Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - ஆதிபனின் காதலி - 12 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - ஆதிபனின் காதலி - 12 - சசிரேகா

Aathibanin kaadhali

அடுத்த நாள் தென்னந்தோப்பு

தென்னந்தோப்பில் வேலையாட்கள் யாருமில்லாமல் அமைதியாக வெறுமையாக இருந்தது.

அங்கிருந்த தென்னை மரங்களின் ஓலைகள் காற்றில் சரசரக்கும் ஓசைகளும் பறவைகளின் ஒலிகள் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.

ஆதிராவும் ஒரு இடத்தில் நின்று சுற்றிலும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

அப்போது ஒரு கார் வேகமாக அந்த இடத்திற்கு வந்து நின்றது.

அந்த காரைப் பார்த்ததும் ஆதிராவிற்கு புரிந்துவிட்டது இந்த கார் ஆதிபனுடையது என்று

அதே போல் ஆதிபனும் காரிலிருந்து கோபமாக இறங்கி ஆதிராவிடம் வந்தான்

வந்ததும் அவன் ஆதிராவிடம் கோபமாக பேச ஆரம்பித்தான்.

”ஆதிரா உன் மனசுல என்ன நினைச்சிக்கிட்டு இருக்க எதுக்கு தேவையில்லாம என்னை தொந்தரவு செய்ற” என கத்தவும் பதிலுக்கு ஆதிரா அமைதியாக சொன்னாள்

”நான் உங்களை தொந்தரவு செய்யலையே அத்தான்” என்றாள்.

”எதுக்காக நீ பரதன் கிட்ட அப்படி சொன்ன”

”என்ன சொன்னேன்”

”என்கிட்ட தனியா பேசனும்னு சொன்னியாமே”

”ஆமாம்”

”ஏன் அப்படி சொன்ன உனக்கும் எனக்கும் தனியா பேச என்ன விசயம் இருக்கு”

”இருக்கு நிறைய இருக்கு அதை பத்திதான் நான் பேசனும்னு வந்தேன்”

”அதுக்காக பரதன் கிட்ட சொல்லி இந்த தென்னந்தோப்புக்கு என்னை வரவைப்பியா”

”ஆமாம் உங்களோட தனியாவே பேச முடியல அதனாலதான் இப்படி செய்ய வேண்டியதா போச்சி”

”இப்ப நீ இந்த தென்னந்தோப்புக்கு எதுக்கு வந்த, பேசனும்னுதானே சரி என்ன விசயம் சொல்லு”

”ஏன் இப்படி கோபப்படறீங்க சரி சொல்றேன். எனக்கு உங்களை பிடிச்சிருக்கு”

”சரி அவ்ளோ தானே நான் போகலாமா”

”இல்லை இருங்க நான் உங்களை பிடிச்சிருக்குன்னு சொன்னேன் புரியலயா”

”புரியுது என்னை இந்த ஊர்ல இருக்கற எல்லாருக்கும்தான் பிடிக்கும் இதை சொல்லத்தான் இங்க வந்தியா கிளம்பு இங்கிருந்து”

”இல்ல இன்னும் இருக்கு நான் இந்த ஊருக்கு வந்ததே என் ப்ரெண்ட் வெண்பாவுக்காகதான்.

அவள் உங்க தம்பி பரதனை லவ் பண்றா

அவங்க கல்யாணத்தை எப்படியாவது நடத்தனும்னு நினைச்சிட்டுதான் வந்தேன்.

