Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

Pin It

17. புயலுக்கு பின் – வினோதர்ஷினி

 

ருணாவிற்கும் அரவிந்திற்கும் போன் மூலம் தகவல் தெரிவித்தவள், ஆனந்தி வருவதற்காக ஒரு மர நிழலில் காத்திருந்தாள். வழக்கம் போல் சாந்தியின் முகம் சலனமற்று தோன்றிய போதும், அவளின் மனம் அடுத்து செய்ய வேண்டியவற்றை பற்றி தீவிரமாக சிந்தித்து கொண்டிருந்தது. திருப்பி அனுப்ப பட்ட அந்த இரண்டு ஆர்டர்களை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும். வங்கியில் லோனுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்..

"ஹலோ மேடம்....."

ஆனந்தியின் குரலில் சிந்தனை கலைந்தவள்,

"சாரி... உங்களுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.... "

"ஆனாலும் கண்ணை திறந்து வச்சுட்டே தூங்குறது எப்படின்னு உங்க கிட்ட தான் கிளாஸ் எடுத்துக்கனும்..."

உடனடியாக பதில் சொல்லாது புன்னகைத்தவள்,
"அப்படி இல்லை ஆனந்தி... இனி அடுத்து என்ன செய்றதுன்னு யோசிக்கனும் இல்லை... ஏதோ பரவாயில்லை ஜட்ஜ் மனசு வச்சு மூணு மாசம் டைம் கொடுத்திருக்கார்....."

"ஓஹோ.... மூணு மாசத்தில எல்லாம் சரியா போயிடுமா? என்கிட்டே மோதி யாரும் ஜெயிச்சது இல்லை...." அவளின் பேச்சை இடை மறித்து ஒலித்த அந்த குரல்  யாருக்கு சொந்தம் என்று அறிந்துக் கொள்ள அவள் திரும்பி பார்க்க வேண்டி இருக்கவில்லை. அமைதியான முகத்துடன், சுந்தரை நோக்கியவள் பதிலேதும் சொல்லவும் இல்லை.

"எதுக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம்... என்னை பத்தி தெரியனும்னா இதோ இந்த வக்கீலம்மாவையே கேட்டு பாருங்க... நிறைய சொல்லுவாங்க... என்ன ஆனந்தி?" என்று அவன் இளிக்கவும், சாந்தி நிஜமாகவே தான் அதிர்ந்து போனாள். இது என்ன புது கதை!

அவள் குழப்பத்துடன் ஆனந்தியை பார்க்க... ஆனந்தியின் முகத்தை பார்க்கவே பாவமாக இருந்தது... முதலில் இவனிடம் இருந்து விலகி செல்வது தான் நல்லது என முடிவு செய்தவளாய்,

"வா ஆனந்தி நாம போகலாம்....." என்று ஆனந்தியின் கையை பிடித்து இழுத்து சென்றாள்.

"என்ன சாந்தி மேடம்.. இதுக்கே இப்படி ஓடினால்.... நாளைக்கு நடக்க போறதுக்கு எல்லாம் என்ன செய்ய போறீங்க????" என்று பின் தொடர்ந்து தேய்ந்து மறைந்த அவன் குரலை சாந்தி மதிக்கவில்லை.

காரை கண்டுபிடித்து, அருகில் நின்று மற்ற டிரைவர்களுடன் பேசிக் கொண்டிருந்த டிரைவரை அழைத்து வண்டியை கிளப்ப சொல்லிவிட்டு, வழியில் கண்ட பார்க் அருகில் நிறுத்த சொல்லிவிட்டு, வெயில் சற்று குறைவாக தெரிந்த மர நிழலை கண்டுபிடித்து, அதன் அடியில் இருந்த பெஞ்சில் அமரும் வரை சாந்தி ஆனந்தியை எதுவும் கேட்கவில்லை. அவளும் வாய் திறக்கவில்லை.

