(Reading time: 5 - 9 minutes)

தொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 23 - மீரா ராம்

thaaba poovum naan thaane... poovin thagam nee thaane

ண்ணைக் கவரும் விதமாய் வழி எங்கும் பல கலைவண்ணங்கள் தென்பட்டாலும், எதிலுமே சாருவின் மனமானது ஈடுபடவில்லை முழுவதும்…

கௌஷிக்கின் கார், ஒரு பெரிய வீட்டிற்குள் நுழைய, கல்யாணியோ சாருவை வீட்டினுள் அழைத்துச் சென்றார்…

தயங்கி தயங்கி உள்ளே சென்றிட்ட சாருவோ அந்த வீட்டின் அழகில் மனதை பறிகொடுத்தாள்…

வெளியிலிருந்து பார்ப்பதற்கு வெளிநாட்டில் இருக்கும் வீடு போல் காட்சி அளித்திட்ட அந்த இல்லத்தின் உட்புறமோ பார்ப்பதற்கு தேவலோகம் போன்றிருந்தது…

அழகாக, தமிழ்நாட்டு சாயல் நிறைய தென்பட, திறம்பட கண்ணைப் பறிக்கும் வகையில் இருந்திட்டது அவனது அந்த வீடு…

சாருவின் பார்வையை கண்டு கொண்ட கல்யாணி, “சாரு, வீடு உனக்கு பிடிச்சிருக்கா?...” என வினவிட,

“ரொம்ப பிடிச்சிருக்கும்மா…” என்றாள் அவளோ சற்றும் தாமதிக்காமல்…

“சரிம்மா… வா… வந்து ரெஸ்ட் எடு… அப்புறமா வீட்டை சுத்தி பார்க்கலாம்…” என்றவர் அவளை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார்…

அவளிடம் ஓய்வு எடுக்கும்படி கூறிவிட்டு, அவர் சென்றதும், அவள் முகம் கழுவ வேண்டும் என நினைக்கையில், தன் பேக்கை எடுத்து வராத்து நினைவுக்கு வந்து தனது அறையிலிருந்து வெளிவர நினைத்து கதவினை நோக்கி செல்கையில்,

“எக்ஸ்கியூஸ்மி….” என்ற குரல் கேட்டு நிமிர்ந்திட்டாள் சாரு…

அவளின் உடைமைகளோடு அவன் அவளது அறை வாசலில் காத்திருக்க, கணம் கூட தாமதிக்காது, அவனை நோக்கி ஓடினாள் அவள்…

“அய்யோ… சாரி… நீங்க ஏன் இதை எடுத்துட்டு வந்தீங்க… நான் வந்துருக்க மாட்டேனா?...” என்றவள் கேட்டுக்கொண்டே அவனிடமிருந்த தனது பையினை வாங்க முயற்சிக்க, அவனோ சிரித்தான்…

“நீங்க என் கெஸ்ட்…. சோ உங்களை நல்லா பார்த்துக்குறது என் பொறுப்பு தான?... அப்போ இதெல்லாம் ஒரு விஷயமா?...”

அவன் தன் முத்துப்பல் வரிசை தெரியும்படி சிரிக்க, சட்டென சாருவோ இடம் மறந்து சுற்றம் மறந்து அவனையே பார்த்திட்டாள்…

“சிரிக்கும்போது தான் எவ்வளவு அழகாக இருந்து தொலைக்கின்றான்….!!!...”

அவளின் மனது அவனைப் பற்றி எண்ணிய நேரத்தில், அவளது அந்த வியப்பிற்குள்ளாகி விரிந்த கண்களை விழியலகலாமல் பார்த்திட்டான் கௌஷிக்கும்…

“உன் மனசை இந்த ஒரு பார்வை சொல்லிடுதே…!!!!!.....”

அவனும் தன் மனதினுள் அவளின் பார்வையினை சிலாகித்து உணர, சில நிமிட இடைவெளியில் இருவருமே சட்டென தன்னுணர்வு பெற்றனர் திடீரென…

கன்னம் தொட்ட கூந்தலை வெட்கத்துடன் சரி செய்து கொண்டே, “சாரி… குடுங்க….” என அவனிடமிருந்து வலுக்கட்டாயமாக பிடுங்க முயற்சித்தாள் அவள்…

அவளின் அந்த வெட்கத்தினை ரசித்துக்கொண்டே, கையிலிருந்த பையை விடாமல் பிடித்துக்கொண்டான் அவனும் இதழில் தோன்றிய குறுநகையுடன்…

