(Reading time: 16 - 32 minutes)

“அண்ணா !! நாங்க ரெண்டுபேரும் MAXIMUM ஃபாரின்ல தான் இருந்தோம். அதனால எங்கயும் இன்னும் பிளான் பண்ணல. வேணும்னா இந்தியாக்குள்ளயே எங்கயாவது trip பிளான் பண்ணனும்”

“சரி!! வீட்லய இருக்க போறீங்க இன்னைக்கு?”

“இல்லனா, நான் லண்டன்ல இருந்தப்போ ஒரு கெஸ்ட் ஹவுஸ் வாங்கினேன்தான, அங்கதான் போறதா பிளான் பண்ணியிருக்கேன். அங்கு ஒரு டூ DAYS இருந்துட்டு வரலாம்னு. அப்பறம் வந்து trip போய்ட்டு வர மாதிரி” என்றான்.

பின் பெரியவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தவன் கெஸ்ட் ஹவுஸ் பிளான் பற்றி சொன்னான். அவர்களும் இவர்களுக்கு தனிமைக் கொடுக்க எண்ணி ஒத்துக் கொண்டனர்.

தங்கள் அறைக்கு வந்தவன் தங்கள் இருவருக்குமான உடைகளை அவனே அடுக்கத் தொடங்கினான். பிறகு கீழே வந்தவன் அனந்திதாவின் குடும்பமும், தன்னுடைய பெரியப்பா குடும்பமும் கிளம்ப தயாராக இருந்ததைப் பார்த்தவன்.

“என்ன இப்பவே கிளம்பிட்டிங்க? மதியம் சாப்பிட்டு போலாம்தானே.” என்றான்.

“அது எல்லாம் இன்னொரு நாள் பார்த்துக்கலாம் மாப்பிள்ளை. கல்யாண வேளை இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு. நீங்க போய்ட்டு வாங்க. அப்பறம் மறுவீடு கண்டிப்பா வரணும். அதுக்குமேல நீங்க உங்க ட்ரிப் ஏதும் வெச்சிகோங்க” என்றார் ராம்ப்ரகாஷ்.

“சரிங்க மாமா, நாங்க வரோம்” என்றுக் கூறி அவர்களுக்கு விடைக்கொடுத்தான். தினேஷும் அவன் மனைவியும் விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துவிட்டு சென்றனர்.

பிறகு தங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு இன்னும் 1 ஹௌர்ல கிளம்பறோம் என்றுக் கூறிவிட்டு தன்னறைக்கு வந்தான்.

சுமதியும் அனந்திதாவிடம், “நீ போய் வேண்டிய ட்ரெஸ் பாக்கிங் செய்மா, நானும் மதுவும் இந்த வேலை எல்லாம் பார்த்துக்கிறோம்” என்று அவளை அனுப்பினார்.

அவள் மேலே தன்னுடைய அறைக்கு வந்தாள். அங்கே எல்லாம் எடுத்துவைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தாள். அப்பொழுது அங்குவந்த தன் கணவனிடம் “நான் வந்து அடுக்கமாட்டனா, ஏன் ஹரிஷ் செஞ்ச?”

“உனக்கு எப்பவும் பாக்கிங் பண்றது புடிக்காதுதான அப்படியே பண்ணாலும் எதையாவது விட்டுருவ அதி. அதுதான் நானே பண்ணிட்டன். அப்படியே ஒருதடவ செக் பண்ணிடு உனது எதாவது மிஸ் பண்ணிட்டனணு”

அவளும் எல்லாம் பார்த்துவிட்டு சரியாக உள்ளது என்றுக் கூறினால், பின் அவனருகே வந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டு, “தேங்க்ஸ்டா, நீ எதுவும் மறக்கல!!” என்றாள்.

பின் அவளேத் தொடர்ந்து “எப்போ நீ வந்து பாக் பண்ண, இப்போதான மேல வந்த?”

“நான் சாப்பிட்டு முடிச்சு உடனேவந்து ஸ்டார்ட் பண்ணிட்டேன்டா, இப்போ final-ஆ செக் பண்ண வந்தேன்.”

“அப்போ இப்பவே கெளம்பி இருக்கலாம் தான, ஏன் ஓன் ஹௌர் கழிச்சு போறோமன்னு சொன்ன?”

அவனை அணைத்துக்கொண்டு, “கொஞ்சநேரம் உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ணதான். அங்கபோன நாம பேச வேண்டியது நிறைய இருக்கும். அதுதான் கிடைச்ச கேப்ல உன்னோட ரோமன்ஸ் பண்ணிக்கலாமன்னு தான்”.

“அடப்பாவி!!”

“ஏய் !! சும்மாடி, நான் முன்னாடியே போலாமன்னு சொன்ன, எல்லாம் எடுத்துவைச்சிட்டியே, இல்ல நான் ஹெல்ப் பண்ணட்டுமான்னு அம்மா வந்துடுவாங்க அதுதான். நானே கொஞ்ச நேரம் கழிச்சு போறோம்னு சொன்னான்”.

“அப்போ ஒகே” என்று அவனைக் கட்டிக் கொண்டாள். பிறகு அவனும் அங்கு இருந்த சோபாவில் அமர்ந்துக்கொண்டு அவளிடம் பேசிக் கொண்டு இருந்தான்.

பின் திடிரென்று இருவரும் ஒரே நேரத்தில், “திரும்ப எப்போ கிளம்பனும் லண்டன்க்கு” என்றனர். எப்பொழுதும்போல இருவரும் சிரித்தனர் தங்கள் ஒற்றுமையை நினைத்து.

அனந்திதா, “இன்னும் 2 வாரத்துல” என்றாள்.

“ஹேய் !! நிஜமாவ சொல்ற!! நானும் அப்போதான் பிளான் பண்ணியிருக்கேன்.”

அப்பொழுது அனந்திதா, “ஏன் ஹரிஷ், கல்யாணத்துக்குதான வந்த ஓன் மன்த் போட்டு இருக்கலாம் தான?”

“அனந்திதா நான் ஒன்னும் இஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கல, என்னோட parents –காக தான் பண்ணிக்க வந்தேன். சரி! அப்படியே பண்ணிகிட்டாலும், எனக்கு கொஞ்சம் டைம் தேவ படும் அதுக்குதான் marriage முடிஞ்சு சீக்கரம் கிளம்ப பிளான் பண்ணியிருந்தேன்”.

“ஹ்ம்ம் !! நானும் இந்த மாதிரிதான், என்ன ரெண்டு வாரத்துக்குமேல இருந்த கண்டிப்பா எதாவது பண்ணி கல்யாணம் பேச்சு எடுத்துடுவாங்கன்னு தான் சிக்கிரம் போக decide பண்ணினேன்”.

இருவரது பதிலும் மற்றவரை அசைத்தது, “என்ன மாதிரி அன்பு இது !! அவர்கள் இருவரும் மற்றவரைத் தவிர வேறு ஒருவரை தங்களுடைய வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்ள மனதளவிலும் தயாராக இல்லை!! என்பதை மட்டும் நன்கு அறிந்திருந்தனர்”.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.