(Reading time: 14 - 28 minutes)

சுபா அர்ஜுனை முறைக்க, பேசியபடியே ஒரு கால் டாக்ஸி வரவழைத்து இருவரையும் அனுப்பி வைத்தான்.

மலர் காரில் ஏறிய பின், செழியன் எல்லோரிடமும் பொதுவாக

“எல்லாம் சரியாக நடந்தால், இந்த மே மாதத்தில் எங்கள் திருமணம் இருக்கும். எல்லோரும் லீவ் சொல்லி வைத்து விடுங்கள்.” என்றான்.

மெதுவாகத்தான் என்றாலும் அவன் சொன்னது கேட்டு விட, மலரின் முகம் சிவந்தது. எல்லோரிடமும் கையசைத்து விடை பெற்றாள்.

காரில் போகும்போது செழியன் மலரிடம்

“மலர் .. இப்போ எப்படி இருக்கடா..?”

“ஓகே.. இளா...”

“உன்னை யாருடி ஓடி வர சொன்னது.. ? அந்த தீவிரவாதி உன்னை பிடித்தபோது என் உயிரே என்னிடம் இல்லை தெரியுமா?”

“எனக்கும் தான்.. அந்த கம்பியால் உங்களை அடித்தபோது எவ்ளோ பயந்தேன் தெரியுமா? என்னை அறியாமல்தான் நான் ஓடி வந்தேன்..” என்றவள், அப்போதும் அதை நினைத்து உடல் சிலிர்க்க, அதை உணர்ந்தவனாக.

“சரி.. சரி விடு. இப்போதைக்கு எல்லோரிடமும் நீ எனக்காக ஓடி வந்தாக எதுவும் சொல்லாதே.. இருவரும் அவர்களிடம் மாட்டிக் கொண்டதாக இருக்கட்டும்.. “

“செந்தில் அண்ணா.. என்ன சொல்லி இருக்கிறாரோ?”

“அவனும் அப்படி எல்லாம் சொல்லிருக்க மாட்டான்.. எல்லோரும் மாட்டிக் கொண்டதாகதான் சொல்லிருப்பான் . அதோடு அர்ஜுன் மாமா வந்து எல்லோரையும் காப்பற்றியது எல்லாமே தெரிந்து இருக்கும்.”

“இவர்கள் எல்லாம் உங்கள் சொந்தமா இளா?”

“சொந்தம் தான்.. கொஞ்சம் தூரத்து உறவு.. ஆனால் அப்பா திருச்சி வந்த பொழுது, இவர்கள் வீட்டிலும் சென்னை சென்று இருக்க, தொடர்பே இல்லாது போனது. “

“பிறகு இவ்ளோ கிளோசாக இருக்கீங்களே.. எப்படி?”

“என்னோட M.Phil ப்ராஜெக்ட்டிற்காக ஒருமுறை வட இந்தியா சென்றேன். நான் அங்கிருந்த போது சில ஆராய்சிக்காக ஒரு மலை ஒட்டிய பகுதிக்கு சென்ற போது , அங்கே மலைவாழ் மக்கள் தவிர, ஆர்மி கேம்ப் மட்டுமே இருந்தது. எனக்கு அலைச்சல், கிளைமேட் மாற்றம் ஒத்துக் கொள்ளாததால், சாப்பாட்டிற்காக மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தேன்.. ஆதிவாசிகளிடம் என் நிலையை புரியவைக்க முடியாததால், ஆர்மி கேம்ப் பக்கம் சென்று உதவி கேட்டேன். அப்போது அவர்கள் மேஜர் சொன்னால்தான் எதுவும் செய்வோம் என்றுவிட, அவரிடம் அழைத்து போக சொன்னேன்.. அப்போதுதான் அர்ஜுன் மாமாவை பார்த்தேன். அவர் என்னிடம் மொத்த விவரங்களும் கறந்து, அதை சரிபார்த்து முடிப்பதற்குள், மிகவும் துவண்டு போக ஆரம்பித்தேன். அப்போது அசரீரீ போல்

“கேப்டன் ஜி.. இன்னும் எவ்ளோ நேரம்தான் அவரை விசாரிப்பீங்க.. ? உங்க விசாரணை முடிக்கிறதுக்குள்ள அவருக்கு பாலு தான் ஊத்தணும் போலே” என்று தமிழில் கோபமாக கேட்க, நான் அவர்கள் காலிலேயே விழுந்து விட்டேன்..

“அக்கா.. ரொம்ப நன்றிக்கா.. கொஞ்சம் கருணை காட்டுங்க..’ என்று கேட்கவும், நானும் தமிழ்தான் என்று உணர்ந்து, பிறகு எனக்கு சாப்பாடு போட்டு, கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் இருந்ததற்கு மருந்தும் கொடுத்து அனுப்பினார்கள்.

என் உடல்நிலை பார்த்துவிட்டு, அங்கே நான் இருந்த நாட்கள் எல்லாம், எனக்கு சாப்பாடு , மருந்து எல்லாம் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். அப்போது அவர்களோடு பூர்வீகம் பற்றி பேசும்போது தான் சுபத்ரா அக்கா முறையில் எனக்கு சொந்தம் என்றும், நீண்ட இடைவெளி ஏற்பட்டு விட்டது பற்றியும் தெரிந்து கொண்டேன். அதற்கு பின் அவர்களிடம் நம்பர் வாங்கி வைத்து, அவ்வப்போது போனில் பேசுவேன். அதோடு அவர்கள் வேலை பற்றி தெரியும் என்பதால், அதிக தொந்தரவும் தர மாட்டேன். என்று அவர்களுக்கு என் மேல் உள்ள அன்பை நேரில் பார்க்கும்போது வெளிபடுத்துவர்ர்கள்”

என்று நீளமாக சொல்லி முடித்தான் செழியன்.

“எல்லோருமே நல்ல டைப்.. மூடியாக இல்லாமல், கல கல என்று இருக்கிறர்கள்.” என்றவள்

“அவர்களுக்கு நம் விஷயம் தெரியுமோ ?”

“தெரியும்..”

“எப்படி? நீங்க சொன்னீங்களா?”

“இல்லை.. நான் கேட்டதற்கு, அதுதான் அங்கே காட்டில் ஒருத்தர் ஒருத்தர் பாயிந்து வந்து அடுத்தவங்களுக்காக பதறி ஓடினீங்களே .. அப்போவே தெரிஞ்சுது.. அப்படின்னு சொன்னங்க.. “

இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும்போதே இவர்கள் தங்கி இருந்த இடம் அருகே வர, மெதுவாக மலரின் கையை பிடித்த இளா, அவளை தன்னோடு சேர்த்து ஒருமுறை அணைத்துக் கொண்டான். பிறகு அவள் கையை அழுத்தி,

“மலர் .. டேக் கேர்.. உடம்ப பாத்துக்கோ.. இனிமேல் வீட்டிற்கு போகும் வரை, உன்கிட்ட போனில் கூட பேச முடியுமா தெரியல.. அங்க கொடுத்த டேபிலேட்ஸ் எல்லாம் ஒழுங்கா போடு.. அடிபட்ட இடத்தில் எல்லாம் ஆயின்மென்ட் போட்டுக்கோ.. ஒழுங்கா பார்த்துக்கோ சரியா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.