(Reading time: 11 - 22 minutes)

தகவல் தெரிந்து பதறியடித்து வந்தனர் விக்ரமும், மித்ராவும்,தாயம்மாவும்.. விக்ரமுக்கு மூச்சு கூட விடமுடியவில்லை, அம்மு ICUவில் இருப்பதை கண்டு உடைந்து போனான்.. எப்படியும் அவள் உயிரோடு வந்தாக வேண்டும்.. எனக்காக அவள் வந்தே தீருவாள்.. என உறுதியாய் நம்பினான்.. மித்ரா தன் தோழியை நினைத்து கண்ணீர் விட்டவள் தாயம்மாவை கூட்டி கொண்டு கோவிலுக்கு விரைந்தாள்... விக்ரம் தனித்து விடப்பட்டான், கதவில் வெளியிலே நின்று கொண்டிருந்தான்.. அவளை இந்த நிலைமையில் பார்க்க அவனால் முடியவில்லை.. தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமையுடன் தன மீதே கோபப்பட்டான்.. தயவு செய்து எனக்காக வா நிலா.. உன்னை என் கண்ணுக்குள் வைத்து பார்த்து கொள்கிறேன்.. என மனதார புலம்பினான்.. நேரம் ஆக ஆக அவனுக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல் இருந்தது..

பலமணி நேர போராட்டத்திற்கு பின் ஆபரேஷன் முடிந்தது.. வெளியில் வந்த டாக்டர்கள் அவனிடம் அம்மு பிழைத்து விட்டதை கூறவும் தான் அவனுக்கு உயிரே வந்தது.. இரு நாட்கள் observationனில் வைத்திருக்க வேண்டும் எனவும் அதன் பின் தான் அவளை சந்திக்க முடியும் என்றும் அவர்கள் கூறிவிட்டு சென்றனர்..

கோவிலுக்கு போனவர்கள் இந்த செய்தியை கேட்ட பின் தான் நிம்மதி அடைந்தனர்.. இரு நாட்கள் அவர்களுக்கு நரகமாய் கழிந்தது.. உடல் முழுக்க கட்டுகளுடன் அம்முவை கண்ட அனைவரும் கண்ணீர் விட்டனர்..

பின் மெல்ல மெல்ல உடல்நிலையில் தேறினாள் அம்மு.. விக்ரம் அவளை விட்டு ஒரு நொடி கூட நகரவில்லை.. அவளை பூ போல பார்த்து பார்த்து கவனித்தான்.. இருந்தாலும் அவளை திட்டவும் மறக்கவில்லை.. அன்று சொல்ல சொல்ல கேட்காமல் தனியே சென்றதுக்காக அவளை கோபத்தில் வறுத்தெடுத்தான்.. பல அட்வைஸ்களும் நிறைய பாசமான கவனிப்புகளும் அவளுக்கு கிடைத்தன.. அவள் அடி பட்டது என இத்தனையும் பொறுத்து கொண்டவள், மிக பெரிய அதிர்ச்சியாய் அவளால் பேச முடியாமல் குரல்வளையில் பிரச்சனை வந்தது தான் அவளால் தாங்க முடியவில்லை.. அதை விட பெரிய விஷயம் அதை யாரும் பெரிது படுத்தாமல் அவ்ளோதான என சொன்னதுதான்.. கேட்டால் நீ பேசாமல் இருப்பது தான் எல்லோருக்கும் நல்லது என்று ஒரு அட்வைஸ் வேறு... அவளுக்கு கோபம் கோபமாக வந்தது, டாக்டர் என்னதான் இது டெம்பெரவரி, ஆறு மாத சிகிச்சையில் சரி ஆகி விடும் என சொன்னாலும்  அவளால் தாங்க முடியவில்லை.. எப்படி அவளால் பேசாமல் இருக்க முடியும்? சாப்பிடாமல் கூட இருந்து விடுவாள்.. பேசாமல் எப்படி இருப்பதாம்.. சரி.. சரி... சாப்பிடாமல் இருப்பது என சொன்னது பொய் தான்..  ஆனால் பேசாமல் இருப்பதும் கஷ்டம் ஆயிற்றே.. அவளை யார் புரிந்து கொள்கிறார்கள்.. என புலம்பி தள்ளினாள், மனதினுள் தான்.. பின்னே.. அதுதான் அவளால் பேச முடியாதே....

