“I Love you baby…” என்று கிசுகிசுப்பாக கூறினான் ககன், கண்களை மூடி அவளின் புன்னகையை நினைத்தபடி.
“I love you too baby…” குரலில் ஆயிரம் கூச்சத்துடன் தாரா கூற.... அந்த குரலில் இருந்த உணர்வுகளில் அப்பொழுதே ககன் அவளிடம் மானசீகமாக சரண் அடைந்து விட்டான்.
“மீட் பண்ணலாமா...” என்ற ககனின் ஏக்கமான குரலுக்கு...
உணர்வுகளில் இருந்து மீண்ட தாரா... “ஹ்ம்ம்... பண்ணலாமே... நீங்களே வாங்களேன்...” என்றாள். அவளின் குரலில் கொஞ்சம் குறும்புடன் கொழுப்பு அதிகமாக இருந்ததோ....!!
“எங்க வரணும் சொல்லு... அரைமணிநேரம்... நான் அங்க இருப்பேன்...”என்று இன்னும் சுயத்துக்கு மீளாமல் கூறினான் ககன், அவளின் வம்பு புரியாமல்.
“பீச் ரோடுக்கு வந்துடுங்க.... நான் போய் ரெடி ஆகறேன்.. “என்று குறும்பு மின்ன கூறினாள் தாரா...
“ஹ்ம்ம்... அரைமணில அங்க இருப்பேன்... சீ யு தேர்...”என்று ஆர்வமாக கூறிவிட்டு... கனவுலகில்... இல்லை இல்லை.. அவனின் காதல் உலகில் மிதந்தபடி... சற்று முன் தான் போட்ட ஆடையைமாற்ற எண்ணி.. அவனின் க்ளாசெட் முழுதும் கலைத்துபோட்டு... வேற ஆடைக்கு மாறி... மறுபடி தலை வாரி... சென்ட் அடித்துக்கொண்டு.... என்று பம்பரமாக சுழன்று ஐந்து நிமிடங்களில் கிளம்பிவிட்டான்.
கீழே வந்தவன்... மாய உலகத்திலிருந்து மீண்டு, அவனின் அம்மாவிடம்... “ம்மா.. தாராவ பார்க்க பீச் வரைக்கும் போயிட்.............”என்று கூறக்கொண்டே, அதில் ஏதோ தவறு இருப்பது போல பாதியில் நிறுத்த....
அவனின் அம்மாவோ... வெடி சிரிப்பு சிரித்தபடி.... “ஹா... ஹா... ஹா.... ஹைதராபாத்ல பீச் எப்போ வந்தது ககி கண்ணா......” என்றார்.!!!
வணக்கம் மக்களே.... இது அளித்துவரும் ஆதரவுக்கு மிக்க நன்றி... கதையின் போக்கு எப்படி இருக்கு..? உங்களுக்கு விருப்பமான கதாபாத்திரம் யார்? இன்னும் என்ன எதிர் பார்க்கிறீர்கள் வர்களிடம் இருந்து? நான் ஏதேனும் மாற்றம் செய்துக்கொள்ள வேண்டுமா? என்று உங்களின் கருத்துகளை பகிர்ந்துக்கொள்ள வேண்டுகிறேன்.. comment செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டே வருகிறதே...!! Please do rate and review... That is really a boost for Me... Thanks a lot:)
{kunena_discuss:1151}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.