அவனின் அந்த செய்கை அவளை இயல்பாக இருக்க விடாது செய்திட, “இவன் என்ன?... இப்படி செய்கிறான்?.... ஊரிலிருக்கும் போது கண்டுகொள்ளாமல் இருந்தது என்ன?... பெயருக்கு புன்னகைத்தது என்ன?... ஓரிரு வார்த்தைகள் பேசியது என்ன?... ஆனால்… இன்று….” என எண்ணமிட்டவளுக்கு, அவனின் செய்கைகள் மனதினுள் ஒரு பெரிய கேள்வி எழுப்பிய போதிலும், அவன் அவளுடன் இருந்திடும், இந்த தருணங்கள் அதனை அழித்திடவே முயற்சி செய்திட்டது…

“இவ்வளவு மாற்றம் அவனில் எப்படி?... அதுவும் இந்த ஓரே நாளில்?...”

யோசிக்க யோசிக்க அவளுக்கு மூளை மரத்து போனது… ஆம்… அவள் யோசனைகளுக்குள் ஆட்படும்போது, அவன் நடந்து கொள்ளும் விதம் அதனை மறக்கடித்து அவளை அவனில் மூழ்கச் செய்திட்டது கொஞ்சம் கூட மிச்சமில்லாது…

அவளின் முகமானது அவள் எண்ணுவதை அவனுக்கு படம்பிடித்து காட்டிட,

“உங்க பேக்….” என அவனே அவளிடம் கொடுத்திட, அவள் சுயநினைவை அடைந்தாள்…

“தேங்க்ஸ்…”

அவனைப் பார்த்து அவள் நன்றி உரைக்க,

“எதுக்கு?...” என புருவம் உயர்த்தினான் அவனும் சட்டென…

“இவ்வளவு தூரம் கொண்டு வந்ததுக்கு….”

அவள் தரையை வெறித்துக்கொண்டு கூற,

“அப்போ நானும் தேங்க்ஸ்….” என்றான் அவனும் அதே முக மலர்ச்சியுடன்…

அவள் கேள்வியுடன் அவனை நிமிர்ந்து பார்த்திட, அவனோ பதிலே சொல்லாது புன்னகை ஒன்றை மட்டும் வீசி விட்டு திரும்பி நடந்தான்…

“ஒரு நிமிஷம்…” என்றவள் அவன் நடை நின்றதும், “ஏன்னு சொல்லாமலே போறீங்க?...” என அவன் முகம் பார்த்து நிறுத்த,

“அதான் நீங்க சொன்னீங்களே….” என்றான் அவனும் இயல்பாக…

“நான் என்ன சொன்னேன்?...”

“தேங்க்ஸ் சொன்னீங்கள்ள…”

“ஆமா… ஆனா நீங்க?...”

அவள் குழம்புவதை பார்த்தவன் அதற்கு மேலும் அவளை தவிக்கவிடாது,

“தேங்க்ஸ் எதுக்குன்னு நான் கேட்டதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?...” என அவன் கேட்டிட

“இவ்வளவு தூரம் கொண்டு வந்ததுக்கு சொன்னேன்…” என்றாள் அவளும் புரியாமல்…

“அதுக்குத்தான் நானும் சொன்னேன்….”

அவனும் சொல்லிவிட்டு அவளைப் பார்க்க,

“நான் பையை இங்க கொண்டு வந்ததுக்கு….” என சொல்லிக்கொண்டிருந்தவள், அவன் சொல்வதில் இருந்த அர்த்தம் உணர்ந்து மேற்கொண்டு பேசாது வார்த்தையை நிறுத்த, அவன் கண்களிலோ புன்னகை ஒளிர்ந்தது…

அவள் கன்னங்கள் தானாய் செம்மையேற, அவனும் அதனை இமைகொட்டாமல் ரசித்திட்டான் அருகிலிருந்து….

அவளோ பையை நினைத்து கூற, அவனோ, இவ்வளவு தொலைவு அவர்களை வரவழைத்த விதியை நினைத்து நன்றி கூற, இருவருக்குள்ளும் இருந்திட்ட காதல் அங்கே அழகாய் ஸ்வரம் மீட்ட ஆரம்பித்தது இனிதே…

“முகம் பார்த்திட காத்திருக்கும் மலராய்… தன்னவனின் வருகையை எதிர்நோக்கி…”

Episode # 22

Episode # 24

{kunena_discuss:1162}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.