(Reading time: 4 - 7 minutes)

தொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 22 - மீரா ராம்

thaaba poovum naan thaane... poovin thagam nee thaane

நியூ யார்க் ஏர்ப்போட்டில், கௌஷிக் சற்று முன்னே நடக்க, கல்யாணியும், சாருவும் அவனின் பின்னே நடந்து வந்தனர்…

கல்யாணி மெதுவாக சாருவிடம், “தீபன் வருவானாம்மா?...” எனக் கேட்டிட, அவளோ இல்லை என்றாள்…

“பின்ன எப்படிம்மா?...”

“அது வந்தும்மா… என் ஃப்ரெண்ட் ஒருத்தி இங்க தான் இருக்குறா… அவ வீட்டுல ஸ்டே பண்ணிப்பேன்…”

“ஓ….” என்ற அவரின் ஓரெழுத்தில் ஓராயிரம் அர்த்தம் இருந்ததை ஏனோ சாரு அந்நேரத்தில் உணர்ந்து கொள்ளவில்லை…

அப்பொழுது, சாருவைத் தேடி வந்தாள் ஒரு பெண்…

“ஹேய்… சுஜா…”

உற்சாகத்துடன் சாரு அழைத்திட, ஏனோ வந்திட்ட பெண்ணின் முகத்தில் அந்த உற்சாகம் தென்படவில்லை…

“என்னாச்சு சுஜா?... எதும் ப்ராப்ளமா?...”

“சாரி சாரு… எனக்கு எப்படி சொல்லுறதுன்னு தெரியலை… அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்… இப்போ ஹாஸ்பிட்டல்ல இருந்து தான் வர்றேன்…”

“இப்போ எப்படி இருக்குறாங்க அங்கிள்?..”

“ஹ்ம்ம்… அப்செர்வேஷன்ல வச்சிருக்காங்க… இன்னும் ஆஞ்சியோ பண்ணலை… அதுல தான் க்ளியரா ப்ளாக் பத்தி சொல்ல முடியும்னு சொல்லிட்டாங்க…”

“நீ எனக்கு போன் பண்ணியிருக்கலாம்ல… எதுக்கு அங்கிளை தனியா விட்டுட்டு வந்த?...”

“இருக்கட்டும் சாரு… நீயே பாவம், ஃபர்ஸ்ட் டைம் இங்க வந்தும், உங்கூட இருந்து பார்த்துக்க முடியலை… அதான் நேருல பார்த்து விஷயத்தை சொல்லிட்டு உன்னை கூட்டிட்டு போகலாம்னு வந்தேன்…”

“எங்க சுஜா?...”

“என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தி இருக்குறா… அவ தனியா தான் இருக்குறா… நீ அவ கூட ஸ்டே பண்ணிக்கோ… நான் ஹாஸ்பிட்டல் போயிட்டு டேரக்டா அங்கேயே வந்துடுறேன்… நானும் அங்கேயே ஸ்டே பண்ணிக்கிறேன்… உனக்கும் கம்பெர்ட்டபிலா இருக்கும்… உன்னை என் வீட்டுக்கே கூட்டிட்டு போகலாம் தான்… ஆனா நான் ஹாஸ்பிட்டல் அது இதுன்னு அலையும்போது நீ வீட்டுல தனியா இருக்குற மாதிரி ஆகிடும்… அதான் இந்த ஏற்பாடு…. சாரி சாரு… தப்பா எடுத்துக்காத…”

“ஹேய்… இதுல என்ன இருக்கு சுஜா?... பரவாயில்லை நீ போய் அங்கிளை பார்த்துக்கோ… நான் மேனேஜ் பண்ணிப்பேன்…”

“எப்படி மேனேஜ் பண்ணுவ?...”

“ஹோட்டல் இருக்குல்ல… அங்க ஸ்டே பண்ணிக்கிறேன்… நோ ப்ராப்ளம்…”

“நோ வே… தீபனுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்… நீ மரியாதையா எங்கூட வா…”

அவள் கட்டாயப்படுத்திக்கொண்டிருக்கும்போதே, அவள் கைபேசி சிணுங்கிட, தான் இப்போதே வருவதாக எதிர்முனையில் கூறினாள்…

“சாரு… ஹாஸ்பிட்டல்ல இருந்து தான் கால்… உடனே வர சொல்லுறாங்க…”

“நீ போ சுஜா… நான் பார்த்துக்குறேன்…”

“இல்ல சாரு… நீ வா…. உன்னை அவ வீட்டுல விட்டுட்டு நான் போறேன்…”

அதுவரை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த கல்யாணி, சுஜாவிடம், “நீ போம்மா, நான் பார்த்துக்குறேன் சாருவை…” எனக் கூற, சுஜாவின் பார்வையோ தீவிரமாய் அவரின் மேல் பதிந்தது…

“இவங்க..?...” என அவள் கேள்வியோடு நிறுத்த,

“ரிலேட்டிவ்….” என்றார் கல்யாணி சாரு கூறும் முன்…

“ஓ…. சரி ஆன்ட்டி… பட் உங்களுக்கு ஏன் சிரமம்… நானே அவளை கூட்டிட்டு போறேன்…”

“இல்லம்மா… நீயோ அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லுற?... இதுல சாருவும் அங்க வந்து உனக்கு அப்பாவை சரியா பார்த்துக்க முடியாம போகலாம்… நானே பார்த்துக்குறேன்… அவ என் பொண்ணு மாதிரி….”

அவரின் கடைசி வார்த்தையில் இருந்த அழுத்தம் சுஜாவை சம்மதம் சொல்ல வைக்க, சாரு தான் திண்டாடி போனாள்… எப்படி அவனுடன் தங்க முடியும் என?...

“அவ என் பொண்ணு மாதிரி…” என கல்யாணி சொல்லிக்கொண்டிருக்கையில் கௌஷிக்கும் அங்கே வந்துவிட,

“கௌஷிக்… கண்ணா… சாருவை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்னு நான் நினைக்கிறேன்… நீ என்ன சொல்லுறப்பா?...” என்றார் அவர் மகனிடம்…

ஒரு நிமிடம் அவன் புருவம் உயர்ந்து மனமானது பதட்டமடைய, பின் சுதாரித்தவன், “நீங்க நினைச்சபடியே செய்யலாம்மா…” என்றான் தாயின் முகம் பார்த்தபடி…

“வாம்மா… போகலாம்…” என சாருவின் கைப்பிடித்து அவர் அழைத்து செல்ல, சுஜாவும் அங்கிருந்து கிளம்பினாள்…

“முகம் பார்த்திட காத்திருக்கும் மலராய்… தன்னவனின் வருகையை எதிர்நோக்கி…”

Episode # 21

Episode # 23

{kunena_discuss:1162}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.