(Reading time: 13 - 25 minutes)

ராமசாமியின் உறவினர்கள் தங்களை அவர் அவமானப்படுத்தி விட்டதாக பேச, அதற்கு அவர் மறுமொழி கொடுக்க என்று சற்று நேரம் அந்த இடம் களேபரமாக இருந்தது... இறுதியில் ராமசாமி தங்களை மதிக்கவில்லை இனி எதற்கும் தங்களை கூப்பிடவேண்டாம் என்று கோவத்தில் கத்திவிட்டு அவரின் உறவினர்கள் கிளம்பிச் செல்ல அந்த இடமே போர் நடந்து முடிந்த இடம் போல் காட்சி அளித்தது....

“மறுபடியும் இப்போ நடந்ததுக்கு நான் sorry கேக்கறேன் அங்கிள்... உங்க பொண்ணை நான் மனசார விரும்பறேன்... அவளை கல்யாணம் பண்ண ஆசைப்படறேன்...”

“தம்பி நீங்க சொல்றது சரியா வருமா... உங்க பெத்தவங்க என்ன சொல்லுவாங்க... இது நீங்க மட்டும் வந்து பேசற விஷயம் இல்லையே தம்பி....”

“கண்டிப்பா அங்கிள்.... இன்னைக்கு நான் இதைப் பத்தி பேசவே வரலை... ஆனா சூழ்நிலை சொல்ல வேண்டியதாப் போச்சு... எங்க வீட்டுல என் மனசுக்கு பிடிச்சவ யாரா இருந்தாலும் ஆலத்தி எடுத்து வரவேற்பாங்க... உங்களுக்கு அந்தக் கவலையே வேண்டாம்... இன்னைக்கே நான் போய் எங்கம்மா, அப்பாக்கிட்ட விஷயத்தை சொல்லிட்டு உங்ககிட்ட பேச சொல்றேன்... அதுக்கு முன்னாடி உங்க விருப்பம் எனக்குத் தெரியணும்....”

“உங்களை மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் தம்பி... நீங்க எங்க கேஸ் எடுத்து நடத்தப் போறீங்க அப்படின்னும்போதே உங்களைப் பத்தி விசாரிச்சுட்டேன்... அத்தனை பேரும் உங்களை அப்படி புகழ்ந்து பேசினாங்க... அதுவும் இல்லாம உங்களை நாங்க இவ்ளோ நாளா பார்க்கிறோம்... நீங்க எப்படிப்பட்டவர் அப்படின்னு தெரியாதா.... எனக்கு பூரண சம்மதம்... நீங்க உங்க அம்மா, அப்பாக்கிட்ட பேசிட்டு சொல்லுங்க....”, அவரின் சம்மந்தம் கிடைத்ததும் சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்றான் சாரங்கன்...

“ரொம்பத் தேங்க்ஸ் அங்கிள்... அப்பறம் உங்களுக்கு நான் பண்ற வேலை பத்தி தெரியும்... வக்கீல் தொழில் தவிர, எனக்கு போடோக்ராபி ஹாபி.... so அதுலே எனக்கு வருமானம் தனியா வரும்...”

“தம்பி நீங்க இதெல்லாம் சொல்ல வேண்டியதே இல்லை... மயூரி இருக்கறதை வச்சு சந்தோஷமா வாழற பொண்ணு...”

“சரி அங்கிள்... அப்போ நான் கிளம்பறேன்... அம்மா, அப்பாக்கிட்ட பேசிட்டு சொல்றேன்...”, என்று கூறி அவர்களிடம் விடைபெற்று வெளியில் வந்த சாரங்கன் பாரதியை அழைக்க...

“ஹலோ ஏண்டா இப்படி கரடி வேலை பார்க்கிற.... நானே இப்போதான் ராஜாக்கூட ஹோட்டல்க்கு வந்தேன்... கரெக்டா மூக்கு வேர்த்துடுமே...”, பாரதி பொரிய, ராஜா அவளின் கையை தட்டி அமைதியாக பேச சொன்னான்...