அங்கே அமர்ந்த பின்னும் ஆனந்தி அமைதியாக அமர்ந்திருக்கவும்,
"ஆனந்தி எல்லா விஷயத்தையும் எல்லோர்கிட்டயும் ஷேர் பண்ண முடியாது தான்... ஆனால் உங்களுக்கு சுந்தரை முன்னாடியே தெரியும் என்பதே எனக்கு ஷாக் தான்.... அந்த ஆளை பத்தி எனக்கு தெரிஞ்ச வரையில் அது நல்ல விஷயமா இருக்க முடியும்னு தோணலை... ஆனால் எனக்கு ஒரே ஒரு குழப்பம் தான்... உங்களுக்கு சுந்தரை தெரிஞ்சிருக்கும் பொது, காலையிலே எப்படி என்கிட்டே இந்த விஷயத்தை பெரிசா எடுதுக்காதீங்கன்னு சொல்ல முடிஞ்சுது????"

ஆனந்தி சாந்தியின் கேள்வியை கேட்டு சற்று ஆச்சர்யத்துடன் அவளை பார்த்தாள். அவள் முகத்தில் சிறிய புன்னகை கூட தோன்றியது.

"என்னோட சீனியர் எனக்கு எப்பவும் ஒரு அட்வைஸ் சொல்வார்... பர்சனல் லைப் வேற ப்ரோபேஷ்னல் லைப் வேறன்னு... எனக்கு பிடிக்கலை என்பதற்காக நான் உங்களுக்கு தப்பா ஒரு விஷயத்தை சொல்ல முடியுமா என்ன? அதுவும் என்னோட சீனியர் சொல்ல சொன்னதை...."

"ம்ம்ம்ம் உங்க எதிக்ஸ் (ethics) பார்த்து எனக்கு புல்லரிக்குது...." என்றாள் சாந்தி.
 
"ரொம்ப தேங்க்ஸ் மேடம்...." என்றாள் ஆனந்தி சற்றும் சம்பந்தம் இல்லாது.

சாந்தி கேள்வியாய் நோக்கவும்..

"இல்லை... பொதுவாகவே எல்லோருக்கும் அடுத்தவரை பத்தி தெரிஞ்சுக்க ஆவல் இருக்கும்... அதுவும் அந்த சுந்தர் சொன்ன பிறகு.... ம்ம்ம்ம்... நீங்க கட்டாயம் ஏதாவது கேட்பீங்கன்னு நினைச்சேன்...."

"ஓஹோ என்னை பார்த்தால் காஸ்சிப்பிங் (gossipping) டைப் மாதிரி இருக்கா?" என்றாள் சாந்தி

"இல்லை மேடம் அப்படி எல்லாம் இல்லை.. பொதுவா மனிதர்களின் குணாதிசயம் அது....... நீங்க ரொம்ப வித்தியாசம்...."

"அப்படி எல்லாம் இல்லை ஆனந்தி... இந்த உலகத்தில பெண்ணாய் பிறந்தால் சில கஷ்டங்களும் இருக்க தான் செய்து...ஒவ்வொருத்தர் தங்களோட மன அமைதிக்கான வடிகாலை ஒவ்வொரு விதமா தேடிக்குறாங்க.... சில பெண்கள் இப்படி ஊர் கதை பேசி தங்களை சமாதானபடுதிக்கிறாங்க... உண்மையில் அவங்க கூட பரிதாபப்பட வேண்டியவங்க தான்...."

"ஒரு விதத்தில நீங்க சொல்றதும் உண்மை தான்... ஆனால் இந்த உலகத்தில பெண்ணாய் பிறக்கிறது தப்பு இல்லை... நம்ம நாட்டை மாதிரி ஒரு இடத்தில பிறக்கிறதும் அதுவும் ஏழையாய் பிறக்கிறதும் தான் தப்பு....."

