. இன்னைக்கு கட்டலாமுன்னு..” என இழுத்தாள்..

“சரி டா.. ஆனா...”

“அண்ணா ப்ளீஸ்.. மறுபடியும் உன் lecture கேட்க நான் தயாரா இல்லை.. நான் லிமிட்டா தான் பழகுறேன்.. எப்படி இருந்தாலும் எங்களுக்கு என் படிப்பு முடிந்ததும் marriage ஆக போகுது.. அது மட்டும் இல்ல, நான் நல்லாவே படிச்சிட்டு தான் இருக்கேன்.. நீங்க கவலைப்பட அவசியம் இல்ல அண்ணா.. ப்ளீஸ் புரிஞ்சுகோங்க..” என மெதுவாய் கூறினாள்..

“சரிடா.. நீ புத்திசாலி.. நீ உன் லூசு friend போல இல்லைதான்.. நான் அட்வைஸ் பண்ணனும்னு அவசியம் இல்லை..” என் கிண்டலுடன் கூறவும்,

“அண்ணா.. இது மட்டும் அவ காதுல விழுந்ததுனா நீங்க காலி..”

“எனக்கென்ன அவளகண்டா பயமா.. அவ தான் என்ன பாத்து பயப்படனும்..” என அவன் கூறி முடிக்கவும்,

“யாரு யார பாத்து பயப்படனும்???...” என அம்முவின் குரல் கேட்கவும் சரியாய் இருந்தது..

வந்துட்டாடா.. இம்சைஅரசி.. என மனதினுள் நினைத்தவன் அவளை பார்க்க, அவள் அவனையே குறுகுறுவென பார்த்துகொண்டு இருந்தாள்..

“என்ன சங்கு.. உன் அண்ணா யாரை சொல்றாரு..” என அவள் மித்ராவிடம் கேட்க.. அவள் பிரச்சனையை வளர்க்காமல்,

“ஒன்னும் இல்ல அம்மு.. சும்மா பேசிட்டு இருந்தோம்..” எனவும் அம்மு அப்போதுதான் மித்ராவை கவனித்தாள்..

“ஹர்ரே வா.. என்ன மேடம் புதுசா saree எல்லாம் கட்டிட்டு இருக்கீங்க..என்ன விசயம்??..” என கிண்டலாக கேட்டவளை முறைத்தவன்,

“இப்போ அவ saree கட்டினா உனக்கென்ன வந்தது?..”

“oh... தங்கச்சிய சொன்னதும் உங்களுக்கு கோபம் வருதோ..” என சத்தமாக சொன்னவள், அவனருகே வந்து, “காலையில் உங்கள கவனிக்காம சங்குவ பாத்ததுல கோபமா டார்லிங்.. டோன்ட்வோர்ரிடா செல்லம்.. யூ ஆர் ஆல்வேஸ் ஹன்ட்சம் பேபி..” என ஹஸ்கி வாய்ஸ் இல் கூறியவளை கண்டு தலையில் அடித்து கொண்டான்..

“பை தி வே.. உன் saree சூப்பர் டியர்..” என்றவள், “புகழ் அண்ணா வாங்கி தந்ததா.. ம்ம்.. கொடுத்துவெச்சவ.. எனக்கும் தான் வந்து அமைந்திருக்கே..” என பொய்யாய் வருத்தப்பட்டவளை கண்டு மித்ரா சிரிக்க விக்ரம் முறைத்தான்..

ஆமா.. ஆனா ஊனா முறைக்கிறது.. அதைத்தவிர வேற என்ன தெரியும்.. என மெதுவாக புலம்பியவள், சங்குவிடம் திரும்பி,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.