“ஏய் பக்கி.... கத்தாம நான் சொல்றதை கேளு... மயிலு வீட்டுல பேசி சம்மதம் வாங்கிட்டேன்....”

“என்னடா சப்பாணி சொல்ற.... மயிலு உனக்கு ஓகே சொல்லிட்டாளா... இது என்ன காலக்கொடுமை... அந்த பொண்ணு புத்தி இப்படியா பேதலிச்சு போகணும்... ஏண்டா சப்பாணி நிஜமாத்தான் சொல்றியா.....”

“உனக்கேண்டி பொறாமை பிடுங்குது.... மாமாவோட ப்ரோபோஸல் பார்த்து மயிலு அப்படியே மயங்கிடுச்சு தெரிஞ்சுக்கோ.... (readers கூட உங்க performance பார்த்து மயங்கிட்டாங்க Mr. சாரங்கன்)  இப்பயானும் நான் ஒரு ரொமாண்டிக் ஹீரோ அப்படின்னு ஒத்துக்கோ....”

“அடேய் சப்பாணி இது உனக்கே ஓவரா தெரியலை... சரி அங்க என்ன நடந்துதுன்னு விளக்கமா சொல்லு...”

பாரதி கேட்க சாரங்கன் அங்கு நடந்ததை முழுமையாக சொன்னான்....

“டேய் இப்படி ஒரு கேவலமான ப்ரோபோஸலைத்தான் பெருமையா சொன்னியா..... இதுக்காகவே மயிலு உன்னை ரிஜெக்ட் பண்ணி இருக்கணும்.... சரி போனா போகட்டும் விடு... நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்துடுவேன்... அப்பறம் மிச்சத்தை பேசலாம்... இப்போ கரடி வேலை பார்க்காம லைனை கட் பண்ணு....”, பாரதி கைப்பேசியை வைக்க, ராஜா என்ன விஷயம் என்பதுப்போல பார்த்தான்....

“நம்ம சப்பாணிக்கு மயில் பச்சைக் கொடியைக் காட்டிட்டாளாம் ராஜா...”, என்க  ராஜாவிற்கு யார் இந்த சப்பாணி அண்ட் மயில் என்றே புரியாமல் முழித்தான்...

“ஓ sorry sorry... நம்ம சாரங்கனுக்கு அவன் லவ் பண்ற பொண்ணு ஓகே சொல்லிட்டாளாம்...”, என்று புரிய வைக்க..

“ஓ சூப்பர்... எனக்கிட்ட போன் கொடுத்திருக்கலாம் இல்லை... நான் விஷ் பண்ணி இருப்பேனே...”

“எதுக்கு இன்னும் ஒரு அரைமணி அவன் மொக்கை போடவா... நாமளே பார்க்கிறது அபூர்வமா இருக்கு... இதுல அந்தக் கரடி கூட வேற பேசி டைம் வேஸ்ட் பண்ணனுமா...”

“மேடம் நாங்க எப்பவும் உங்களை பார்க்க ரெடியாத்தான் இருக்கோம்... நீங்கதான் பயங்க பிஸி... அம்மாக்கூட உன்னை பார்க்க முடியலையேன்னு சொல்லிட்டே இருக்காங்க... போன் பண்ணினாலும் அஞ்சு நிமிஷத்துக்கு மேல பேச மாட்டேங்கற......”

“என்ன பண்ண ராஜா... இப்போ எடுத்து இருக்கற ரெண்டு வழக்குமே ரொம்ப முக்கியமானது... அதுக்கான வேலைகளை செய்யரதிலையே முழு நேரமும் போய்டுது... இதோ இப்போ நான் வந்தது கூட அடுத்த வாரத்துல இருந்து ரெண்டு கேஸ் ஹியரிங்கும் ஆரம்பிச்சுடும்... அப்பறம் மூச்சு விடக்கூட நேரம் இல்லாம இருக்கும்... so இனி அடிக்கடி பார்க்கிறது கஷ்டம்தான்...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.