(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 36 - தேவி

vizhikalile kadhal vizha

ல்லோரும் அர்ஜுன் வீட்டிற்கு கிளம்ப, மலரால் நடக்க முடியவில்லை. அவள் விழுந்ததில் சுளுக்கு ஏற்பட்டு விட்டது. சுராவும், நிஷாவும் இருபக்கமும் அவளை பிடித்தபடி நடக்க நடந்தாள்.

செந்திலும் செல்வியும் அவர்கள் வந்த ஜீப்பில் சென்று இருக்க, அந்த தீவிரவாதிகள் கடத்தி , அதை மீட்டு இருந்த ஜீப்பில் மலரை ஏற்றினர்.

இன்னும் வேலை முடிவில்லை என்பதால் சுறா, நிஷா இருவரும் அவர்கள் குழுவோடு செல்ல வேண்டி இருந்தது.

இவர்கள் ஆபரேஷன் முடிந்ததும், இவர்களை அழைத்து செல்ல மிலிடரி வேன் காத்து இருந்ததால் அர்ஜுன் & டீஜ் வேனில் ஏற, செழியன் மலர் இருவரும் ஜீப்பில் அவர்கள் வேனை பின் தொடர்ந்து சென்றனர்.

இவர்கள் மிலிடரி அகாடமி சென்று சேரும் போது காட்டிலாகா அதிகாரிகளும் அங்கே வந்து இருக்க, முதலில் நேராக அர்ஜுனின் ஆபீஸ் அறைக்கு தான் சென்றனர்.

மிலிடரி டீம் ரிப்போர்ட் செய்து விட்டு கிளம்பும்போது சுபத்ராவும், நிஷாவும் கிளம்ப வேண்டி இருந்தது.

அப்போதுதான் மலரை கவனித்த சுபத்ரா,

“சார்.. நான் மலர்விழியை நம்ம கேம்ப் ஹாஸ்பிடல் கூட்டிக் கொண்டு போகட்டுமா?” என்று கேட்டாள்.

“நோ. சுபத்ரா.. இன்னும் நம்ம பாரெஸ்ட் ஆபீசர்ஸ் விசாரணை முடியல.. அவங்க அனுமதி இல்லாமல் அனுப்ப முடியாது.”

“ஆனா.. இவங்களுக்கு இப்போ மெடிக்கல் ஹெல்ப் உடனடியா தேவை.. இல்லா விட்டால் சாதாரண வலி பெரிய பிரச்சினையில் கொண்டு விடும்..”

அதை கேட்டுக் கொண்டு இருந்த அதிகாரிகள்,

“அவங்கள கூட்டிட்டு போங்க மேடம்.. நாங்க இவர்கிட்டே விசாரணை முடிச்சிகிறோம் “ என்று செழியனை காண்பித்தனர்.

சுபத்ராவும், நிஷாவும் மலரை கையை பிடித்து அழைத்து சென்று விட, இங்கே செழியனிடம் காட்டுக்குள் என்ன நடந்தது என்று விசாரித்தனர்.

செழியன் , அந்த ஜீப் டிரைவர் இருவரும் தாங்கள் கேட்டதை சொன்னார்கள். அதோடு செழியன் தான் மொபைலில் எடுத்த வீடியோவையும் மெயில் மூலம் அர்ஜுனிற்கு அனுப்பி வைத்தான்.

பாரெஸ்ட் ஆபீசர் அர்ஜுனிடம்

“அர்ஜுன் சார்.. இவங்க சொல்றதை பார்த்தா இது மிக பெரிய நெட்வொர்க் மாதிரி தெரியுது. எங்க டிபார்ட்மென்ட் சைடுலேர்ந்து இவங்க மேலே போடுற கேஸ் எந்த அளவிற்கு ஸ்ட்ராங்கா இருக்கும்னு தெரியல? என்ன பண்ணலாம்..?”

“நீங்க சொல்றது கரெக்ட் தான் ஆபீசர்.. எங்களுக்கு ஏற்கனவே மெசேஜ் வந்துருக்கு.. ஆனால் எங்கெங்கே என்பது தான் தெரியாது. நாங்களும் இங்கே எதிர்பார்க்கலை. எனக்கு செழியன் கிட்டேர்ந்து மெசேஜ் கிடைத்தவுடன் நாங்க உடனே நடவடிக்கை எடுத்தது , அதிக நேரம் தாமதிக்க முடியாது என்பதற்காகத்தான்.. இப்போ இந்த ரெகார்டிங் வச்சு பார்த்தா எங்களுக்கு முழு அதிகாரம் இருக்கு இவங்கள பிடிக்கிறதுக்கு.. இப்போதைக்கு நீங்க கேஸ் மட்டும் பைல் பண்ணிட்டு , ஜெயிலில் போட்டுடுங்க.. நாங்க லீகலா கேஸ கோர்ட்க்கு எடுத்துட்டு போய், அங்கிருந்து அவங்கள எங்க கஸ்டடிலே எடுத்துக்கறோம்..”

“ஓகே சார். நீங்க சொல்ற மாதிரி நாங்க கேஸ் பைல் பண்ணிட்டு உங்களுக்கு காபி அனுப்பறோம்.. இப்போ கிளம்பறோம் “ என்றபடி அந்த ஜீப் டிரைவரை அழைத்துக் கொண்டு சென்றனர்.

அவர்கள் கிளம்பவும், செழியனிடம் திரும்பிய அர்ஜுன், ராகுல் இருவரும்,

“என்னடா.. மாப்பிள்ளை... வசமா மாட்டிகிட்ட போலே ?”

“என்ன சார் சொல்றீங்க.?” என்று புரியாதவனாக கேட்டான் செழியன்.

“இல்ல.. உங்க அக்கா.. இன்னிக்கு களி கிண்டி வச்சுருக்கா.. நாங்க ரெண்டு பேரும் எப்படிடா எஸ்கேப் ஆகறதுன்னு யோசிச்சுட்டு இருந்தோம்.. நீ வந்துட்ட.. நாங்க அதனால கான்டீன்லே சாப்பிட போறோம்.. “

“தெய்வமே.. உங்களுக்கே இது எல்லாம் நல்லா இருக்கா.? என்னை பார்த்தா பாவமா இல்லியா?”

“ஏன்.. உன் அக்கா கிட்டே மாட்டிகிட்டு டெய்லி நாங்க பாடா  படறோமே.. எங்களுக்கு யார் பாவம் பார்க்கிறது?”

“மாமா.. இது எல்லாம் நீங்களா தேடிகிட்ட வரம்.. நாங்க உங்கள காப்பாத்த முயற்சி செய்தோம்.. முடியலேயே..”

இவர்கள் கேலி செய்து கொண்டு இருக்க, வாசல் புறம் திரும்பி நின்று இருந்த ராகுல் சட்டேன்று மாறி

“என்ன இருந்தாலும் நம்ம சுறா செய்யற மாதிரி யாராலும் சப்பாத்தி சுட முடியாது?” என,

அவனின் டோன் மாறிய உடனே சுராவோ, நிஷாவோ, வந்து இருக்கிறார்கள் என்று உணர்ந்த அர்ஜுன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.