Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 4.20 (5 Votes)
மனம் விரும்புதே உன்னை... - 10 - 4.2 out of 5 based on 5 votes

10. மனம் விரும்புதே உன்னை...

 

Story summary till episode 9:

Geetha, Veena and Indhu are very close friends. Geetha is married to Rajeev and Veena is married to Avinash. Indhu's marriage got stopped because of the groom Sekhar's love affair with Nadhini and Sekhar marries Nandhini who is Indu's long time enemy. Because of the sudden death of her father and the unexpected twist in her marriage, Indhu is slightly depressed. But her life changes after meeting Geetha's brother-in-law Sanjeev. Sanjeev is also head over heels in love with Indhu. Veena and Geetha also believe that Sanjeev is the best match for Indhu. But Sanjeev's mother plans to wed him to her brother's daughter Kanmani. Meanwhile when Sanjeev proposes to Indhu, she requests him to give her more time to take a clear decision....

So will Sanjeev and Indhu succeed in their love?

Now you can join us from here....

ஞ்சீவின் காரில் இருந்து இறங்கி உள்ளே சென்ற இந்துவிற்கு மனம் பரபரத்துக் கொண்டே இருந்தது. உடலில் இது வரை அறிந்திராத புளங்காகிதம், மனதில் ஒரு உல்லாசம்..... முகத்தில் புன்னகையோடு உள்ளே சென்றவள், கனகாவை பார்த்து அதே புன்சிரிப்போடு,
"அம்மா எங்கே?" என்று கேட்டாள்.

"உள்ளே தான் இருக்காங்க சின்னம்மா..."

"சாப்பிட்டாங்களா?"

"இல்லை... உங்களுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க..."

சரி என்றபடி அங்கிருந்து நகர்ந்தவள், நேராக அன்னையின் அறைக்கு சென்றாள். ஏதோ புத்தகத்தில் ஆழ்ந்திருந்த அர்ச்சனாவின் முகம் மகளை கண்டவுடன் தானாக மலர்ந்தது.

"வாடா செல்லக்குட்டி...."

"என்னம்மா இது... நான் என்ன சின்ன குழந்தையா... இப்படி என்னை குட்டின்னு கூப்பிட...." செல்லமாக சிணுங்கியபடி, அன்னையின் அருகில் சென்று அமர்ந்தாள் இந்து.

"நீ என்னைக்கும் எனக்கு சின்ன பாப்பா தான்....." என்றபடி மகளின் தலையை அன்புடன் வருடிய அர்ச்சனா, அவளின் முகத்தை பார்த்து விட்டு ஏதோ தோன்றவும்..

"என்னடா எதோ சொல்ல வந்த போல இருக்கே....."

"ம்ம்ம்... ஆமாம் அம்மா சொல்ல தான் வந்தேன் அதுக்கு முன்னாடி உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கனும்.... சரி அதெல்லாம் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணட்டும்... வாங்க போய் சாப்பிடலாம்..."

"ஹுஹும்ம்ம் .... நீ போய் முதல்ல கையை கழுவிட்டு டிரஸ் மாத்திட்டு வா... வெளியே போயிட்டு வந்து அப்படியே சாப்பிட கூடாதுன்னு சொல்லி இருக்கேன் தானே...."

"போங்கம்மா...." என்று செல்லமாக சினுங்கிய போதும், அன்னையின் சொல் படி எழுந்து சென்று உடை மாற்றி, முகம் கழுவி வந்தாள் இந்து.

அவள் டைனிங் ஹாலை அடைந்த போது, அர்ச்சனாவும் கனகாவும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். என்ன என்பது போல் இருவரையும் மாறி மாறி பார்த்தாள் இந்து,

"வேற ஒன்னும் இல்லைடா... உனக்கு திருஷ்டி சுத்தி போட சொல்றா கனகா....."

"ஆமாம் சின்ன அம்மா... நீங்க இன்னைக்கு முகத்தில இப்படி சிரிப்போட இருக்கிறதை பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு... என்னைக்கும் இல்லாமல் இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க...."

"ம்ம்ம்ம்... என்ன ஒரே ஐஸ் மழையா இருக்கு.... அப்போ இவ்வளவு நாள் நான் அழகா இல்லையா??"

"அப்படி இல்லை சின்னம்மா... இவ்வளவு நாளும் நீங்க அழகா தான் இருந்தீங்க... ஆனாலும் முகத்தில ஒரு சின்ன சோக ரேகை இருந்துட்டே இருக்கும்.... எப்போதும் ஏதோ யோசனையிலேயே இருப்பீங்க... ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்கு தான் பழைய மாதிரி இருக்கீங்க.... ஐயோ என் கண்ணே பட்டிருக்கும்.... சாப்பிட்ட உடனே நானே திருஷ்டி சுத்தி போடுறேன்...."

பதில் ஏதும் சொல்லாது, அமைதியாக உணவருந்த தொடங்கினாள் இந்து. அர்ச்சனாவும் அமைதியாகவே உணவருந்தினார். இருவரும் உண்டு முடித்த பின்,

"அம்மா, உங்களுக்கு தூக்கம் வருதா? நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்...." என்றாள் இந்து.

"உன்னை விட எனக்கு வேற என்ன முக்கியம்... இப்போதே பேசலாம் வா..."

