(Reading time: 7 - 14 minutes)

தொடர்கதை - என் நிலவு தேவதை – 17 - தேவிஸ்ரீ

En nilavu devathai

ம்மு இதை எதிர்பார்க்கவில்லை.. பரத்தை அவள் நண்பனாக ஏற்றுகொண்டாள் தான்... ஆனால் அவன் இங்கு வருவான் என அவள் நினைக்கவில்லை.. விக்ரம் வேறு இல்லை.. அவனிடம் இவனை பற்றி அவள் சொல்லவே இல்லை.. எங்கே... விக்ரமிடம் போன் பேசினால் அவள் உலகத்தையே மறந்து விடுவாள்... ஆனால் விக்ரம் பெரும்பாலும் அவளிடம் பேசுவது அவளின் பாதுகாப்பு பற்றியே இருக்கும்.. பத்திரமாக இரு.. சேட்டையை குறைத்துக்கொள்.. மித்ராவை உன் சேட்டையில் சிக்க வைக்காதே.. என்பான்... காதலுடன் பேசுவான் என எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், இவள் விடுவாளா... இவள் ரொமாண்டிக் ஆக பேச ஆரம்பித்து விடுவாள்... அவனை பாட்டு பாட சொல்லி ஒரு வழி ஆக்கி விடுவாள்.. இதை எல்லாம் யோசித்தவள் பரத்தின் குரல் கேட்டு நடப்புக்கு வந்தாள்..

பரத் இங்கு வந்ததற்கான காரணம் அம்முவுக்கு ஏற்புடையதாக இருந்தது.. ஆனால் மித்ராவுக்கு உவப்பாக இல்லை.. என்ன பண்றது.. நம்ம ஹீரோயின் அந்த அளவு புத்திசாலி... பாவம் விக்ரம்..

பரத் படிப்பில் சுமாராக இருந்தான்.. அதனால் புத்திசாலியான அம்மு, மித்ராவிடம் சேர்ந்து நன்றாக படிக்க வேண்டும் எனும் எண்ணத்தில் வந்தானாம்.. அம்மு கிளாசில் பர்ஸ்ட் தான்.. அதனால் அவனுக்கு சொல்லி கொடுக்க ஒத்து கொண்டாள்.. பரத்தோ மித்ராவிடம் கடலை போட வந்தால், அம்முவிடம் மாட்டி கொண்டான்.. அவள் புரியும்படி சொல்லி தந்தாள் தான்.. ஆனால் பரத்துக்கு தான் ஒன்றும் புரியவில்லை.. அவன் கவனம் இதில் இருந்தால் தானே.. இருந்தாலும் நல்ல பிள்ளை போல் காட்டி கொண்டான்...

மூவரும் சேர்ந்து எக்ஸாமுக்கு தயாராகினர்.. பரத்தும் ஓரளவு நன்றாக படித்தான். வழக்கம் போல் அம்மு கிளாஸ் first வர, மித்ரா இரண்டாவதாக வந்தாள்.. பரத்தும் ஓரளவு நல்ல மதிப்பெண் பெற்றான்.. அதற்கு அம்மு,மித்ராவிடம் நன்றி உரைத்தான்.. மூவருக்கும் இடையே நல்ல நட்பு உருவாகியது.. உருவாக்க பட்டது.. மித்ராவே பரத்தை நம்பும்படி பரத் சூழலை உருவாக்கினான்.. அவர்களின் இன்ப துன்பங்களை பகிர்ந்துகொள்ளும் உற்ற தோழனாய் இருந்தான்.. இதற்கிடையே ஒரு நாள்..

பரத் தனியாக ஒரு இடத்தில் சோகமாக அமர்ந்திருந்தான்.. அதை கண்டு அம்மு அவன் அருகில் வந்தமர்ந்தாள்..

“என்னாச்சி..”

“ப்ச்.. ஒன்னும் இல்ல..”

“நான் உன் பிரண்ட் தான.. என்கிட்ட சொல்லு..”

“வேணாம் பா.. சொன்ன உன் நட்பை இழக்க வரும்..”

