(Reading time: 17 - 33 minutes)

“என்ன சொல்றிங்க..”

“நான் என்ன சொல்றேன்ன, அம்மு விக்ரம்மை கல்யாணம் பண்ணினா அவ நந்தினி கூட தானே இருப்பா..”

“நீங்க சொல்றது உண்மையா.... வாசுதேவன் பையனையா சொல்றீங்க?..”

“ஆமா.. அம்மு விக்ரமை விரும்புறா..”

“ரொம்ப சந்தோசம்.. கடவுள் அம்முவோட எல்லா பிரச்சனையையும் தீர்த்து அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையனும்..”

இவ்வாறு இவர்கள் பேசிக்கொண்டு இருக்க அம்மு நிம்மதியாய் யமுனாவிடம் விளையாடிக்கொண்டு இருந்தாள்.. யமுனா தூங்கி எழுந்ததும் இருவரும் விளையாட ஆரம்பித்தனர்.. யமுனா குண்டு கன்னங்களை கடித்தவள், அவள் முகமெங்கும் முத்தம் பதித்தாள் அம்மு..

“அ..ம்..மு... அம்மு சொல்லுடா யமுனா குட்டி..”

“ஹ..மு.....”

“சரி விடு.. உனக்கு எப்படி தோணுதோ அப்படியே கூப்பிடு..” என யமுனாவிடம் புலம்பினாள்..

அதன் பிறகு வந்த நாட்களில் அன்புவை போய் பார்த்தவள் அவளுக்காக கண்ணீர் சிந்தினாள்.. அக்காவிடம் யமுனா என் பொறுப்பு என்று கூறியவள் அவளை தன்னுடன் அழைத்து செல்வதை பற்றி அவளிடம் கூறினாள், சீக்கிரம் அன்பு குணமாக வேண்டிக்கொண்டாள்.. இடையிடையே விக்ரம்,சங்குவிடம் பேசினாள்..

ஒரு மாதம் முடிந்ததே தெரியவில்லை.. அம்மு புறப்படும் நாளும் வந்தது.. அனைவரிடமும் விடை பெற்றவள், யமுனாவை கூட்டிக்கொண்டு சென்றாள்..

விக்ரம் அம்முவுக்காக காத்திருந்தான்.. ஏர்போர்ட்டிலிருந்து அவளை ரிசீவ் செய்ய அங்கு காத்திருந்தான்.. அம்மு,தாயம்மா,யமுனா மூவரும் வந்தனர்.. யமுனா தூங்கிகொண்டு இருந்தாள்.. அவர்களை வரவேற்றவன் வீட்டிற்கு கூட்டி சென்றான்.. ஒரு மாதம் அவளை விட்டு பிரிந்தது அவனுக்கு நரக வேதனையாக இருந்தது.. எப்படியோ வந்து விட்டாள்.. இனி அவளை விட்டு பிரிவதாய் இல்லை..

மித்ரா வாசலிலே நின்று கொண்டு இருந்தாள்.. மூவரையும் வரவேற்றவள்.. அனைவரையும் அவர்களது அறைக்கு அனுப்பி வைத்தாள்.. யமுனா தனது அறையிலே தங்கட்டும் என தாயம்மா கூறி விட்டதால் அம்மு தன அறைக்குள் நுழைந்தாள்.. சிறிது நேரம் அமர்ந்திருந்தவள் கதவருகே நிழலாட நிமிர்த்து பார்த்தாள்.. அங்கு விக்ரம் நின்றுந்ததை கண்டவள் ஓடிப்போய் அவனை கட்டிகொண்டாள்.. அவனுக்கும் அந்த அணைப்பு தேவையாய் இருந்தது.. அவனும் அவளை கட்டிகொண்டான்..

“நான் உங்கள ரொம்ப மிஸ் பண்ணினேன்..” என அவள் அழவும்,

“ஷ்... எதுக்கு அழுற.. அதான் வந்துட்ட இல்ல.. இனி இங்க தானே இருக்க போற.. அழாத மா..”

“நீங்களும் என்ன மிஸ் பண்ணிங்களா..” என அவள் சிணுங்கிக்கொண்டே கேட்க, அவளை ஒருமுறை இறுகி அணைத்தவன் ம்ம்.. என முனகினான்..

அம்முவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.. அவன் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவது அவளுக்கு புரிந்தது.. சீக்கிரம் தன்னை ஏற்றுக்கொள்வான் என எண்ணினாள்..

சிறிது நேரம் அமைதியாய் இருந்தவர்கள் போன் ரிங் ஆகவும் இருவரும் விலகினர்.. பின் அவளை பார்த்து புன்னகைத்தவன் கால் ஆன் செய்து பேசுவதற்கு வெளியே சென்றான்.. அம்மு தனக்குள்ளே சிரித்தவள் உறங்க சென்றாள்..

தொடரும்

Episode # 11

Episode # 13

{kunena_discuss:1158} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.