(Reading time: 17 - 33 minutes)

“அது எப்பவும் போல சூப்பர்.. அன்பு எப்படி இருக்கா??..”

“அவளை ABSERVATIONள வெச்சிருக்காங்க.. யமுனாவுக்காகவாவது அவ பிழைச்சு வரணும்..” என கண்ணீர் விடவும்,

“அம்மா ப்ளீஸ்.. அழாத, அவ சீக்கிரம் சரி ஆகிடுவா.. யமுனா எனக்கும் மகள் தான்னமா.. அவ என் பொறுப்பு.. அவளுக்கும் ஒரு வயசு ஆகிடுச்சு, இனிமே அவ என் கூட இருக்கட்டும்.. லீவ் முடிந்ததும் யமுனாவை நானும் தாயம்மாவும் சென்னை கூட்டிட்டு போறோம்.. நாங்க பாத்துக்கறோம்.. நீ அக்காவை நல்லா கவனி..”

“அது அப்புறம் பேசிக்கலாம்.. விடு..” என்றவர் தாயம்மாவிடம் நலம் விசாரித்தவர் குடிக்க ஜூஸ் கொடுத்துவிட்டு இருவரையும் தூங்க அனுப்பினார்..

விக்ரம் தன் குடும்பத்தினரை காண ஏற்காடு சென்றிருந்தான்.. அனைவரும் அவனையும், மித்ராவையும் நலம் விசாரித்தனர்.. மித்ராவையும் அழைத்து வந்திருக்கலாமே என அனைவரும் கேட்டனர்..மித்ரா கையில் அடி பட்டது இங்கு யாருக்கும் தெரியாது என்பதால் அவளுக்கு எக்ஸாம் இன்னும் முடியவில்லை என சமாளித்தான்.. நந்தினி அவனை பார்த்தபோதே செயின்னை பார்த்து விட்டார்.. அவனாக சொல்வான் என நினைத்தால் அவன் அதை பற்றி ஏதும் கூறாததால் சரி என விட்டு விட்டார்.. இரண்டு நாட்கள் அங்கு தங்கி இருந்தவன் பின் சென்னை திரும்பி விட்டான்.. அம்முவின் நினைவு அவனை வாட்டி எடுத்தது.. ஆனால் அவள் வர ஒரு மாதம் ஆகும் என்பதால் அவனால் ஒன்றும் செய்ய இயலவில்லை.. இருந்தாலும் போன் பண்ணலாம் என நினைத்து அவள் நம்பருக்கு டயல் செய்தான்..

அம்மு தன் மொபைலுக்கு ரிங் வர எடுத்து பார்த்தவள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்..

“ஹலோ மை டியர் லவர்.. ஹொவ் ஆர் யூ டார்லிங்” என வேண்டுமென்றே அவனை இர்ரிடேட் செய்தாள்..

“ஹேய் லூசு.. உனக்கு எத்தன தடவ சொல்றது.. இந்த மாதிரி பேசாதேன்னு..”

“நீங்க சொன்னா நான் கேட்டரனுமா.. போங்க பாஸ்.. நான் அப்படிதான் பேசுவேன்..  லவ் யூ அண்ட் மிஸ் யூடா...”

“இப்படியே பேசுன நான் போன்ன கட் பண்ணிடுவேன்..”

“கோவிச்சுகாத டார்லிங்.. சரி.. இனிமே நான் பேசல.. நீங்க பேசலாம்..”

“நீ பேசாம இருக்கறதே அதிசயம்தான்.. சரி விடு.. நான் உங்க அப்பா அம்மா பத்தி விசாரிக்க தான் கால் பண்ணேன்.. அவங்க நல்லாருக்காங்களா..”

“நான் நம்பிட்டேன் போங்க.. கால் பண்ணது எனக்கு.. நலம் விசாரிக்கறது என் அப்பா அம்மாவையா.. நல்ல இருக்கு போங்க.. பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும்... சரி.. சரி.. எல்லாரும் நல்ல இருக்காங்க.. நானும் நல்ல இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க, சங்கு எப்படி இருக்கா???..”

“இங்க எல்லாரும் உன் இம்சை இல்லாம சந்தோசமா இருக்கோம்..”

“ஹா.. உங்கள.. போங்க.. நான் உங்ககிட்ட பேசல.. நான் இல்லாம சந்தோசமா இருங்க.. BYE..” என கோபத்துடன் போன்னை வைத்தாள். விக்ரமும் சிரித்து கொண்டே கால் கட் செய்தான்..

தாயம்மாவின் அறையில் மனோகரும்,ஆனந்தியும் உள்ளே நுழைந்தனர்..

“தாயம்மா அங்க ஒரு பிரச்சனையும் இல்லையே.. அம்முவுக்கு பிரச்சன வருதுன்னு சொன்ன..”

“ஆமா ஆனந்தி.. அவளை நினச்சா தான் எனக்கு கவலையா இருக்கு.. நான் செஞ்சு கொடுத்த சத்தியத்தை காப்பாத்த முடியுமான்னு தெரியல.. என் உயிரை கொடுத்தாவது நான் அமிர்தாவை காப்பாத்துவேன்.. இத்தன நாளா நான் அவளை பாதுகாத்துட்டேன்.. சீக்கிரம் அந்த கொலைகாரன கண்டு பிடிச்சுடாங்கனா பரவாயில்லை..”

“நீ ஆதி செத்தது கொலைன்னு சொல்ற.. ஆனா அதுக்கு பின்னாடி யாரு இருக்காங்கனு தெரியல.. அவனுக்கு பிஸ்னஸ் எதிரியும் இல்ல.. ரிலேடிவ்ஸ் எதிரியும் இல்லை.. அது யாரா இருக்கும்...” என மனோ கேட்க,

“எனக்கும் அதுதான் குழப்பமா இருக்கு.. பாவம் நந்தினி.. ஆனா என் மனசுல ஒரு விஷயம் மட்டும் தோனிக்கிட்டே இருக்கு.. ஆதி செத்துடாரு என்கிற விசயமே என் மனசு ஏத்துக்க மாட்டிங்குது.. அவர் உயிரோடு இருந்தா நல்லா இருக்கும்..” என தாயம்மா கண்ணீர் விட,ஆனந்தி அவரை ஆறுதலாய் அணைத்துக்கொண்டார்..

அம்முவை அவ பாமிலிகிட்ட இருந்து பிரிச்சி இருக்காளேன்னு கவலை பட்டேன்.. ஆனா இப்போ அவ அத்தை பையன்,பொண்ணு கூட இருக்கானு நினைக்கும் போது கொஞ்சம் நிம்மதியா இருக்கு.. சீக்கிரம் அந்த கொலைகாரனை கண்டுபிடிச்சு ஜெயில்ள தள்ளனும்.. அப்புறம் அம்முவை நந்தினிகிட்ட ஒப்படைக்கணும்..”என மனோ கூறுவதை கேட்ட ஆனந்தி அதிர்ந்தார்..

“என்ன சொல்றிங்க.. என்னால அம்முவை விட்டு இருக்க முடியுமா.. இந்த ஒரு வருசமே என்னால முடியல.. இருந்தாலும் நந்தினியும் பாவம்.. புருசன இழந்து குழந்தையையும் இழந்துட்டோம் என்று நினச்சிட்டு இருப்பாங்க..” என வருத்தத்துடன் கூறினார்..

“நீங்க எதுக்கு கவலை படறிங்க.. எப்படியும் அம்முவுக்கு கல்யாணம் பண்ணனும்.. அப்போ நந்தினி கூட தான அம்மு இருந்தாகணும்..” என தாயம்மா கூற,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.