(Reading time: 17 - 33 minutes)

“ஹேய் இந்த கண்ணாடி வளையல் சூப்பரா இருக்கு.. நான் போட்டு பார்க்கணும் குடு..” என்றவள் அதை கழட்ட,  அதுவரை அமைதியாக இருந்தவன் தங்கையின் முகத்தை பார்த்தான்.. அவளும் அமைதியாக இருக்கவும், அவனுக்கு கோபம் வந்தது.. தங்கை இன்று ஆசை ஆசையாய் அலங்காரம் செய்து கொண்டு இருக்கிறாள்.. அநேகமாக புகழ் இங்கு வரலாம்.. இதை பற்றி எதையும் தெரிந்துகொள்ளாமல் அம்மு இப்படி வளையல் கேட்டுக்கொண்டு இருக்கிறாளே என கோபம் வந்தது.. உடனே அம்முவின்புறம் திரும்பியவன்,

“ஹேய் லூசு. கைல இருக்கற வலையலை இப்போ எதுக்கு கழட்டுற.. உனக்கு  வளையல் தானே வேணும்.. வா..” என்று அவள் கையை பிடித்து இழுத்து சென்றான்..

நான் இது.. இது.. இத தான்.. எதிர்பார்த்தேன்.. என மனதினுள் சிரித்துகொண்டாள் அமிர்தா.. தங்கச்சிக்காக நீ எதையும் செய்வேனு எனக்கு தெரியாதா பாஸ் என நினைத்து கொண்டே காரில் ஏறினாள்..

அந்த ஊரிலே பெரிய வளையல் கடை முன் காரை நிறுத்தினான் விக்ரம்.. கடை சுற்றிலும் கண்ணாடி வலையல்கள் அழகாய் அணிவகுத்து நின்றன.. அதை கண்டதும் தன் காதலியின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை கண்டவன், உலகத்திலேயே கண்ணாடி வலையலுக்காக இவ்வளவு சந்தோஷ படுற ஆளு இவளா தான் இருப்பா.. கோல்ட் ஆ இருந்தா கூட இவ்ளோ சந்தோஷ படுறாளேனு நாமளும் சந்தோசபடலாம்.. கண்ணாடி வளையலுக்கு சொத்தையே எழுதி வெச்சிடுவா போல.. என நினைத்தான்.. அவளோ ஆர்வமாய் அங்குள்ள வளையல்களை பார்த்தவள் அதை எடுத்து அணிய முயற்சி செய்தாள், பின் அதை போட முடியவில்லை என்பது போல் பொய்யாய் நடித்தாள்..

“பார்த்துட்டு அங்கேயே நிற்கறீங்களே.. எனக்கு ஹெல்ப் பண்ணுங்களேன்..” என சிணுங்கினாள்..  

“சரி..சரி..” என்றவன் அவள் அருகே வந்து அவள் கையை மென்மையாய் பற்றினான்.. அவள் கையின் மென்மையை உணர்ந்தவன், மெல்ல தடவி ஒவ்வொரு வளையலாக மெதுமெதுவாய் அணுவித்தான் அவள் கண்களை பார்த்துக்கொண்டே..

அமிர்தவுக்கும் சொல்லமுடியாத அன்பு அவஸ்தையாய், அதே சமயம் இன்பமாகவும் உணர்ந்தாள்..

அம்மு கடையில் அனைத்து புது வகையான வளையல்களையும் வாங்கினாள்.. விக்ரம் பில் பே செய்தவன் காரில் ஏற அம்முவும் ஏறினாள்..

வீட்டிற்கு வந்து சேரும் வரை இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை.. வீட்டிற்கு உள்ளே நுழைந்ததும் அம்முவுக்கு ஒரு செய்தி காத்திருந்தது..

