(Reading time: 16 - 32 minutes)

அதைபார்த்து “அதுதான் நீ சமாளிச்சிட்டியே அதி!! இன்னும் என்ன பதட்டம்?” என்றான்.

“இன்னும் எவ்வளவோ நாளைக்கு சமாளிக்க முடியும் ரிஷு? நினச்சவே பயமா இருக்கு, அவங்க எதிர்பார்க்கறது நார்மலா புதுசா கல்யாணம் பண்ணவங்க எப்படி நடந்துக்குவாங்க அப்படின்னு ஆனா நாம, வி ஆர் இன் வெரி comfortable zone. அதுதான் ப்ரோப்லம். அதுதான் அவங்களுக்கு நிறைய கேள்விகேட்க வைக்கும்.”

“நாம முயற்சி பண்ணதான்டா முடியும், இதுக்குமேல அவங்க நடக்கனும்னு எதிர்பார்க்கறது, அது கொஞ்சம் கஷ்டம். முடிஞ்சஅளவுக்கு பார்க்கலாம் அதுக்கு அப்பறம் எது நடக்குதோ அப்போ சமாளிச்சுக்கலாம்”

“என்ன மேடம் !! காபி தருவிங்களா இல்ல மாட்டிங்களா?”

“சாரி ரிஷு!! மறந்துட்டேன்” என்றவள் அவனிடம் தந்துவிட்டு அவனருகில் அமர்ந்து இருந்தாள் அவனுடன் கீழே செல்லும் எண்ணத்தில்.

அவர்கள் இருவரும் வெளியவர இருந்தபோது பிரவீன் அவன் அறை கதவைத் தட்டினான். இருவரும் வெளியே வந்தவுடன் “சாரி அண்ணா !! disturb பண்ணிட்டேனா?”

அனந்திதா உடனடியாக “அப்படி ஏதும் இல்லை பிரவீன், நாங்களே வந்துட்டுத்தான் இருந்தோம்” என்றாள்.

அவன் ஆச்சரியமாக, “அண்ணி!! நீங்க இப்படி நல்லா பேசுவிங்கனு எதிர்பார்க்கல”.

அதற்கு ஹரிஷ் “ஏன்டா!! அவ நல்லா பேசுவ, நீயா ஏதும் நினைக்காத !! எதுக்கு வந்த கூப்பிட”

“அண்ணா !! அண்ணி வீட்ல இருந்தும், நம்ம பெரியப்பா வீட்ல இருந்தும் வந்துட்டாங்க, அதுதான் உங்கள கூப்பிட வந்தேன்”

“சரி !! வாங்க போகலாம்” என்றான் ஹரிஷ்.

படியிலிருந்து கீழே வந்துக் கொண்டுயிருந்தபடியே, “வாங்க !! வாங்க!!” என்று வரவேற்று கொண்டு அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தான்.

அனந்திதாவும் எல்லாரையும் மருமகளாக வரவேற்றாள். பிறகு பெண்கள் அனைவரும் சமயலறையில் பேசிக் கொண்டு இருக்கவும் அவர்களிடம் வந்தாள்.

 தன் அம்மாவிடம் வந்து, “ “நித்யா எப்படி இருக்காமா? எங்க அவ? வந்தால இல்லையா?” என்றுக் கேட்டாள்.

“அவ வந்து இருக்க அனந்திதா, மதுமிதா கூட அவ ரூம்க்கு போயிருக்கா. முதல நீ சொல்லு மாப்பிள்ளை உன்கிட்ட நல்லா தான நடந்துக்கறாரு? எந்த பிரச்சன்னையும் இல்லைதனா?”

“அம்மா !! டென்ஷன் ஆகாத அவர் என்கிட்டே நல்லாதான் நடந்துகறாரு ஒரு பிரச்சனையும் இல்லை. எல்லாம் சரியா போய்டும். நான் பார்த்துக்கிறேன்”

அனந்திதா தெளிவாக பதில் சொல்லவும் நிம்மதியாக தான் உணர்ந்தார் இருப்பினும் எதாவது ப்ரோப்லம் இருக்குமோ என்று பயந்தார் அவளிடம் வெளிக்காட்டாமல்.

“சரி அனந்திதா ! நீங்க ரெண்டுபேரும் நல்லா இருந்த போதும். நீ நித்யாவ போய் பாரு!”

அவள் மதுமிதா அறை எது என்று குழம்பிக் கொண்டு இருக்கும்போது அவளிடம் வந்தான் ஹரிஷ்.

“என்ன தேடற?”

“மதுமிதா ரூம் எங்க இருக்கு ஹரிஷ்? நித்யாகிட்ட பேசணும்.”

“நானும் அவகிட்ட பேசனும்னு தான் வந்தேன். வா ! போகலாம்” என்று அழைத்துக் கொண்டு சென்றான்.

அங்கே ப்ரீத்தி, நித்யா மற்றும் மதுமிதா இருந்தார்கள். அங்கு வந்த இருவரையும் பார்த்தவர்கள். நித்யாவிடம் பேச விழைகிறார்கள் என்று புரிந்துக் கொண்டார்கள்.

அதனால் ப்ரீத்தி “ வா அனந்திதா !! காபி சாபிட்டாச்சா?”

“ஆச்சு அண்ணி!!” என்றான்.

“சரி !! நீங்க பேசிட்டு இருங்க. நான் கிட்சேன்ல போய் ஹெல்ப் பண்றேன். அப்பரும் நிறைய பேசலாம்.” என்றுக் கூறி சென்றாள். ப்ரீத்தி சென்றதும் அனந்திதாவையும் ஹரிஷையும் முறைத்துக்கொண்டு இருந்தாள் மதுமிதா.

“என்ன குட்டிமா? ரொம்ப பாசமா பார்க்கற?” என்று கேட்டு அவள் பிபியை எகிற வைத்தான்.

“ஏன் நீ பண்ண வேலைக்கு உனக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கணுமா அண்ணா?” 

அப்பறம் நான் நேராவே சொல்றான் நீ இந்த மாதிரி கல்யாணம் பண்ணிகிட்டது பிடிக்கல. உன்னோட மனைவிய என்னோட அண்ணி அச்செப்ட் பண்ணிக்க டைம் வேணும். என்ன force பண்ணாத. நித்யாகிட்ட பேசுங்க நான் வெளிய போறேன்.

இவ்வாறு பேசிவிட்டு போறவளை, கண்டிக்க முயன்றவனைத் தடுத்து நிறுத்தினால் அனந்திதா அவன் கைப்பற்றி. அதை மற்ற இருவரும் கவனித்தனர்.

“மதுமிதாவிற்கு கொஞ்சம் டைம் கொடுங்க” என்றுக் கூறினாள்.

அவள் கூறியதும் அவளைப் புரியாத ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறினாள்.

ஹரிஷ் அவள் சென்றவுடன் நித்யாவின் அருகில் சென்றான். அவன் வருவதைப்பார்த்து எழ முயற்சி செய்தவளைத் தடுத்து, “உட்காரு நித்யா கொஞ்சம் பேசணும்” என்றான்.

அனந்திதாவை ஒருமுறைப் பார்த்துவிட்டு அவன் பேசலானான். அவன் பேச பேச முதலில் அதிர்ச்சி, ஆச்சரியம் மற்றும் சந்தோசமாக அவள் முகபாவனைகளை மாற்றினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.