“அதெல்லாம் ஏதும் ஆகாது.. உன்னை பத்தி எனக்கு தெரியாதா.. என்னான்னு சொல்லு.. சொன்னாதானே புரியும்..”

“என் சோகம் என்னோடே போகட்டும்.. விடு அம்மு..”

“இப்போ நீ சொல்ல போறியா இல்லையா..”

“போன வருடம் இதே நாளில் தான் மித்ராக்கிட்ட என் லவ்வை சொன்னேன்..” எனவும் அம்மு அவனை கூர்ந்து கவனித்தாள்.. அதை கண்ட பரத்,

“இதுக்கு தான் நான் சொல்லமாட்டேன்னு சொன்னேன்..”

“ஓகே..ஓகே.. SORRY.. உன் பீலிங் எனக்கு புரியுது.. ஆனா அவ மனசுல நீ இல்லை..”

“தெரியும்.. ஆனா இந்த மனசுக்கு அது புரிய மாட்டிங்குதே.. நான் என்ன தப்பு பண்ணேன் அம்மு.. எனக்கு மட்டும் ஏன்.. ஏன் என் லவ் FAILURE ஆச்சு..” என கரகரத்த குரலில் அவன் சொல்லவும் அம்முவுக்கு வருத்தமாய் இருந்தது..

“அவளை நீ மறந்துடு.. உன்னை புரிந்துக்கிட்டு உனக்கேத்த ஒரு பொண்ணு வருவா. கண்டிப்பா நான் சொல்றது நடக்கும்.. இப்படி கவலைபடுவதை முதலில் நிறுத்து.. நல்லதே நடக்கும்..”

“இல்லை அம்மு.. நான் பாவம் செய்தவன்.. எனக்கு நல்லது எதுவுமே நடக்காது.. எனக்கு மித்ராவை மறக்க முடியலை.. நான் இருக்கறதே வேஸ்ட்..” என்று அவன் கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக செல்ல, அம்மு பயந்து கொண்டே அவனை பின் தொடர்ந்தாள்.. ஆனால் அவன் வேகத்திற்கு அவளால் ஈடு கொடுக்க முடியவில்லை..எனவே திலக்குக்கு கால் செய்து நடந்ததை கூற.. அவன் பரத்தை தேடி சென்றான்..

அம்முவுக்கு கவலையாக இருந்தது.. படபடப்பாக காணப்பட்டாள்.. நேராக மித்ராவிடம் சென்றவள் விஷயத்தை கூற ஆரம்பித்தாள்.. மித்ராவுக்கு சிறிது அதிர்ச்சியாக இருந்தாலும் பெரிதாக கவலை கொள்ள முடியவில்லை.. அம்முவை தேற்ற ஆரம்பித்தாள்..

இங்கு திலக்கோ பரத்திடம்,

“என்னடா.. உன் ஐடியா தான் என்ன?..”

“நீ சொன்னதுதான்.. அவங்ககிட்ட நல்ல பேரு வாங்கியாச்சு.. அடுத்து என்ன?... அம்முவே அவ வாயால மித்ர்ரா என்னை லவ் பண்ண சொல்லி சொல்லணும்.. விக்ரமை அம்மு சமாளிசிட்டா வேலை இன்னும் சுலபம்.. அண்ணன் பேச்சை தங்கை கேட்டு தானே ஆகணும்...”

“சூப்பர் டா.. ஆனா இது பத்தாதே..”

“ஆமா.. இது மட்டும் இல்லாம வேறு ஒரு பிளான் இருக்கு..”

“என்ன?..”

“மித்ராவுக்கும் புகழுக்கும் இடையில் misunderstanding என் மூலமா ஏற்படணும்... எந்த ஆணுக்கும் தான் லவர் வேற ஒரு ஆணோட நெருக்கமா இருந்தா பிடிக்காது.. அதைதான் இங்க நான் apply பண்ண போறேன்.. அதுக்கான வேலையை எப்பவோ ஆரம்பிச்சிட்டேன்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.