வந்தவள் அவன் தந்த உடையை ஆசையாய் பார்த்தாள்.. i லவ் யூ டார்லிங்.. என்றவள் அதை ஆசையாய் உடுத்திக்கொண்டாள்.. மெல்லிய அலங்காரத்துடன் அவள் ரெடி ஆக அங்கு தாயம்மாவும் யம்முவும் வந்தனர்,
இருவரும் கோரசாக “ஹாப்பி பர்த்டே அம்மு..” எனவும் ஒரு கணம் திடுக்கிட்டவள் பின் புன்னகைத்து கொண்டே அவர்கள் புறம் திரும்பி, ”THANK YOU...” என்றாள்..
தாயம்மா அவள் டிரஸ்க்கு மேட்ச்சாக நகை செட் ஒன்றை பரிசளித்தார்.. அதை ஆசையாய் அணிந்து கொண்டாள் அம்மு..
யம்மு ஒற்றை ரோஜாவை அம்முவின் கையில் கொடுத்து, “ஹப்பி பர்தடே.. லவ்வு யூ..” என அவள் மழலை குரலில் சொல்ல, அதை ரசித்த அம்மு யமுனாவை அணைத்து கொண்டு முகமெங்கும் முத்தமிட்டாள்... “உன் கிப்ட் தான் பெஸ்ட் யம்மு..” என கூறி புன்னகைத்தவள் தாயம்மாவிடம் திரும்பி ஆசிர்வாதம் வாங்கினாள்.. பின் அவரிடம்,
“அம்மா. நான் உங்க கிட்ட முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும்..”
“என்னடா..”
“நான்... விக்ரம்..” என அவள் தடுமாறியதை ரசித்தவர்..
“நீயும் விக்ரம் தம்பியும் விரும்பறீங்க... அதானே..” என்றவர் அம்முவின் திகைத்த முகத்தை பார்த்து சிரித்தார்.... “எனக்கு தெரியும்மா... என் குழந்தையை எனக்கு தெரியாதா.. நீ நல்ல படியா படிப்பை முடி.. அப்புறம் நான் உன் அப்பா அம்மாகிட்ட பேசி சம்மதம் வாங்கி தரேன்..” எனவும் அம்மு மகிழ்ச்சியில் அவரை கட்டிக்கொண்டாள்... அதுவரை இவையனைத்தையும் கேட்டு அறைவாசலில் நின்றிருந்த மித்ரா, அம்முவை அழைத்தாள்... மித்ராவின் குரலைக்கேட்டு அம்மு திரும்பினாள்...
“பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மு...”
“தேங்க்ஸ் சங்கு...” என்றவள் அவள் கையில் கிப்ட்டை கண்டாள்..
அதை ஆவலுடன் வாங்கியவள் வேகவேகமாய் பிரிக்க, அதிலிருப்பதை கண்டு சங்குவை முறைத்தாள்...
“என்ன இது...”
“கிப்ட்டு...
“இதுதான் உங்க ஊருல கிப்ட் ஆ தருவாங்களா...”
“ஆமாம்..”
“ஹேய்.. சமையல் புக் எனக்கெதுக்கு..”
“என்ன அம்மு இப்படி சொல்லிட்ட.. இது சாதாரண புக் இல்லை.. இதுல இருக்க எல்லா டிஷ்ஷும் என் அண்ணாவோட பேவரைட்.. சீக்கிரம் இதெல்லாம் கத்துக்கோ அண்ணியாரே...” என்றவளை அம்மு அடிக்க துரத்த, மித்ரா கையில் அகப்படாமல் ஓடினாள்...
அனைவரும் டைனிங்ஹாலில் சாப்பிட அமர்ந்திருந்தனர்.. இன்று அனைத்தும் அம்முவின் பேவரைட் உணவுகள் சமைக்கப்பட்டு இருந்தன... ஸ்வீட்களும் தான்... அனைவரும் கலகலத்தப்படி உணவுண்ணினர்... பின்பு கோவிலுக்கு சென்று வந்தனர்..
விக்ரம் கோவில் சென்று வந்ததும் அவள் அடிக்கடி செல்லும் குழந்தைகள் ஆசிரமத்துக்கு அழைத்து சென்றான் அங்கு பெரிய தொகையை அவள் பேரில் டோனேசனாக தந்தான்... சிறிது நேரம் அனைவரிடமும் அம்மு விளையாடினாள்.. பின் அங்கிருந்து கிளம்பி மதிய உணவுக்கு அவளுக்கு பிடித்த ரெஸ்டாரன்டுக்கு அழைத்து சென்றான்.. பின் சினிமா பார்த்தனர்.. சாயும்கால வேளையில் அவளுக்கு மிகவும் பிடித்த கடற்கரைக்கு கூட்டி சென்றான்..
அம்முக்கு இந்த பிறந்தநாள் மறக்க முடியாத மகிழ்ச்சியாய் அமைந்தது.. விக்ரம் இவ்வாறு தனக்கு பிடித்தமாதிரி இவ்வளவு யோசித்து செய்வான் என அவள் எதிர்பார்க்கவில்லை.. பின் இருவரும் வீடு திரும்பினர்.. அங்கு உள்ளே சென்றதும் மீண்டும் ஆனந்தமடைந்தாள் அம்மு..
வீடு முழுவதும் அலங்கரிக்கப்பட்டு அவள் பர்த்டே செலிபரேசனுக்காக தயாராகி கொண்டிருந்தது, விக்ரம் அவள் கையில் ஒன்றை திணித்தவன், சீக்கிரம் ரெடி ஆகு என அவள் அறையில் அவளை விட்டு சென்றான்.. அவன் சென்றதும் அம்மு அதை ஆவலுடன் பிரித்தாள், அதனும் ராயல் ப்ளூ சுடிதார் இருக்க மகிழ்ச்சியுடன் ரெடி ஆனாள்..
சிறிது நேரம் கழித்து உள்ளே நுழைந்த விக்ரம் அசந்து போனான்.. அவளது பால் வண்ண குழந்தையின் சருமத்திற்கு ப்ளூ கலர் பாந்தமாய் பொருந்தியது.. அவளது மீன் கண்களுக்கு மை தீட்டியிருந்தாள்... அதை தவிர வேறு எந்த ஒப்பனையும் இல்லாமல் ஒரு தேவதையை போல் அம்மு நின்று கொண்டிருந்தாள்.. கழுத்தில் அவள் எப்போதும் அணிந்திருக்கும் அவனது செயின் இருந்தது, கையின் அவன் அணிவித்த மோதிரம் இருந்தது.. அவள் கைகளில் எதுவும் அணியாமல் அவள் இருப்பதை கண்டான். டேபிளில் அவன் வாங்கி தந்த கண்ணாடி வளையல்களை கண்டு அவளருகே வந்தவன், மெல்ல அவள் கைகளை பிடித்து அவளுக்கு வலிக்காமல் அவள் கண்களை காதலுடன் பார்த்து கொண்டே வளையல்களை அணிவித்தான்... அவள் வெட்கப்பட்டு சிரித்தாள்..
“நீ இப்போ எப்படி இருக்க தெரியுமா..” என மெதுவாய் அவளிடம் கேட்டவன் “வானத்திலிருந்து இறங்கி வந்த நிலவு தேவதை மாதிரி இருக்க...” என காதலுடன் சொன்னான்.. பின் அவள் நெற்றியில் முத்தமிட்டவன் அவள் கைப்பிடித்து அவளை ஹாலுக்கு அழைத்து சென்றான்...