(Reading time: 11 - 21 minutes)

வீட்டுஹாலில் அனைவரும் அம்முவின் வருகைக்காக காத்திருந்தனர்.. அம்முவின் காலேஜ் பிரண்ட்ஸ்களும், கிளாஸ்மேட்ஸ்களும் மித்ராவால் அழைக்கப்பட்டு வந்திருந்தனர்.. விக்ரமும் அமிர்தாவும் மாடியிலிருந்து இறங்கியதை கண்டு அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்... ராயல் ப்ளூ கோட்சூட்டில் விக்ரமும், அதற்கு பொருத்தமாய் அதே கலரில் DESIGNER சுடிதாரில் அமிர்தாவும் ஜோடியாய் கைகோர்த்து மாடியிலிருந்து இறங்கி வந்தனர்... இருவரும் பெர்பெக்ட் ஜோடி என அனைவரும் முணுமுணுத்தனர்.. பின் நேரடியாகவும் அவர்கள் விக்ரம் அம்முவிடம் சொல்ல அதை கேட்டு இருவரும் சிரித்தனர்...

கேக் அழகாய் செய்யப்பட்டிருந்தது... பர்த்டே சாங் அனைவரும் பாட அம்மு கேக் வெட்டினாள். முதலில் விக்ரமுக்கு ஊட்டவும் அனைவரும் “ஓ..வென” கத்தினர்.. அதை கேட்டு வெட்கப்பட்டவள், பின் தாயம்மா யம்மு சங்குவுக்கு ஊட்டினாள்... பின் அனைவருக்கும் கேக் கொடுக்கப்பட்டது, இரவு உணவு அனைவருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது, பின் அனைவரும் அம்முவையும் விக்ரமையும் பாட சொல்லி வற்புறுத்தவும் இருவரும் என்ன பாடுவது என யோசித்தனர்... பின்பு இருவரும் பாட ஆரம்பித்தனர்..

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்

கேட்டாலும் வருமா கேட்காத வரமா

இது போதுமா இல்லை அவசரமா

இன்னும் வேண்டுமா ,அதில் நிறைந்திடுமா

நாம் பார்த்ததால் நம் வசம் வருமா

உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி

 

நிழல் தரும் இவள் பார்வை

வழி எங்கும் இனி தேவை

உயிரே உயிரே உயிர் நீ தான் என்றால்

உடனே வருவேன் உயிர் சாகும் முன்னால்

அனலின்றி குளிர் வீசும்

இது எந்தன் சிறை வாசம்

இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே

 

நிஜமடிப் பெண்ணே தொலைவினில் உன்னை

நிலவினில் கண்டேன்  நடமாட

வலியடி பெண்ணே வரைமுறை இன்றி

வதைக்கிறாய் என்னை மெதுவாக

 

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்

கேட்டாலும் வருமா கேட்காத வரமா

இது போதுமா இல்லை அவசரமா

இன்னும் வேண்டுமா ,அதில் நிறைந்திடுமா

நாம் பார்த்ததால் நம் வசம் வருமா

உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி 

இருவரும் அவர்கள் கண்ணை பார்த்து பாடி முடித்ததும் அனைவரும் கைத்தட்டினர். அனைவருக்கும் புரிந்தது அம்மு-விக்ரமின் காதலை...

“பரத் இங்க என்னடா தனிய நின்னுட்டு இருக்க... உள்ள அமிர்தா பர்த்டே பார்ட்டி நடந்துட்டு இருக்கு.. நீ வெளிய என்ன பண்ணிட்டு இருக்க...”

“என்னை என்னடா பண்ண சொல்ற..” என கோபமாய் கத்தியவனை பார்த்து திகைத்தான் பரத்தின் நண்பன் திலக்..

“என்னாச்சு டா..” என அவன் கவலையாய்  கேட்கவும், பரத் தன் கோபத்தை கட்டுபடுத்தியவன், பின் மனம் உடைந்து கதற ஆரம்பித்தான்...

“என்ன ஏன்டா அவ புரிந்துக்க மாட்டிங்கிறா.. நான் அவளை எவ்ளோ லவ் பண்ணேன்.. ஆனா அவ என் காதலை அச்செப்ட் பண்ணவே இல்ல.. வேற ஒருத்தனை காதலிக்கிறா.. இத தெரிஞ்சிகிட்டு என்னால உள்ளே எப்படி இருக்க முடியும்... என் காதல் உண்மையானதுடா.. அவ ஏன்டா என்னை புரிஞ்சிக்காம அவனை லவ் பண்ணா?.. எனக்கு அவ வேணும்டா... அவ இல்லாம என் வாழ்க்கையே இல்ல.. ஆனா அவ அவன் இல்லாம என் வாழ்க்கையே இல்லன்னு என்கிட்டயே சொல்றாடா.. அதை கேட்டு எனக்கு எவ்ளோ வலிக்குது தெரியுமா.... என்கிட்டே என்ன குறை.. என் காதல் அவளுக்கு பெருசா தெரியல..” என அதுவரை மெதுவாக பேசியவன் கோபம் தலைக்கேற,

“அவளை விட மாட்டேன், அவ என்னை லவ் பண்ண வைக்கிறேன்.. அவ லவர்ரை மறந்து என்ன காதலிக்க வைக்கறேன்.. என்ன ஆனாலும் சரி.. அவளை என்னை லவ் பண்ண என்ன வேணாலும் செய்வேன்.. எனக்கு ஹெல்ப் பண்ணுடா.. ப்ளீஸ்...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.