(Reading time: 10 - 19 minutes)

“ஆமாமா.. “ என்று கூற, இதை அறியாத செழியனோ

ஏன் மாம்ஸ்... ரெண்டு பேரும் இப்படி சேம் சைடு கோல் போடுறீங்க..? அவங்க சுடறதுக்கு பேரு ரொட்டியா? ஒன்னு அது கரிட்டியா இருக்கும் இல்லையா கல்ல விட்டு எடுக்க முடியாத மாவா இருக்கும்.. இதுக்கு ரெண்டு பேரும் சேர்ந்து சுறா ரொட்டி மன்றம் வேற ஆரம்பிபீங்க போலே இருக்கு ?”

என்று கிண்டலடித்துக் கொண்டே திரும்பியவன், அங்கே சுபத்ரா நிற்கவும், செய்வதறியாது முழித்தான்.

அதன் பின்னர்தான் திரும்பி அர்ஜுன், ராகுல் இருவரையும் பார்க்க, அவர்களோ எதுவுமே தெரியாத மாதிரி சுவற்றை பார்த்து திரும்பி நின்று இருந்தார்கள்.

“இப்படி வச்சு செஞ்சுட்டாங்களே ரெண்டு பேரும் என்று மனதுக்குள் எண்ணியவன், சுராவிடம்

“வாங்க அக்கா.. எங்களை தேடி இங்கியே வந்துட்டீங்களா? மாமா இப்போதான் சொன்னாங்க .. இன்னிக்கு உங்க சமையலாமே.. சொன்ன உடனே.. இதோ வீட்டுக்கு தான் கிளம்பிட்டேன்..” என்று சமாளிக்க

“எல்லாம் காதிலே விழுந்தது. ஏண்டா எத்தனை தடவை உனக்கு பாணி பூரியும், சூப்பும் செஞ்சு கொடுத்து இருக்கேன்.. அத எல்லாம் கணக்கில்லாம வாங்கி தின்னுட்டு, என் சப்பாத்திய குறை சொல்லிட்டு இருக்கியோ?”

மனதிற்குள்ளாக எது இந்த நார் சூப் பாக்கெட் வாங்கி சுட வைத்துக் கொடுப்பதும், பாணி பூரி, மசாலா, எல்லாம் வாங்கி, வெங்காயம் நாங்க வெட்டிக் கொடுத்து அதை அந்த பூரிக்குள்ள ஓட்டை போட்டு மசாலா வச்சு கொடுத்துட்டு, என்னமோ பாணி பூரியே இவங்களோட கண்டுபிடிப்பு மாதிரி அதுக்கு ஒரு லாரி கதை வேற சொல்லுவாங்க.. இத இவங்க செஞ்சு கொடுதாங்களாமா

என்று சுராவை தாளித்துக் கொண்டு இருந்தவன், வெளியில்

“அப்படி எல்லாம் சொல்லுவேனா அக்கா.. நீங்க தான சப்பாத்தின்னா எப்பவும் ரவுண்டு ஷேப்லே தான் இருக்கனுமா, ஏன் வட்டம், சதுரம், செவ்வகம், முக்கோணம் இந்த ஷேப்லே இருக்க கூடாதான்னு கண்டுபிடிச்ச வில்லேஜ் விஞ்ஞானி ஆச்சே.. அத தான் பெருமையா சொல்லிட்டு இருந்தேன்..”

“அது அந்த பயம் இருக்கட்டும்.. சரி சரி.. வா.. வீட்டுக்கு “ என்றபடி கிளம்பியவள், பின்னால் திரும்பி

“உங்களுக்கு வேற தனியா சொல்லனுமா? சீக்கிரம் கிளம்பி வீட்டுக்கு வாங்க..” என்று அர்ஜுனிடமும், ராகுலிடமும் சொன்னாள்.

“சுறா.. வீட்டுக்கு கெஸ்ட் வந்துருக்காங்களே.. நீ அவங்கள கவனி. நாங்க கான்டீன்லே சாப்பிட்டு வந்துடறோம்..”

“அது எல்லாம் எங்களுக்கு தெரியும்.. ஏற்கனவே நான் காண்டீன்லேர்ந்து கொஞ்சம் டிஷ் வாங்கி வச்சுட்டேன்.. சோ எல்லோருக்கும் இருக்கு. நேரா வந்து சேருங்க..”

அவள் பின்னாடியே ஆண்கள் மூவரும் பலியாடு போல் சென்றனர்.

ராகுலும், அர்ஜுனும் ஒருவரை ஒருவர் பார்த்து உதடு பிதுக்க, செழியனோ   

“மாம்ஸ்.. ஏன் என்னை இப்படி மாட்டி விட்டுடீங்க.. ? “

“யாரு நாங்களா.. மாட்டி விட்டோம்.. ? நீயே ஹீரோ ஆகறேன்னு ட்ரை பண்ணி செகண்ட் ஹீரோ கூட இல்லமா, கெஸ்ட் ஆர்டிஸ்ட் மாதிரி ரெண்டு சீன் போட்டு , அதில் உங்க அக்கா கிட்டே வசமா மாடிக்கிட்டே.. அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்?”

“என்ன மாம்ஸ்.. நீங்க எவ்ளோ அழகா திட்டம் போட்டு ஒரு தீவிரவாதி கும்பலையே பிடிக்கறீங்க.. என்னை காப்பத்த ஒரு திட்டம் போடக் கூடாதா?”

அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பின் அர்ஜுன்

“உன்னை இன்னிக்கு காப்பத்தணும்னா இப்போதைக்கு உன் கூட வேலை செய்யற அந்த மலர்விழி கையில் தான் இருக்கு...”

“என்ன சொல்றீங்க மாமா ?’

“எப்படியும் டாக்டர் பெய்ன் கில்லெர் கொடுத்து இருப்பாங்க.. அதனால் அவளை தூங்க சொல்லனும்னு சொல்லி உடனே கிளம்பிடு ..

“நன்றி தெய்வமே.. இப்போவே அதுக்கு ஒத்திகை பார்த்துக்கறேன்..” என்று கூறவும் அர்ஜுன் வீடு வரவும் சரியாக இருந்தது.

அவர்கள் உள்ளே நுழையவும், சோபாவில் அமர்ந்து இருந்த மலர் எழுந்து நின்றாள். அர்ஜுன் அவளை பார்த்து

“நீ ஏம்மா எழுந்துக்கிற? உட்காரு .. ‘ என்றவன், “சுபத்ரா” என்று குரல் கொடுத்தான்.

உள்ளிருந்து வந்தவள், “அஜூ .. உங்களுக்கு எதுவும் அடி படலையே?” என்ற கேள்விதான் கேட்டாள்.

அதே நேரம் அர்ஜுனும் “ தரு.. உனக்கு ஒன்று பிரச்சினை இல்லையே ?” என்று கேட்டான்..

இருவரும் ஒரே கேள்வியை கேட்பதை உணர்ந்து நிறுத்தினர். அவர்கள் நிறுத்தவும் ராகுல்

“ஆரம்பிச்சுட்டாங்க ஐயா.. ஜோடிப்புறாக்கள்” என்று கேலி செய்ய, உள்ளிருந்து வந்த நிஷாவோ

“ஆமாம்.. உங்களுக்கு தான் எந்த எண்ணமும் தோணாது .. மற்றவங்களும் அப்படியே இருப்பாங்களா என்ன ?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.