"அப்படி எல்லாம் சொல்ல முடியாது ஆனந்தி... மத்த நாடுகளிலும் வேற மாதிரியாய் கஷ்டங்கள் இருக்க தான் செய்யுது... பல வருஷங்கள் ஒன்னா வாழ்ந்த பின்னும் திடீர்னு மனைவியை அம்போன்னு விட்டுட்டு போற கணவன்... மனசார விரும்பினாலும் குடும்பம்ன்னு ஒன்னை ஏத்துக்க முடியாத ரிலேஷன்ஷிப்ல மாட்டிட்டு கஷ்ட படுறவங்க... ஏன் அமெரிக்கன் ப்ரெசிடென்ட்டாய் இருந்த கணவன் மற்ற பெண்களிடம் தப்பா நடந்தது தெரிஞ்சப் பிறகும் எதுவும் நடக்காதது போல் காட்டிக் கொண்டு நடமாட வேண்டிய மனைவி..... இப்படி எல்லா இடத்திலேயும் பிரச்சனை இருக்க தான் செய்யுது... உண்மையில் பார்க்க போனால்.. இப்போ எல்லாம் பெண்களுக்கு மட்டும் இல்லை ஆண்களுக்கும் நிறைய பிரச்சனைகள் தான்....."

"நீங்க சொல்றது ரொம்பவே சரி தான்......"

அதன் பின் அவர்கள் இடையே சிறு மௌனம் நிலவியது.

"சரி ஆனந்தி... மனசை போட்டு குழப்பிக்காதீங்க... வாங்க கிளம்பலாம்... பக்கத்தில் ஏதாவது நல்ல ஹோட்டல் இருந்தால் லஞ்ச் முடிச்சிட்டு நான் கிளம்புறேன்...." என்றாள் சாந்தி.

அவளை நேராக பார்த்த ஆனந்தி,
"என்கிட்டே சுந்தர் சொன்னதை பத்தி நீங்க கேட்க போறதில்லையா?"

"ஆனந்தி... என்கிட்டே அதை பத்தி சொன்னால் உங்களுக்கு அமைதி கிடைக்கும்னு தோணிச்சுன்னா நீங்க சொல்லுங்க... இல்லையென்றால் இப்போ அதை பத்தி நாம பேசவே வேண்டாம்...."

"இல்லை மேடம்... நான் உங்க கிட்ட சொல்லி தான் ஆகனும்... என்னோட அமைதிக்காக இல்லை... நீங்க இந்த சுந்தரை பத்தி தெரிஞ்சுக்குறதுக்காக...."

ழையாக இருந்த போதும் நல்ல பாசமான பெற்றோருக்கு பிறந்தவள் தான் ஆனந்தி. அவளுக்கு பின் ஒரு தங்கை.பண தட்டுபாட்டை தவிர வேறு ஒரு பிரச்சனையும் அவர்களுக்கு இருந்ததில்லை. தான் படிப்பறிவு பெற்றிராத போதும் தங்கள் குழந்தைகள் நன்கு படிக்க வேண்டும் என்ற ஆவல் அவளின் பெற்றவருக்கு. அதனால், தான் செய்து வந்த கூலி தொழிலின் சக்திக்கும் மேற்பட்டு நல்ல பள்ளியில் அவர்கள் இருவரையும் படிக்க வைத்தார். ஆனால் அவர் அப்படி படிக்க வைக்க எங்கிருந்து பணம் பெறுகிறார் என்பது வெகு தாமதமாக தான் அவர்களுக்கு தெரிய வந்தது. அந்த சுந்தரை பற்றி நன்கு அறிந்திருந்ததால், அவளின் அன்னை தந்தையிடம், அவனிடம் பணம் கடன் வாங்க வேண்டாம் என்று எடுத்து சொல்லி பார்த்தார். மனைவி சொல்வதின் உண்மை புரிந்தாலும், தன் மகள்கள் படித்து வேலைக்கு செல்ல தொடங்கிவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை என்ற எண்ணம் தந்தைக்கு. எனவே, முழுதாக அந்த கடனில் இருந்து மீண்டு வரவில்லை. வந்த சம்பளத்தில் பாதிக்கு மேல் வட்டிக்கு செல்ல, மற்ற தேவைகளுக்கு மீண்டும் கடன் வாங்குவது என்று கடன் என்னும் சுழலில் நன்றாகவே மாட்டி கொண்டார் ஆனந்தியின் தந்தை.

