(Reading time: 16 - 32 minutes)

தொடர்கதை - இரு துருவங்கள் - 04 - மித்ரா

Iru thuruvangal

குளித்துமுடித்து வந்தவன் தன் முன்னால் இருந்தவளைப் பார்த்து கிளீன்போல்ட் ஆனான் எப்போதும்போல. இளஞ்சிவப்பு நிற லைட் சில்க் சாரி அணிந்து அதற்கேற்ற நகைகளுடன் முதுகுவரை இருந்த முடியை கேட்ச் கிளிப்பில் அடக்கி கொண்டு இருந்தாள்.

அவள் அருகில் வந்தவன், “ நீ எப்பவும் ஏன் என்ன இப்படி மயக்குறடி, ப்ரஸ்ட் டைம் உன்ன பார்க்கும்போதும், இப்போதைக்கும் ஒரு வித்தியாசமமும் இல்லடி. ஐயம் ரியலி மிஸ்டு யு சோ மச் அதி !!” என்றவன் அவள் கழுத்தில் முகத்தை தேய்த்து வாசம் பிடித்தான்.

அதில் மயங்கியவள் அவன் இன்னும் துவாலையை தன் இடுப்பில் சுற்றிக் கொண்டு, தலையை கூட துவட்டாமல் இருப்பவனைப் பார்த்து, அவனை பெட்டில் அமர வைத்து துவட்ட துவங்கினாள்.

அதைப் பார்த்து அவன், அவள் கையைப் பிடித்து, “நீ இன்னும் மாறலடா, இவ்வளவு லவ் பண்றவ ஏன்டா என்னை நம்பல?” என்றுக் கேட்டான்.

அதைக் கேட்டவள் கண்கலங்கி “ எனக்கு மட்டும் ஆசைய உன்ன விட்டு பிரிஞ்சு இருக்கணும்னு, நான் பார்த்தது அப்படி உன்னை சந்தேகபடவச்சது. ஆனா நீ எந்தவிதமான explanation-ம் தரலை. என்னை மட்டும் குறை சொல்லாத? ”என்றாள். 

அவனும் அதை உணர்ந்து கைத் தூக்கி அமைதிப்படுத்தினான். “சரி விடுடி, இது அப்பறம் பேசிக்கலாம், முதல்ல என்ன கவனி “ என்று அவளை தன் மடியில் அமர்த்தி இழைந்துக் கொண்டுயிருந்தான்.

“போதும் ஹரிஷ், ஆண்டி வந்துடுவாங்க ! அதுக்குள்ள கீழே போய் எதாவது பிரேக்பாஸ்ட் பண்ணலாம் ப்ளீஸ்”

“அம்மா அப்பா எப்பவோ வீட்டுக்கு வந்துட்டாங்க, அவங்க அதுஎல்லாம் பார்த்துப்பாங்க, நீ என்னோட இரு போதும்”

“அடப்பாவி !! ஏன்டா நீ இத சொல்லல, நான் போய் ஏதாவது ஹேல்ப் ஆவது பண்ணியிருப்பேன். இப்பவாது விடு ரிஷு” என்றவளை பார்த்து முடியாது என்று தலையசைத்தான். 

உன்னை எப்படி விட வைக்கணும்னு எனக்கு தெரியும்டா என்று மனதில் நினைத்தவள். அதை செயலில் காட்ட அவன் அருகில் சென்றாள்.

அவள் நோக்கம் புரிந்தவன் “என்ன இப்போ என்ன கிச்சுகிச்சு முட்ட போறயா? ஏய் ! மூன்று வருஷம் ஆச்சுமா?” இதுல இப்போ எனக்கு சகஜம் என்பதுப் போல பேசுபவனை பார்த்துக் குழம்பினாள்.

அவள் யோசித்துக்கொண்டு இருப்பதை பார்த்து மெதுவாக அங்கிருந்து நகர்ந்து டிரெஸ்ஸிங் ரூம் சென்று கதவைச் சாற்றியவன். “சாரி டியர்!!” என்றான்.

அவனிடம் எப்பொழுதும்போல ஏமாந்ததை நினைத்து கோபமாக “ஸ்டுபிட், நீ என்கிட்டே வராமலயா போயிடப்போற அப்போ பார்த்துக்கிறேன்” என்று கோபமாக அவன் இருந்த இடத்தைப் பார்த்து கத்திவிட்டு அறையை விட்டு வெளியே சென்றாள்.

அவள் கீழே ஹாலில் இருந்த மாமனாரைப் பார்த்தாள். அவள் வந்த சப்தத்தில் அவளை இயல்பாக்கும் பொருட்டு “குட் மார்னிங் அனந்திதா” என்றார்.

அவளும் “குட் மார்னிங் அங்கிள்” என்றாள். அப்பொழுது அங்கு வந்த சுமதி “அங்கிள் இல்ல அனந்திதா, மாமான்னு சொல்லணும்” என்றார்.

“சரி அத்தை” என்றவளை, “வாமா, காபி கலந்து தரேன்” என்று கூட்டிக் கொண்டு சமையலறை சென்றார்.

அவர் அவளிடம் காபி கோப்பையை தரவும் “தேங்க்ஸ்” என்று வாங்கிக் கொண்டவளை கூர்ந்து பார்த்தார். அனைத்து மாமியார்களும் கேட்க தோன்றும் கேள்வியைக் கேட்க வேண்டும் என்று இருந்தார்.

ஆனால் எவ்வாறு கேட்பது என்று குழம்பிக் கொண்டு இருந்தவர் அவளை ஆராய்ந்தார், ஏனெனில் புது பெண்ணிற்கான தயக்கம் மட்டுமே தெரிந்தது. அவர் எதிர்பார்த்த ஒன்றை அவளிடம் காணவில்லை.

இருந்தும் அனந்திதாவிடம் கேட்டார். “அனந்திதா!! ஹரிஷ் உன்கிட்ட முரட்டுத்தனமா ஒன்னும் நடந்துக்கலயே?”

அவர் கேட்கவந்ததை உடனடியாக புரிந்துக்கொண்டவள், உடனடியாக முகம் சிவந்தாள். கீழே தரையைப் பார்த்தபடி, “அவங்க அப்படி ஒன்னும் நடந்துக்கல அத்தை!!, அவர் நல்லாதான் என்கிட்டே பிஹேவ் பண்ணினார்” என்று மறைமுகமாக பதில் கூறினாள்.

அந்த பதிலில் எதையோ உணர்ந்தவர், “நீ இந்தக் காபியை அவன்கிட்ட கொடுத்துட்டு வாமா, இங்க இருக்க வொர்க்க நான் பார்த்துக்கிறேன்” என்று அவளை அனுப்பினார்.

அவளும் இதற்குமேல் சமாளிக்க முடியாமல் அவர் கொடுத்த கோப்பையை எடுத்துக்கொண்டு படியேறினாள்.

வேகமாக அறையை அடைந்தவள் அங்கு தயாராய் இருந்தவன் மேல் மோதி நின்றாள். அவனும் அவளும் ஒரே நேரத்தில் “நல்லா வேளை மேல ஊத்தல” என்றனர்.

அவ்வாறு கூறியவுடன் இருவரும் சிரித்தனர். அவன் “என்ன ஆச்சு இப்படி வேகமா வந்து மோதற?” என்றான்.

அவன் கேட்டதும் கீழே நடந்த பேச்சுவார்த்தையை கூறினால், இருந்தும் அவள் பதட்டமாக இருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.