“இல்லை. மாமா.. மலர் படித்து முடித்து இப்போதுதான் வேலை பார்க்க ஆரம்பித்து இருக்கிறாள். அவள் கஷ்டப்பட்டு படித்த படிப்பின் பலன், அதனால் கிடைக்கும் மதிப்பு இவை எல்லாம் சுதந்திரமாக அனுபவிக்கட்டும் என்று எண்ணினேன்.. எங்கள் திருமணத்திற்கு பிறகும் வேலை செய்வாள், என்றாலும் இந்த மாதிரியான தடைகளற்ற மகிழ்ச்சி கிடைப்பது கொஞ்சம் கஷ்டம் தான் இல்லியா?”
“அது என்னவோ சரிதான் .. எந்த கஷ்டமும் இல்லாவிட்டாலும் உன்னை பொறுத்துக் கொள்ள வேண்டுமே .. அதிலிருந்து விடுபட முடியாதே..” என்று சுறா வம்பிழுக்க,
“அக்கா.. “ என்று செழியன் முறைத்தான்.
“சுபா..” என்று அவளை அடக்கிய அர்ஜுன்,
“அதை தவிரவும் வேறு ஏதோ காரணம் இருக்கும் போலவே செழியன்?” என்று வினவ, எல்லோரும் செழியனை பார்த்தனர்.
சற்று கவலையுடன் உள்ளே பார்த்தவன், மலர் தூங்குவதை உறுதி செய்து கொண்ட பின், அவர்களிடம் தன் தந்தையின் தற்போதைய நிலைபாட்டையும், ஆண்டு விழாவில் இருவரின் குடும்ப அறிமுகத்தின் போது நேர்ந்த சிறு உரசலையும் கூறினான்.
“ஓ.. நான் வேண்டுமென்றால் மாமாவிடம் பேசட்டுமா செழியா?” என்றான் அர்ஜுன்.
“வேண்டாம் மாமா.. நானே சமாளிக்க முயற்சி செய்கிறேன். முடியவில்லை என்றால் பிறகு பார்த்துக் கொள்ளலாம்..”
“இல்லைடா.. மாமாவும் யோசிக்காமல் பேசுபவர் இல்லை.. உன் எண்ணத்தை புரிந்து கொண்டு இருப்பாரோ என்று தோன்றுகிறது?”
“எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது.”
“தெரிந்தும் அவர் அழுத்தமாக இருக்கிறார் என்றால், உன்னால் தனியாக அவரை சம்மதிக்க வைக்க முடியுமா?”
“எனக்கு நம்பிக்கை இருக்கிறது .. அதோடு அவர் பார்த்து இருக்கிற இடத்தை பற்றிய விவரங்களில் அவருக்கே தெளிவான முடிவு கிடைக்கவில்லை என்றும் தோன்றுகிறது.. அதனால் தான் ஏதோ சுற்றி வளைத்துக் கொண்டு இருக்கிறார். அந்த முழு விவரமும் தெரிய வரும்போது, அவரிடம் எங்கள் விருப்பத்தை எடுத்துக் கூறுவது எளிதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.”
“அப்போ சரி.. இந்த விஷயங்கள் எல்லாம் மலருக்கு தெரியுமா?”
“விளக்கமாக தெரியாது.. அப்பா வேறு எண்ணத்தில் இருக்கிறார் என்று மட்டும் சொல்லி வைத்து இருக்கிறேன்..”
“சீக்கிரம் எல்லா பிரச்சினையும் சரி செய்து விடு” என்று முடித்தவர்கள்,
இத்தனை நேரம் சீரியசாக பேசிக் கொண்டு இருந்ததினால் பேசாமல் இருந்த சுறா, தற்போது
“ஹேய்.. அப்போ உன் கல்யாணத்திற்கு எனக்கு காக்ரா சோலி கிராண்டா வாங்கி கொடுத்துடு..”
“அக்கா.. இன்னும் உனக்கு சின்ன பொண்ணுன்னு நினைப்பு இருக்கோ ? நீதான் நாத்தனார் முடிச்சு போட போற, உனக்கு நல்ல பட்டு புடவையா எடுத்து தரேன்..”
“அட போடா.. புடவையா..? நான் அடிக்கு ஒரு புதையல் எடுக்கிறதில் உனக்கு என்ன அவ்ளோ ஆசை..? புடவைய நான் கட்டிட்டு வரதுக்குள்ளே உனக்கு அறுபதாம் கல்யாணம் தான் நடக்கும் பார்த்துக்கோ..”
இப்போது அர்ஜுன் “ டேய்.. கல்யாணத்துக்கு சாஸ்திரத்திற்கு போயிட்டு வர சொல்ற காசி யாத்திரைய , இவ உன்னை மொத்தமா காசிக்கே பார்சல் பண்ணிடுவா பார்த்துக்கோ”
“அக்கா.. நான் பாவம்... ஏதோ கொஞ்சம் பார்த்து பண்ணுங்க..” என்று சரண்டர் ஆக , சற்று நேரம் ஒரே கலகலப்பாக இருந்தது.
இவர்கள் பேசிக் கொண்டு இருந்ததில் மணி ஆறுக்கு மேல் ஆகிவிட, இவர்கள் எச்.ஓ.டி. இடம் இருந்து போன் வந்தது. அவரிடம் பேசிவிட்டு மலரை எழுப்ப சென்ற போது, மலரே எழுந்து ரெப்ரெஷ் ஆகி வந்தாள்.
மலர் வந்தவுடன், எல்லோருமாக டீ குடித்து பின், மலரும் செழியனும் கிளம்பினார்கள்.
மலர் , சுபா நிஷா இருவரின் கையையும் பிடித்துக் கொண்டு
“ரொம்ப தேங்க்ஸ்... நீங்க என்னை கட்டாயபடுத்தி படுக்க வைக்கலன்னா , நானும் கஷ்டப்பட்டு, உங்களையும் கஷ்டபடுத்தி இருப்பேன்.. “
“ஹேய்.. இதில் என்ன இருக்கு? உன் கண்ணை பார்த்தாலே அந்த சோர்வு தெரிஞ்சது.. அதான் சொன்னோம். லீவ் இட்..”
“உங்கள எல்லாம் பார்த்தா ரொம்ப பெருமையா இருக்குக்கா.. அந்த சூழ்நிலையில் எவ்ளோ தைரியமா இருந்தீங்க. தேசத்துக்கு சேவை செய்யுற ராணுவத்தில் பெண்களோட பங்கும் நேரடியா இருக்குனு தெரியும்போது ரொம்ப சந்தோஷமா இருக்குக்கா.. “
“இது எல்லாம் பெரிய விஷயம் இல்லைமா.. இந்த வேலைக்கு வர எங்களுக்கு புல் சப்போர்ட் கொடுத்த எங்கள் பாமிலிக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்..”
“உண்மைதான்கா..”
“என்ன நீ.. அக்கான்னே சொல்லிட்டு இருக்க? அண்ணியா மாத்திக்கோ”
“அந்த சந்தர்ப்பம் வரும்போது அண்ணின்னு கூப்பிடுறேன்.. இப்போ அக்காதான்..” என
அர்ஜுன் “சரி. சரி. .உன் ரம்பத்தை ஆரம்பிக்காத சுபா.. பாவம் அவளுக்கு போன ஜுரம் திரும்ப வந்துரும்” என