வந்ததும் உங்களை பார்த்தேன். உங்ககிட்ட இந்த விசயம் சொல்லனும்னு நினைச்சேன்”

”ஓ வெண்பாவும் பரதனுமா சரி இதை என்கிட்டயே பரதன் சொல்லியிருக்கலாமே உன்னை எதுக்கு இதுல நுழைச்சான்”

”அது பரதன் மேல தப்பில்லை வெண்பாதான் நீங்க பெரியதனக்காரங்க உங்க அந்தஸ்துக்கு அவளோட குடும்பம் சரியாயிருக்காது  அதனால எப்படியாவது சேர்த்துவைன்னு சொல்லி என்னை வரவழைச்சா”

”சரி விசயம் என்னன்னு புரிஞ்சிடுச்சி எங்க வீட்டு கணக்குபிள்ளை பொண்ணு வெண்பாவை என் தாத்தா ஏத்துக்க மாட்டார்னு நினைச்சி உன்னை உதவிக்கு கூப்பிட்டிருக்காளா

சரி இதை பத்தி முதல்ல நான் பரதன்கிட்ட பேசிட்டு அப்புறமா தாத்தாகிட்டயும் பேசறேன்.

அவர் சரின்னு சொன்னதும் நானே நேர்ல போய் வெண்பாவை பார்த்து கல்யாணத்துக்கு சம்மதம்னு சொன்னாங்கன்னு சொல்லிடறேன். போதுமா இனி நீ கிளம்பலாம்” என அவன் திரும்ப எத்தனிக்க

”ஆதிபன் அத்தான்” என அவள் அழைக்கும் போது அவள் குரலில் ஒரு வித்தியாசத்தைக் கண்டான் ஆதிபன்

அவள் கண்களில் ஏதோ ஒரு ஆவல் இருந்தது.

அது தன்னிடம் எதையோ சொல்வதை போல் இருந்தது.

அதை கவனித்த ஆதிபன் அவளிடம் கோபமாக பேசலானான்.

”முதல்ல இப்படி அத்தான்னு கூப்பிடறத நிறுத்து யாராவது கேட்டா என்னை தப்பா நினைப்பாங்க

ஏற்கனவே என் மாமன்கள் கூட 2 முறை நீ சண்டை வேற போட்டிருக்க

தனியா அவங்க கையில மாட்டிக்காத கிளம்பு நாளைக்கே நீ ஊருக்கு போ அதான் உனக்கு நல்லது இல்லன்னா….”

என அவன் பேசி முடிப்பதற்குள் ஆதிரா அவனை அணைத்துக்கொண்டு அவனிடம்

”ஆதிபன் அத்தான் ஐ லவ் யு”

என அவள் கூறவும் ஆதிபன் அதிர்ச்சியில் அப்படியே சிலையென உறைந்தான்.

ஆதிபன் மட்டும் அதிர்ச்சியாகவில்லை தூரத்தில் ஒளிந்து கொண்டு இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த வெண்பாவும் பரதனும் கூட அதிர்ச்சியானார்கள்.

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு மேற்கொண்டு என்ன நடக்கிறது என பார்க்கலானார்கள்.

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7  8 
 •  Next 
 •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 12 - சசிரேகாSaaru 2018-01-30 16:42
Adhi en ipdi seira
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 12 - சசிரேகாShanthi S 2018-01-30 02:41
aha, Athira plan seithu ellam seithangala? but why did she do that?

nice ud sasireka
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 12 - சசிரேகாAdharvJo 2018-01-25 20:14
:eek: namba lama venama :Q: apavi herova indha adipavi heroin ippadi emathitangala facepalm hero sir idhu ungalukk over ah theriyala etho indha moment thaa love mathiri solluringa vitness nanga first epi landhu notice panurom No shy feeling ;-) sari sari ninga sonna mathiriye adhibanin kadhaliya save seihu kappathunga...unga master plan vetri pera vazhthukal BTW adhira appadi ena thaa seithuttu inga odi vandhanga :Q: waiting to knw wat it is...and I doubt adhira drama panalan thonudhu :yes: anyway nanga emarala pa wait seithu therinnikiram ena agapogudhun ....thank you for this cute cunning epi :clap: :clap: keep rocking
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 12 - சசிரேகாmadhumathi9 2018-01-25 19:18
Fantastic epi. But aadhiraa seivathai namba mudiyavillai. Adharkku eathaavathu kaaranam irukkuma? Egarly waiting for next epi. Thanks for this epi. (y) :clap:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top