இருவரும் உள்ளே நுழைந்ததை கண்ட மித்ரா,

“thankgod.. நீங்க வந்துட்டிங்க.. அம்மு எக்ஸாம் ஒரு நாள் முன்னாடியே வெச்சிட்டங்களாம்.. நாளைக்கே எக்ஸாம்..”

“என்ன..” என அதிர்ந்தவள்.. “எல்லாம் இந்த மிலிட்டரியால வந்தது.. இப்ப எதுக்கு கடைக்கு கூட்டிட்டு போனிங்க..” என புலம்பியவள், படிப்பதற்காக அவள் அறைக்கு செல்ல, அதை கண்ட விக்ரம் அடப்பாவி, பண்றது எல்லாம் இவ, திட்டு மட்டும் எனக்கா.. என நினைத்தவன், தங்கையின் புறம் திரும்பி,

“இப்போ கை எப்படி இருக்கு.. நாளைக்கான எக்ஸாம் மட்டுமாவது எழுதுறயா.. இல்ல நெக்ஸ்ட் செமஸ்டர்ல சேர்த்து எழுதறயாடா..”

“இல்ல அண்ணா, எழுதறதுன்னு ஆயிடுச்சு.. நெக்ஸ்ட் செமஸ்டர்லையே எழுதிடறேன்..” என புன்னகைத்தாள்..

“சரி டா... டேக் கேர்..” என்றவன் தன் ஆபீசுக்கு சென்றான்...

அம்முவோ விழுந்து விழுந்து படித்துகொண்டிருந்தாள்.. படிப்பில் எப்போதும் ஆர்வமாய் இருப்பாள்.. அதனால் அவளே கிளாஸ் பர்ஸ்ட்.. அன்று அவள் அறையை விட்டு வரவே இல்லை..

மித்ரா புகழின் வருகைக்காக காத்து கொண்டிருந்தாள்.. அவன் தற்போது தான் IPS ட்ரைனிங் முடித்து விட்டு பின் ஹைதராபாத்தில் போஸ்டிங் கிடைத்து நான்கு மாதங்கள் ஆகிருந்தது.. முதல் மாத சம்பளத்தில் தான் அந்த saree வாங்கி அனுப்பிருந்தான்.. அதை தான் இன்று மித்ரா அணிந்திருக்கிறாள்..

அதிக நேரம் காக்கவைக்காமல் அங்கு வந்து சேர்ந்தான் புகழேந்தி.. அவனை கண்ட மித்ராவின் முகமோ பளிச்சென்று பிரகாசித்தது.. உதட்டில் புன்னகையுடன் அவனருகே சென்றாள்.. ரோஜா நிற புடவையில் தேவதையை போல் காட்சியளித்தவளை தன கண் விட்டு அகலாது பார்த்துக்கொண்டே அவளருகில் வந்தவன் சிகப்பு நிற ரோஜா பூங்கொத்தை அவள் கையில் தந்து, “BEAUTYFUL” என்றான்.. அதை கேட்ட மித்ரா வெட்கப்பட்டு சிரித்தவள் உள்ள வாங்க என அழைத்துக்கொண்டு அமரவைத்தாள்..

“மேடம் இன்னிக்கு ரொம்ப அழகா இருக்காங்க.. அது நான் வாங்கி கொடுத்த saree கட்டுனதுனாலையா.. இல்ல என்ன பாத்து வெட்கப்பட்டதுனாலையா..???...” என கேட்கவும் பொய்யாய் முறைத்தவள்..

“இப்படியே பேசுங்க.. எனக்கொண்ணும் PROBLEM இல்ல.. நீங்க குடிக்கிற காப்பியில சர்க்கரைக்கு பதிலா மிளகாய்ப்பொடி இருக்கும்...”

“அடிப்பாவி.. காபியே இப்படினா நீ எனக்காக லஞ்ச் சமைக்கிறேன்னு சொல்லிருக்கயே.. இன்னைக்கு கடவுள் தான் காப்பாத்தணும்..” என புலம்ப, மித்ரா அவன் முதுகிலே அடித்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.