ஆனாலும் அவர் தெம்பாக இருந்த வரை ஒரு பிரச்சனையும் இருக்க வில்லை. ஆனால் திடீரென்று, அவருக்கு உடல் நலம் சரியில்லாது போனது.. ஒன்றுமில்லை என்று தொடர்ந்து பணிக்கு சென்றவர், ஒருநாள் உயிரற்ற உடலாக தான் திரும்பி வந்தார். அன்று முதல் ஆனந்தியின் குடும்பத்திற்கு சுந்தரினால் தொல்லை தொடங்கியது. பணத்தை கேட்டு அவன் ஆட்கள் அவ்வப் பொது வந்து ரகளை செய்யவும், அப்போது கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த ஆனந்தி, மூத்த மகளாக குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொள்ள முடிவு செய்தாள். நேராக சுந்தரிடம் சென்று, அவன் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி தந்து விடுவதாக சொல்லி கெஞ்சி, இனி இது போல் வீட்டிற்க்கு ஆள் அனுப்ப வேண்டாம் என்று சொல்ல அவன் வீட்டிற்கு சென்றாள்.

"அதுக்கு மேல் என்ன சொல்வது... நான் ஏதோ மனிதனிடம் கெஞ்சி கேட்கலாம் என்று தான் போனேன்... ஆனால் அவன் ஒரு மிருகம் என்று....." அதற்கு மேல் பேச முடியாது தேம்பினாள் ஆனந்தி.

அவள் சொன்னதை கேட்டு கல்லாக அமர்ந்திருந்த சாந்தி திடீரென்று உயிர் பெற்றவள் போல், அவளை அமைதி படுத்துபவள் போல் அணைத்துக் கொண்டாள்...

"ப்ளீஸ் ஆனந்தி... அழுகையை நிறுத்துங்க....."

"இல்லை மேடம்... ஒரு மனிதனால் அவன் சொந்த வீட்டில்.... அதுவும் அங்கேயே மனைவி இருக்கும் போதே இப்படி எல்லாம் நடக்க முடியுமா?? என்னால் நம்ப தான் முடியவில்லை...." என்று தேம்பினாள் ஆனந்தி.

சாந்தி வெகுவாக அதிர்ந்து தான் போனாள்.
"என்ன ஆனந்தி சொல்கிறாய்???? சுந்தரின் மனைவி வீட்டில் இருந்த போதா சுந்தர் இப்படி இப்படி...." முடிக்க முடியாது தடுமாறினாள் சாந்தி. அவளின் குரல் அவளுக்கே வித்தியாசமாக இருந்தது.

ஆம் என்பது போல் தலையாட்டினாள் ஆனந்தி. சாந்திக்கு சுகந்தியின் மீது கோபமாக வந்தது... என்ன பெண் இவள்???? கணவனை கேள்வி கேட்ட்காதது மட்டும் அல்லாது இப்படி ஒருவனுடன் இன்னும் வாழ்ந்துக் கொண்டும் இருக்கிறாள்..... அழுதுக் கொண்டிருந்த ஆனந்தியை பார்த்தவள், சுகந்தியின் மீதான கோபத்தை மூட்டை கட்டி விட்டு, அவளை ஆறுதல் படுத்த முயன்றாள்.

"ஆனந்தி... நடந்து முடிஞ்சதை பத்தி பேசி அழுது எதுவும் ஆக போறதில்லை.... தன்னோட உடல் வலிமையால பெண்களை அடிமையாக்க பார்ப்பது ஆண்களுக்கு பல நூற்றாண்டாக இருந்து வரும் பழக்கம்... ஆனால் அதனால் அந்த பெண் கெட்டு போனவளோ... கற்ப்பிழந்தவளாகவோ முடியாது... மனதால கெட்டு போவது தான் தப்பு.... உனக்கு நான் சொல்லி தெரியனும்னு இல்லை.... அப்போ நீ ஏன் கோர்ட் கேசுன்னு போகலைன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது... ஆனால் இவ்வளவுக்கு பிறகும் நீ இப்படி தைரியமாக வக்கீலாக இருப்பது எவ்வளவு பெரிய விஷயம்.... எனக்கு உன்னை நினைச்சு பெருமையா இருக்கு......"

