(Reading time: 14 - 28 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 37 - தேவி

vizhikalile kadhal vizha

சுறா “என்ன தம்பி.. உங்க ஆள் என்ன சொல்றாப்புலே ?” என்று கேட்க,

“அக்கா.. நீங்க எல்லாம் சிபிஐ மாதிரி .. எல்லா விஷயத்தையும் தோண்டி துருவாம விட மாட்டீங்களே..” என்று கூறிய செழியன், தங்கள் வரலாறை அவளிடம் சொல்லவா என்று கேட்ட போது.. .

“இரு..இரு.. முதலில் அவளுக்கு சாப்பிட கொடுத்து மாத்திரை கொடுக்கலாம். அவ தூங்குற நேரத்தில் உன் காதல் காவியத்தை கேட்கறேன்..”

“நக்கலு... “ என செழியன் முறைக்க, அதை அசால்டாக உதறி தள்ளியவள், மலரை நிஷா அழைத்து வர, எல்லோரும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.

சாப்பிடும் போது,

“மலர்விழி , நீ சாப்பிட்டு போய் தூங்கு.“

“இல்ல அக்கா.. இப்போ கொஞ்சம் பெட்டெரா இருக்கேன்.. நாங்க தங்கி இருந்த இடத்திற்கே போயிடுறேனே..?”

“என்னது அக்காவா ? இது கொஞ்சம் கஷ்டமாச்சே.. ?”

“ஏன்.. உங்கள அப்படி கூப்பிட கூடாதா?”

“நீ எப்படி வேணா கூப்பிடு.. ஆனா அக்கானு கூப்பிட்டா உனக்குத்தான் கஷ்டம்..”

“ஏன்?” என்று புரியாமல் பார்க்க,

“செழியனுக்கு ஏற்கனவே நான் அக்கா முறை ஆகணும்.. உனக்கும் அக்கான்னா .. நீயே முடிவு பண்ணிக்கோ.”

அவள் சொல்ல வருவதை புரிந்து மலர் முகம் சிவக்க தலை குனிந்தாள். ஓரக்கண்ணால் செழியனை பார்க்க, அவனும் அவளையே பார்த்து இருந்தான். அதில் அவளின் சங்கடம் புரிய,

“அக்கா.. நாங்க சாப்பிட்ட உடனே கிளம்பிடறோம்.. செந்தில் அங்கே உள்ளவங்க கிட்டே  நாங்க மாட்டிக்கிட்ட விஷயம் சொல்லிருப்பான்.. நாங்க ரொம்ப நேரம் வரலன்னா , பிரின்சிபால்க்கும். கரஸ்க்கும் ஆளாளுக்கு போன் அடிக்க ஆரம்பிப்பாங்க.. அப்புறம் ரெண்டு பேர் வீட்டுக்கும் விஷயம் போய் அவங்க எல்லோரும் பதறி அடிச்சுட்டு வருவாங்க.. அதனால் நீங்க எங்களுக்கு சாப்பாடு மட்டும் போட்டு அனுப்புங்க..”

“சரி.. சரி.. ரொம்ப அலுத்துக்காதே.. “ என , எல்லோரும் சாப்பிட்டு முடித்தனர்.

ஆனால் ஏற்கனவே அதிக குளிர் ஒத்துக் கொள்ளாத மலருக்கு, இந்த அடியும் படவும், லேசாக காய்ச்சல் வர ஆரம்பித்து விட்டது. அவள் சாப்பிட முடியாமல் தவிக்கவும், நிஷா அவளுக்கு சூப் கொடுத்து குடிக்க சொல்லியவள்,

“செழியன் .. நீ சொல்றது எல்லாம் சரிதான். ஆனால் அவளுக்கு ஊசி போட்டு, மருந்தும் கொடுத்து இருப்பதால் , ஒரு மணி நேரம் படுத்து எழுந்த பின் அவளை அழைத்துச் செல். “

மலருக்கு சற்று தயக்கம் இருந்தாலும், அவளின் உடல் நிலை ஒத்துழைக்காததால் , அங்கே ஓய்வெடுக்க சம்மதித்தாள்.

மலர் படுக்க சென்ற பின், எல்லோரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

“என்ன ஹீரோ.. உங்க காதல் காவியத்தை ஸ்டார்ட் பண்றீங்களா?” என சுறா ஆரம்பிக்க,

ராகுல் “எங்களை எல்லாம் பார்த்ததுக்கு அப்புறமும் உனக்கு எப்படிடா காதல் ஆசை வந்தது?”

அதற்குள் நிஷா “ஏன்.. உங்களுக்கு என்ன குறைச்சலாம்? “

அர்ஜுனோ “அது சரி.. நாங்க கல்யாணம் பண்ணிகிட்டது எல்லாம் வானரங்களா இருந்தா என்ன பண்றது?”

உடனே.. சுறா வேகமாக “உங்க இணை தான் உங்கள தேடி வரும் கேப்டன் ஜி..”

“யாரு ... நாங்க வானரமா ..?”

“பின்னே இல்லியா ?”

“தெய்வங்களே... உங்களுக்கு ஒரு புல் ஸ்டோரி கொடுத்து உக்கார வச்சாச்சு.. இந்த கதையில் நாந்தான் ஹீரோ.. உங்களுக்கு கெஸ்ட் ரோல் தான்.. ரெண்டு எபிசோடா நம்ம வாசகர்கள் எல்லாம் குழம்பி போயிருக்காங்க.. நாம படிக்கிறது எந்த கதைன்னு..? அதனால் கொஞ்சம் உங்க பெர்போர்மான்ஸ் குறைசுக்கிட்டு எனக்கு சான்ஸ் கொடுங்க மக்களே..”

“ஹா.. ஹா.. நீ ஹீரோவாகணும்னா உன் டூர கொடைக்கானல்ல போட்டுரக்கணும்.. நாங்க இருக்கிற இடத்திலே போட்டா எங்க பெர்போரமான்ஸ் தான் காமிப்போம்..”

“அக்கா.. நான் பாவம்கா.. ஏதோ தெரியாதனமா உங்க ஏரியாவிற்குள்  வந்துட்டேன்.. பெரிய மனசு பண்ணி விட்டுடுங்களேன்..”

‘சரி.. சரி. போனா போகுது.. உன் காவியத்தை ஆரம்பி..”

செழியன் மலரை முதல் முதலில் பார்த்ததில் ஆரம்பித்து, அவனின் காதல் சொல்லி, மலரும் அதற்கு பதில் சொல்லியது, தன்னுடைய தற்போதைய டாக்டரேட் படிப்பு முடிந்த பின் வீட்டில் பேசலாம் என்று முடிவு செய்தது எல்லாம் சொன்னான்.

அவன் சொல்லி முடித்த பின், அர்ஜுன்

“ஏன் செழியா . இருவரின் மனம் தெரிந்த பின், வீட்டில் சொல்லிருக்கலாமே..? நீங்கள் இருவரும் டீன் பருவத்தில் இல்லை.. இருவருமே டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியராக வேலை செய்கிறீர்கள். உங்கள் முடிவுகளை ஏற்றுக் கொள்வார்கள் தானே..?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.