(Reading time: 14 - 28 minutes)

மலரும் செழியனின் கையை அழுத்தி

“நீங்களும் பார்த்துகோங்க இளா.. உங்களுக்கும் கம்பியில் அடி வாங்கிய இடத்திற்கு ஒத்தடம் கொடுத்து, ஒரு எக்ஸ்ரேயும் எடுத்து பார்த்துடுங்க..” என்றாள்.

வண்டி நேராக இவர்கள் தங்கி இருந்த இடத்தில் நிற்க, இருவரும் கையை விட்டு விட்டு உள்ளே சென்றனர்.

இவர்கள் சென்றவுடன், மற்ற அத்தனை ஸ்டாப்பும் இவர்களை விசாரிக்க, நடந்ததை விவரித்து சொன்னதோடு, அங்கே மிலிடரி காம்பில் விசாரணைக்காக கூப்பிட்டது எல்லாம் சொல்லி முடித்தனர். செந்திலும் கிட்டத்தட்ட இதே போல் சொல்லிருந்ததால் மற்றவர்களுக்கு வேறு எதுவும் தோன்றவில்லை.

பிறகு அர்ஜுன் & டீம் எப்படி தெரியும் என்ற கேள்விக்கு, மலரிடம் சொன்னதையே சற்று சுருக்கமாக சொல்லி முடிக்க, எல்லோரும் அவர்களின் வீரத்தை வெகுவாக பாரட்டினார்கள்.

இந்த விஷயத்தை அலசியபடியே, எல்லோரும் இரவு உணவை முடித்து படுக்க சென்றனர்.

மலருக்கு இப்போது சற்று நன்றாக இருந்ததால், லைட்டாக உணவு எடுத்துக் கொண்டாள். அவள் சாப்பிடுவதை உறுதி செய்த கொண்ட பின்பே தானும் சாப்பிட்டான்.

மலர், வளர்மதி மேடம்மோடு படுக்க செல்ல, செந்தில் மனைவி செல்வியை அனுப்பி, அவள் மாத்திரை எல்லாம் எடுத்துக் கொள்கிறாளா என்பதை கேட்டு தெரிந்த பின் தான் தன் அறைக்கு சென்றான்.

மறுநாள் காலையில் எல்லோரும் கிளம்ப, மற்றவர்கள் பேசிக் கொண்டு வர மலரும், செழியனும் அசதியால் பேருந்திலும் உறங்கி விட்டனர்.

இவர்கள் சென்று கல்லூரி வாசலில் இறங்கவும், கரஸ், பிரின்சிபால் இருவரும் இருந்தனர்.

செழியன் மலர் இருவரிடமும் நடந்ததை விசாரித்து, நல்லவேளையாக இவர்களுக்கு ஒன்றும் இல்லையே என்று நிம்மதி ஆகினார்கள்,

பிறகு இருவரின் உடல் நிலை குறித்து விசாரித்து, இருவரையும் நல்ல ஒய்வு எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள்.

பிறகு கரஸ் பிரின்சிபாலிடம்,

“பிரின்சிபால் சார்.. நீங்களும், செழியனும் மலர் மேடத்தை அவர்கள் வீட்டில் விட்டு, விஷயத்தை சொல்லிவிட்டு வாருங்கள். லேடீஸ் ஸ்டாப் நம்மளை நம்பித்தான் அனுப்பி வைத்தார்கள். எதுவும் பிரச்சினை இல்லை என்றாலும், நடந்தது சின்ன விஷயமும் கிடையாது. அவர்களிடம் நாமே சொன்னால் கொஞ்சம் பயம் இல்லாமல் இருப்பார்கள்..” என

பிரின்சிபாலும் செழியனும் அவர் சொல்வதில் உள்ள உண்மையை உணர்ந்து மலரோடு அவள் வீட்டிற்கு சென்றார்கள்.

வரும் நேரம் தெரியாது என்பதால், தானே வந்து விடுவதாக ஏற்கனவே வீட்டில் சொல்லி இருந்ததால், அவளை அழைத்துப் போக அவள் அப்பா வரவில்லை.

ப்ரின்சிபாலோடு அவர் காரில் சென்று தன் வீட்டில் இறங்கியவள், இருவரையும் உள்ளே அழைத்தாள்.

அவள் பெட்டியை தூக்க சிரமபடுவதை உணர்ந்து, செழியன் ஒரு பெட்டியை வாங்கிக் கொண்டான். நல்லவேளை அது ட்ராலி வகை தான்.. அதனால் கைக்கு வெயிட் கொடுக்காமல் இழுத்து வந்தான்.

இன்னொரு ஷோல்டர் பாகை பிரின்சிபாலின் டிரைவர் எடுத்து வந்தார்.

மலரின் அப்பாவும் வீட்டில் இருக்க, வீட்டிற்குள் வந்தவர்களை பார்த்து வியந்தனர். செழியன் வந்ததாவது மலரை கொண்டு விட என்று நினைத்தாலும், பிரின்சிபால் வந்தது ஏன் என்று யோசித்தார்.

அதற்குள் மலரின் பாட்டி, அம்மாவும் வர, அவர்களும் ஆச்சர்யமாக பார்த்தனர்.

என்னதான் நாகரீகம் என்றாலும் கூட, இரண்டு பைகளையும் வேறு ஒருவர் எடுத்து வரும் அளவு, தங்கள் பெண் விடமாட்டாள் என்பதால் என்ன விஷயம் என்று புரியாமல் விழித்தனர்.

பிரின்சிபாலை மலர் அறிமுகபடுத்தி வைக்கவும், மலரின் அம்மா வேகமாக இருவருக்குமாக காபி போட்டு எடுத்துக் கொண்டு வந்தார்.

பிரின்சிபால் காபி குடித்துக் கொண்டே விவரம் சொல்லி முடிக்க, மலரின் பாட்டியும், அவள் அம்மாவும், வேகமாக வந்து தங்கள் பெண்ணை அணைத்துக் கொண்டனர்.

பிரின்சிபால் பயப்பட ஒன்றும் இல்லை என்று கூறியும், இரு பெண்களும் மலரை, அக்கு வேறு ஆணி வேறாக அலசினார்கள். கைகளில் ஏற்பட்ட காயங்கள் தவிர வேறு ஒன்றும் தென்படாததால் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

பிரின்சிபால், செழியன் இருவருக்கும் நன்றி கூற, அவர்களும் மலரை பார்த்துக் கொள்ளுமாறு கூறி விடை பெற்றனர்.

இருவரையும் வாசல் வரை, வழி அனுப்பி விட்டு வந்த மலரின் நடவடிக்கைகளையே பார்த்து இருந்த மலரின் பாட்டி சுந்தர வடிவு, தன் மகனிடம்

“எலேய்.. வேலா.. இந்த சித்திரை , வைகாசிலே மலருக்கு கல்யாணம் செஞ்சு அவள அவ புருஷன் கிட்டே ஒப்படைக்கணும் லே,” என

மலர் தூக்கி வாரிபோட்டு நிமிர்ந்தாள். 

தொடரும்!

Episode # 36

Episode # 38

{kunena_discuss:1126}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.