(Reading time: 17 - 33 minutes)

சிறிதுநேரம் பேசியவர்கள் லஞ்ச் சாப்பிட அமர்ந்தனர்.. மித்ரா பரிமாற, புகழ் அவளுக்கு ஊட்டிவிட்டவன், தானும் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினான்.. கடைசிவரை அம்முவை அவன் நேரில் பார்க்க முடியவில்லை...

இங்கு நம் ஹீரோயினோ ஒரு கையில் ஜிலேபியும் மறு கையில் புக்கும்மாக படித்துகொண்டு இருந்தாள்.. இல்லையில்லை, சாப்பிட்டு கொண்டு இருந்தாள்...

காலேஜ் கடைசி எக்ஸாம் நாளை என்று சேகருக்கு தகவல் வரவும் அவனுக்கு கோபம் வந்தது.. ஏனெனில் அதுதான் கடைசி எக்ஸாம். அதன் பின் ஒரு மாதம் லீவ்.. இருந்தாலும் எக்ஸாம் முடிந்ததும் அவள் வெளியே வரும்போது அவளை கடத்த பிளான் செய்தான்..

றுநாள்...

அம்மு பரபரப்பாக ரெடி ஆகிக்கொண்டு இருந்தாள்.. எக்ஸாமுக்கு டைம் ஆனதை உணர்ந்த விக்ரம் அவளை காலேஜ் ட்ராப் செய்ய முடிவெடுத்து அவளை கூட்டி சென்றான்.. காலேஜினுள் நுழைந்ததும் அவள் கையை பிடித்தவன் ஆல் தி பெஸ்ட் சொல்லி பின்

“என் செயின் எனக்கு வேணும்.. தா..”

“அதெல்லாம் முடியாது..”

“விளையாடாத அம்மு.. என் செயின் என் அத்தை கொடுத்தது.. நான் நாளைக்கு ஊருக்கு போகணும்.. எனக்கு வேணும்..”

“எனக்கு எக்ஸாமுக்கு டைம் ஆச்சு.. மதியம் தரேன்..” என்றவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு சிட்டாய் பறந்து விட்டாள்..

இவளை என்னதான் பண்றது.. என தன் கன்னத்தை துடைத்தவன் புன்னகையுடன் தன காரை திருப்பினான்...

எக்ஸாம் ஆரம்பித்தது.. எப்போதும் போல் அம்முவுக்கு எக்ஸாம் ஈசியாக இருந்தது.. எக்ஸாம் முடிந்ததும் அவ்வறையை விட்டு வெளியேறியவள் யாரோ அவள் கையை பிடித்து இழுக்கவும் ஒரு நிமிடம் பயந்தே போனாள்.. பின் திரும்பி பார்த்தவள்,

“இப்படியா பயமுறுத்துவிங்க UNGLE.. என் ஹார்ட் நின்னே போயிடுச்சு..”

“ஹஹஹா.. என சிரித்தவர்.. SORRY டா.. என மன்னிப்பு கேட்கவும்,

“ஐயோ பரவாயில்ல UNGLE.. என்ன விசயம்.. என்னை தேடி வந்துருக்கிங்களே..” என நடந்து கொண்டே அவரோடு வெளியே சென்றாள்..

“ஒன்னும் இல்லைடா.. உன் அப்பா போன் பண்ணினான்.. உனக்கு ஒன் ஹௌவர்ல FLIGHT.. உனக்கு தான் இனி லீவ் ஆச்சே.. அதுதான் நீ அங்க இருக்கணும்னு ஆசைப்பட்டான்.. வா போகலாம்..”

“ஆனா UNGLE.. என் friend...” எனவும்  

“ஆமாடா.. மிஸ்.சங்கமித்ரா தான் உன் LUGGAGE PACK பண்ணி எனக்கு அனுப்பிருக்காங்க.. உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்னு உன்கிட்ட சொல்ல சொன்னங்க.. நாம இப்போ கிளம்பினாத்தான் FLIGHT பிடிக்க முடியும். வா மா..” என்றவர் அவளை அழைத்து சென்றார்..

அம்முவுக்கு விக்ரமை விட்டு செல்வது கஷ்டமாக இருந்தாலும் ரொம்ப நாள் கழித்து தன் பெற்றோர்களையும், தன் அன்புவையும் காண செல்வதால் அமைதியாக இருந்தாள்..

ஏர்போர்ட் சென்றதும் தாயம்மாவும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்.. பின் சத்யா அவர்களை பத்திரமாக வழியனுப்பி வைத்தார்..

அம்மு தன் கழுத்தில் உள்ள செயின்னை பார்த்தாள்.. விக்ரம் I MISS YOU.. என மனதினுள் நினைத்தவள்.. FLIGHT ஏறி அமர்ந்தாள்..

இங்கு விக்ரமும் மித்ராவின் மூலம் விஷயத்தை அறிந்தவன் தன கழுத்தில் இருந்த அவள் செயின்யை தடவிக்கொண்டான்.. பின் I MISS YOU நிலா.. என புலம்பினான்...

சேகர் உச்சக்கட்ட கோபத்தில் இருந்தான்.. அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.. அவன் பிளான் கெடுப்பதற்காகவே சத்யா வந்து விட்டானே என அவனை திட்டினான்.. பின் கங்காதரனுக்கு போன் செய்து விஷயத்தை கூறினான்.. அவனும் பொறுத்திருக்கும்படி கேட்டுக்கொண்டான்..

FLIGHT லேன்ட் ஆனது.. அம்முவின் அப்பா அவர்களுக்காக காத்துக்கொண்டு இருந்தார்.. அம்மு தன அப்பாவை பார்த்ததும் ஓடிப்போய் அவரை கட்டிக்கொண்டாள்..

“அப்பா.. எப்படி இருக்கீங்க பா.. நான் உங்கள ரொம்ப மிஸ் பண்ணேன்..”

“நான் நல்லருக்கேண்டா.. நாங்களும் உன் சேட்டையை மிஸ் பண்ணோம்..” என சிரித்தவர் தாயம்மாவிடம் திரும்பி,

“எப்படி இருக்கீங்க அக்கா”

“நான் நல்ல இருக்கேன் தம்பி.. அன்பு எப்படி இருக்கா..”

“அப்படியே தான் இருக்கா.. நேரிலேயே பாக்கலாம் வாங்க.. போலாமா..” என்றவர் அவர்களை அழைத்து சென்றார்..

அனைவரும் வீட்டிற்குள் நுழைந்தனர்.. அம்மு தன் அம்மாவை பார்த்தவள் அவரை அணைத்துக்கொண்டாள்..

“எப்படி இருக்க ஆனந்தி.. எங்க உன் பேத்தி..”

“அவ தூங்குற.. நீ நல்லாருக்கயா.. எக்ஸாம் எப்படி எழுதன??...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.