(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04 - அனிதா சங்கர்

Kathal kathalitha kathaliyai kathalikkum

வர்கள் இருவரின் நிலையை பார்த்த கதிரேசன்,"அன்னம் என்ன ஆச்சு எதுக்கு உன் பொண்ணு இப்படி உட்கார்ந்திருக்கா..."என்றுக் கேட்டார்.அதற்கு அன்னதிடமிருந்து எந்த பதிலும் வராமல் போக வேறு வழியில்லாமல் தனது மகளிடம் திரும்பி,"அம்முக்குட்டி எதுக்கு அழுவுறாங்க..."என்று கேட்க தேன்நிலா அதற்கென்று காத்திருந்தது போல்...அழுக ஆரம்பித்தாள்...

"அப்பா ... அப்பா... என்னை... அம்மா...அடிச்சிடாங்க..."என்று தேன் நிலா கூறிய அடித்த நொடி... தேவி நிலாவை பார்த்து,"அடியேய் பொய்யா சொல்லுற... நீ செஞ்சத்தையும் சொல்லு அப்பதான் அப்பாவுக்கு முழுவதும் தெரியும்....அதுக்கப்பறம் அவரே உன்னை அடிக்கலைனாப் பாரு..."என்று பொறிந்தார்.

"தேவி அம்மா எதுவோ சொல்லுறாங்க...தேனு பாப்பா என்ன செஞ்சுச்சு... அப்பா கிட்ட சொல்லு..." என்று கதிரேசன் கேட்க திரு திருவென்று முழித்தாள் தேன்நிலா. அதை தூணின் மறைவில் இருந்துப் பார்த்துக் கொண்டிருந்த கௌதம் விழுந்து விழுந்து சிரித்தான்...

அதைப்பார்த்த தேன்நிலாவிற்கு  தனது அண்ணன் மேல் கோபம் கோபமாக வந்தது... அவனை அப்புறம் எதிலாவது மாட்டிவிட வேண்டும் என்று நினைத்தவள் தனது தந்தை முகத்தையே பாவமாக பார்த்துக் கொண்டிருந்தாள்...

அதைப் பார்த்த தேவி நேராக தேன் நிலாவிடம் வந்து அவள் தனது பாவடையால் முடி வைத்திருந்த அவளது வலது கையை வெளியில் எடுத்து தனது கணவரிடம் காண்பித்தார்...

அதைப்பார்த்த கதிரேசன் துடி துடித்துப் போனார்...

அவளது வலது கையில் கட்டு போட்டிருந்தது...

பதறிப்போய் அவளது கையை தனது கைகளில் வைத்து வருடிவிட்டவர்...

"என்னடா... பாப்பாக்கு என்ன ஆச்சுடா... "என்றுக் கேட்க அப்பொழுதும் என்ன சொல்வது என்று தெரியவில்லை தேன்நிலா வுக்கு...

அப்படி அவ என்ன செஞ்சானு பாக்கலாம்...

நமது பள்ளி வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகள்,நமது அன்றைய நம்பிக்கைகள்  இன்று நினைக்கும் பொழுது விளையாட்டு தனமாகவும்,பைத்திய காரத்தனமாகவும் இன்று தோன்றும்.

அந்த நிகழ்வுகளை நினைக்கும் பொழுது  இன்று நமது உதடுகளில் ஒரு புன்முறுவல் தானகவே வந்து ஒட்டிக்கொள்ளும்.

இன்றும் அந்த நினைவுகள் நமது நினைவுகளில் இனிமையாய்,நினைவு பெட்டகங்களின் பொக்கிஷமாய் அழியாத அமரத்துவம் பெற்று வாழ்ந்துக் கொண்டிருக்கும்

சிறுவயதில் நாம் புத்தகத்தில் மயில் வளர்த்த கதையை நாம் மறந்திற்குக்க மாட்டோம்...

அந்த வேலையை தான் நம்ப தேன் நிலாவும் பண்ணா... ஆனா கையில காயம் வர அளவு அப்படி என்ன பண்ணா...

வாங்க தேவிம்மா என்ன சொல்லுறாங்கனு பார்ப்போம்...

தேன் நிலா வகுப்பு குழந்தைகள் அனைவரும் மயில் வளர்கிறோம் என்று... மயில் இறகில் இருந்து ஒவ்வொன்றாய் பிரித்து ஆளுக்கு ஒன்று ஒன்று என்று அவர்களது புத்தகத்தில் வைத்துக் கொண்டனர்...

மயில் நன்கு வளர பென்சிலை சார்பானரில் சீவி அந்த பென்சில் தோலை மயிலிறகு (அது கூட இல்லை அதுல ஒரு இழை...) இருக்கும் பக்கத்தில் வைத்துவிட்டார்கள் உணவாக...

வகுப்பே செய்யும் பொழுது தேன் நிலா மட்டும் என்ன விதி விலக்க... அவளது கேங்கும் மயில் வளர்க்க தயாரானது...

மயில் குட்டிப் போடும்,அப்படி யார் மயில் குட்டி போடுதோ அவங்க நினைச்சது எல்லாம் நடக்கும் என்று அப்பொழுது குழந்தைகளிடமிருந்த நம்பிக்கை மயில் குட்டிப் போட வேண்டும் என்று ஒரே நாளில் அவர்களது பென்சில் முழுவதையும் ஷார்ப் செய்து காலி செய்தனர்...

புத்தகத்தை பையில் வைக்கும் பொழுதும்,வெளியில் எடுக்கும் பொழுதும் அந்த தோல்கள் கீழ விழுந்துவிடும்...

அதைப் புரிந்துக் கொள்ளாத குழந்தைகள் மயில் தான் அனைத்தையும் சாப்பிட்டது என்று நினைத்துக் கொள்வார்கள்...

மயில் நன்கு வளர இன்னும் ஒரு உணவும் உண்டு அது பனஞ்சோறு...

பனமட்டைகளில் தண்டுகளில் பல் போன்ற அமைப்புகள் இருக்கும் அதனை கைகளால்  தீத்தும் பொழுது நார் நிறத்தில் ஒரு பொருள் கிடைக்கும்...

அதனை மயிலுக்கு வைத்தால் அது சீக்கிரம் குட்டி போட்டுவிடும் என்று குழந்தைகளிடம் ஒரு நம்பிக்கை உண்டு...

அந்த பல்ப் போன்ற அமைப்பை தீத்தும் பொழுது அது கூர்மையாக இருப்பதால் அது கையை சில நேரம் கிழித்து விடும்...

இப்ப தெரிஞ்சிருக்குமே... தேன்நிலா என்ன பண்ணி இருப்பானு...

அதை எடுக்குறனு போய் கையை நல்லா கிழுச்சிட்டு  வந்துட்டா...

அப்ப அன்னம் என்ன சும்மாவா இருப்பாங்க அவ கையில ரத்தத்தைப் பார்த்ததும் கட்டுபோட்டு விட்டவங்க... அவகிட்ட என்ன பண்ண ரத்தம் வருதுனு கேட்க தேனு சொல்லிட்டாலும்...

அவா சொல்லமாட்டானு தெரிஞ்சிகிட்டவங்க... கயலுக் கிட்ட கேட்க அந்த பயபுள்ள அவங்க அப்பா,அம்மாக்கு பயந்துகிட்டு உண்மையை எல்லாம் சொல்லிடுச்சு...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.