"இல்லை மேடம்.... நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை.... அவன் வீட்டில இருந்து வெளியில வந்த பிறகு நான் நேரா போய் தற்கொலை பண்ணிக்க தான் நினைச்சேன்... அப்போ என்னை சேகர் சாரோட மனைவி கன்யா அம்மா தான் காப்பாதினாங்க.... அப்புறம் அவங்க தான் எனக்கு தைரியம் சொல்லி படிப்பை முடிக்க சொன்னாங்க... அவங்க தான் என்னை லா படிக்க வச்சாங்க... அப்புறமும் சார் கிட்ட சொல்லி என்னை அவர் ஜூனியரா சேர்த்து விட்டாங்க...."

"நீ எடுத்தது ரொம்ப தப்பான முடிவு ஆனந்தி... தப்பு செஞ்சவன் தைரியமா இருக்க நீ ஏன் பயப்படனும்... இன்னொரு முறை அவனை பார்த்தால் இப்படி பயந்து நடுங்குறதை விட்டுட்டு எதிர்த்து நில்.... இப்போ நீ பழைய ஆனந்தி இல்லை... லாயர் ஆனந்தி உன்னை அவனால அவ்வளவு சுலபமா ஒன்னும் செய்ய முடியாது...." பேசியபடி அவள் முதுகை தட்டி கொடுத்தவள், ஆனந்தியின் அழுகை நிற்க காத்திருந்தாள்.

சில நிமிடங்களுக்கு பின் அவள் தன்னிலை உணர்ந்து சிறிது வெட்கத்தோடு, முகத்தை துடைத்துக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.

"சாரி மேடம்... உங்களை வேற டிஸ்டர்ப் பண்ணிட்டேன்...."

"இல்லை ஆனந்தி... எனக்கே இது ஒரு கண் திறப்பு மாதிரி தான்... உலகத்தில் எத்தனை பேர் எத்தனை விதமாக கஷ்ட படுறாங்க... இத பத்தி எல்லாம் நான் எனக்குன்னு ஒரு கஷ்டம் வரும் வரை யோசித்ததே இல்லை..... அதெல்லாம் இருக்கட்டும் நீ இனிமேல்... சாரி... நீங்க இனிமேல்......"

"ப்ளீஸ் மேடம் என்னை நீங்க இப்படி மரியாதை கொடுத்து தள்ளி வைக்காதீங்க.... இன்னைக்கு வரைக்கும் கன்யா அம்மா தவிர, வேற யாரும் எனக்காக அஞ்சு நிமிஷம் கூட ஒதுக்கியதில்லை....... மூணு வருஷமா இதை மனசிலேயே வச்சு கஷ்ட பட்டுட்டு இருந்தேன்... உங்க கிட்ட இப்போ இதை சொன்ன பிறகு மனசே லேசான மாதிரி இருக்கு..... எங்க அம்மா கிட்டேயும், தங்கை கிட்டேயும், இதை பத்தி எல்லாம் நான் எதுவும் சொல்லலை...."

"இதை தான் கெட்டதிலேயும் நல்லதுன்னு சொல்வாங்க..... உனக்கு இனிமேல் எப்போ எந்த ஹெல்ப் வேணும்னாலும் உங்க கன்யா அம்மா மட்டும் இல்லை இந்த சாந்தி அக்காவும் இருக்கேன் ஞாபகம் வச்சுக்கோ....."

"ரொம்ப தேங்க்ஸ் மேடம்....."

 

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 
Add comment

Comments  
# RE: புயலுக்கு பின் - 17Anusha Chillzee 2012-05-19 01:31
Vino, ellaa series-kkum enna aachunnu kettaachu.. ungalai mattum kekkaatti eppadi? Please post the next episode soon.
Reply | Reply with quote | Quote
# RE: புயலுக்கு பின் - 17Admin 2012-05-19 02:36
Hi Anu, Thanks for your interest :-) Actually lot of articles are pending with me for publishing... I am stuck with some household chores.. so sorry about it...

Will publish all the series + updates asap.
Reply | Reply with quote | Quote
# RE: புயலுக்கு பின் - 17Anusha Chillzee 2012-05-08 18:33
Gud going Vinodarshini...
Reply | Reply with quote | Quote
# RE: புயலுக்கு பின் - 17Nanthini 2012-05-08 22:07
Thanku madam...
Quoting Anusha:
Gud going Vinodarshini...
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top