அவள் சரி என்று சொல்ல வாய் திறந்த போது, வாசலில் அழைப்பு மணி ஒலி எழுப்பியது. இந்த நேரத்தில் யார் என்று எண்ணிய படி, வீட்டில் இருந்த வீடியோ பாதுகாப்பு கருவியில் பார்த்தவள், இருவர் கதவருகில் நிற்பதை கண்டாள். அதே நேரம் அவர்கள் வீட்டு தொலை பேசியும் சினுங்கியது. அதை எடுத்து பேசிய அர்ச்சனா, முகத்தில் கேள்வியும் குழப்பமுமாய் நின்ற மகளை பார்த்து விட்டு,
"சஞ்சீவ், ஏதோ செக்யூரிட்டிக்கு ஆள் அனுப்புறேன்னு சொல்லி இருந்தானாமே... அவங்க தான் வெளியே நிற்பது...."

"ஓ!" இவ்வளவு விரைவாக அவன் செயல் படுவான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை... ஆனாலும் சஞ்சீவின் அக்கறை மனதுக்கு இதமாக இருந்தது.

அவள் அங்கேயே நிற்கவும், அர்ச்சனாவே கதவை திறந்து அவர்களிடம் பேசினார். பின் கதவை தாளிட்டு விட்டு வந்தார்.

"அவங்க ரெண்டு பேரும் இன்னைக்கு செக்யூரிட்டிக்கு இருக்க போறாங்களாம்... நாளைக்கு மத்த விஷயம் எல்லாம் பேசலாம்ன்னு சொல்லி இருக்கேன்... பரவாயில்லையே சஞ்சீவ் ரொம்ப ஹெல்ப் பண்றானே... சரி வாடா செல்லம்... நீ ஏதோ பேசனும்னு சொன்னியே...."

கனகாவிடம் உண்டு உறங்க சொல்லி விட்டு, அன்னையும் மகளும், மாடிக்கு சென்றனர். அர்ச்சனாவின் அறைக்குள் சென்று பின், இந்து முதலில், அன்னையின் செல் போனை எடுத்து சுவிட்ச் ஆப் செய்தாள். பின் அறையில் இருந்த தொலை பேசியையும் எடுத்து வெளியே வைத்தாள்.

"என்ன செய்ற இந்து... எதாவது முக்கியமா...."

"எதுவா இருந்தாலும் கொஞ்ச நேரம் காத்திருக்கட்டும்.... மிஞ்சி மிஞ்சி போனால் வேற யார் இந்த டைம்ல போன் செய்வா? அத்தையோ இல்லை உங்களோட புதிய வளர்ப்பு மகளோ தான்....."

"ம்ம்ம்... இது என்ன பொறாமையா.... நந்தினி பாவம் இந்து... அவளை பத்தி உனக்கு முழுசா தெரியாது...."

"எனக்கு தெரியவே வேண்டாம்....."

மகளின் கோபத்தை பார்த்து அர்ச்சனாவிற்கு சிரிப்பு வந்தது. இன்னும் அவள் குழந்தை தான் என மனதில் எண்ணி சிரித்துக் கொண்டார்.

"சரி போகட்டும்... இப்போ சொல்லு அப்படி என்ன விஷயம் பேசனும்..."

"நான் பேசுறது இருக்கட்டும்... நீங்க எனக்கு முதல்ல ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்க....காஞ்சனா ஆன்ட்டி கிட்ட போன் செய்து பேசினீங்களா?"

மகளின் கேள்வியில் சிறிது திகைத்த போதும், உடனே சமாளித்து கொண்டு,
"அதுக்குள்ளே உன் வரைக்கும் விஷயம் வந்தாச்சா? ம்ம்ம்... நான் நினைச்சதை விட காஞ்சனாவும் கீதாவும் ரொம்ப க்ளோஸ் தான் போல இருக்கு..."

"இந்த மழுப்பல் எல்லாம் வேண்டாம்.... அவங்க க்ளோஸா இருந்தா இருந்துட்டு போகட்டும் எனக்கு பதில் சொல்லுங்க...."

"வாயாடி.... சஞ்சீவுக்கு எப்போ கல்யாணம் பண்ற ஐடியால இருக்காங்கன்னு தெரிஞ்சுக்க தான் போன் செய்தேன்...."

"அத தெரிஞ்சு கிட்டு என்ன செய்றதா பிளான்?"

"இல்லை இந்துமா.. என் பிரெண்ட்...."

"அம்மா என்கிட்டே பொய் சொல்லாதீங்க...."

 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: மனம் விரும்புதே உன்னை... - 10chandra.e 2012-09-05 14:56
nice
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 10Anusha Chillzee 2012-05-19 01:29
Hey Aadhi, What happened ma'am.. It's already May 18th and no signs of MVU 11.

Eagerly waiting for the next part :)

Last week we had updates for all 4 series and this week no updates?????
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 10Anusha Chillzee 2012-05-10 18:52
:-) So Nandhini is going to become part of the story atlast....
Hope Indu - Kanmani relationship becomes strong too... Otherwise how will they over power Kanchana?
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 10Admin 2012-05-10 00:12
Nice work Aadhi... Even I am waiting for Nandhini and for the reactions from Kanchana....

Kalakureenga...
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 10Nanthini 2012-05-10 00:08
Looks like Nandhini character will be in picture soon.... Waiting for her Aadhi...
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top