ஒரு மாதம் ஹாஸ்பிடலில் இருந்தாள்.. பிறகு அவள் முழுதாக குணமடைய ஆறு மாதமாகும் என டாக்டர் கூறி அவளை discharge செய்தனர்.. கை, காலில் அடி பட்டதால் அவளை wheelchairரில் கூட்டி சென்றனர்..

வீட்டிற்குள் நுழைவதற்கு முன் ஆரத்தி எடுத்து உள்ளே செல்ல அனுமதித்தார் தாயம்மா.. பின் உள்ளே அழைத்து சென்ற விக்ரம் படிக்கட்டில் அவளை தூக்கி கொண்டான்.. அவள் அறைக்குள் தூக்கி சென்றவன் படுக்கையில் அமர வைத்தான்.. அவனை காதலுடன் பார்த்தாள் அம்மு.. அதை கவனித்தவன், என்ன? என பார்வையால் கேட்க, அவள் i love u என உதட்டை அசைக்கவும் அதை புரிந்து மெல்லிதாய் புன்னகைத்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.. பின்,

“நான் போய் உனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வரேன்..” என்றவன் கீழே சென்றான்..

திரும்ப i love u too னு சொல்றதுகென்ன.. என செல்லமாக கோவித்து கொண்டாள்.. அடிபட்டு hospitalலில் மயக்கமாய் இருக்கும் போது அவன் அந்த வார்த்தைகளை சொன்னான் தான்.. ஆனால் முழித்து கொண்டு இருக்கும் போது சொல்ல  மறுக்கின்றான்.. என மனதினுள் திட்டி தீர்த்தாள்..

பின் அவன் அவளை சாப்பிட வைத்து மருந்துகளை கொடுத்துவிட்டு தூங்க வைத்தான்.. அவள் தூங்கிய பின் அவ்வறையை விட்டு வெளியேறினான்..

சேகர் இந்த ஒரு மாதமாய் அம்முவுக்கு நடந்ததை பற்றி கங்காதரனுடன் கூறினான்.. hospitalலில் போலீஸ் பாதுகாப்பு அதிகமாக இருந்ததால் எதுவும் செய்ய முடியாததை விவரித்தான், அதுவரை அமைதியாய் கேட்ட கங்காதரன்,

“ஒன்னும் பிரச்சன இல்ல.. கொஞ்ச நாள் நாம ஏதும் பண்ண வேண்டாம்.. பிறகு பாத்துக்கலாம்.. இப்போதைக்கு அமைதியாக இருப்பது தான் புத்திசாலித்தனம்...” என்றவன் அவனுக்கு பணத்தை கொடுத்து அனுப்பினான்...

அவனுக்கும் ஒரு உயிரை கொள்வதற்கு விருப்பம் இல்லை தான்.. அவன் அந்த அளவு மோசமானவன் இல்லையே... அப்படி இருந்தும் அவனை மாற்றியது எது???...

நந்தினி... நகநந்தினிதேவி.... நீ என் வாழ்க்கையில் இல்லாமல் இருந்திருந்தால் இருவருக்கும் நன்றாக இருந்திருக்கும்... நானும் உன் கணவனை கொன்றிருக்க மாட்டேன்.. உன் ஒரே தவப்புதல்வியையும் கொல்வதற்காக இப்படி அலைந்திருக்க மாட்டேன்.. நானும் நிம்மதியாக இல்லை.. நீயும் நிம்மதியாக இல்லை... விதியை என்னவென்று சொல்வது?.. என சிரித்து கொண்டே அவனறைக்கு சென்றான்....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.