(Reading time: 9 - 17 minutes)

அதை மட்டுமா சொல்லிச்சு கொய்யாப்பழம் பறிக்க மரத்துல ஏறுனதையும் சேர்த்து  மாட்டிவிட்டுச்சு... கை லேசா கிழிச்சி இருந்ததுக்கே பயப்பிட…அவ மரம் ஏறுனதை சொன்னதும் என்ன ரியாக்சனா இருக்கும்... மரத்திலிருந்து தவறி கீழே தேன்நிலா விழுந்துவிட்டாள் அந்த நினைப்பே அன்னத்திற்கு பயத்தை தர...அந்த பயம் தேன்நிலாவை அடிக்க வைத்தது...

இதை தேவி சொல்லிமுடித்ததும் கதிரேசேனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை...

இது அனைவரும் செய்யும் சிறுவயது குறும்புகள் தான்,சில பொழுது அவை நமக்கு ஆபத்து ஆகும் நிலையம் இருக்கிறது...

தனது மகளுக்கு எப்படியாவது புரியவைக்க வேண்டும் என்று நினைத்த அந்த அன்பு தந்தை,”குட்டிம்மா இப்ப என்ன மயில் குட்டிப் போடணும்... அதுக்கு சாப்பாடு கொடுக்கணும்... அவ்வளவு தான...”என்று அவர் தேன் நிலாவைக் கேட்க தேவி,அன்னம் இருவரும் அவரை முறைக்க பார்த்தனர்.

“இப்ப உன்னோட மயில என்கிட்ட கொடுப்பியாம்... அப்பா வளர்த்து உனக்கு முழுசான மயிலிறகா தருவேணாம்...”என்று அவர் சொல்ல

தேன் நிலாவின் உதடுகளில் ஒரு புன்னகை... அப்பா நிறைய வளர்ததுருப்பாரு அதனால அப்பா சீக்கிரம் வளர்த்துடுவாரு என்று நினைத்தவள் தந்தை அவ்வாறு கூறியதும் அவரது மடியில் ஏறி அமர்ந்துக் கொண்டாள்...

“அப்பா நிஜமாவா...நீ எனக்கு வளர்த்து தருவியா...”என்று அவள் கேட்க

“ம்... அப்பா வளர்த்து தருவேனா... ஆனா பாப்பா  ஆறாவது படிகுறப்ப தான் முழுசா மயில் வளர்ந்து முடிக்கும்... அப்ப தான் நான் பாப்பாகிட்ட தருவேன்...”என்று கூறினார்.

அதற்குள் அவளுக்கு அது ஒரு விளையாட்டுதனம் என்று தெரிந்துவிடும் என்று நம்பினார்...

“அவ்வளவு நாள் ஆகுமாப்பா... அதுக்குதான் நான் பனஞ்சோறு தரப்போனேன்...”என்று தேன் நிலாக் கூற

“செல்லக்குட்டி பாப்பா அப்பா மாதிரி வளர எவ்வளவு நாள் ஆகும்... அதுபோல தான் இதுவும்...”என்று அவர் கூற

ஒரு வழியாக தேன்நிலா  அதற்கு ஒத்துக்கொள்ள அதற்கு பின் அன்னத்தையும், தேன்நிலாவையும் சமாதானம் படுத்தி வைத்தார் கதிரேசன்...

அன்னம் இனி மரம் ஏறக்கூடாது என்று ஒரு நிபந்தனையுடன் தனது மகளுடன் சமாதானமானார்...

காலமும்,நாட்களும் யாருக்கும் நில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது...தேன்நிலா ஐந்தாவது படித்து முடிப்பதற்குள் பொன்வண்டு வளர்க்குறது,ஈச்சங்காய் பறிக்குறது(அவ மரத்துல ஏறுல..) அப்படினு எல்லா வேலையும் செஞ்சு முடிச்சிட்டா... ஆதலாம் பண்ணலனா அது  லைப்பே இல்லை...

எப்படியோ நாட்கள் றெக்கைக் கட்டிப் பறக்க ஆரம்பித்தன...தேன் நிலா ஒன்பதாவதில் அடி எடுத்து வைத்திருந்தாள்... மதிவேந்தன் இப்பொழுது கல்லூரி  இரண்டாம் ஆண்டுப் படித்துக் கொண்டிருந்தான்... கௌதமும் தான்....

மதிவேந்தனிடம் நிறைய மாற்றாங்கள் ஏற்ப்பட்டிருந்தது... தேன்நிலாவை பார்த்தாலே முகத்தைத் திருப்பிக் கொண்டு போய் விடுவான்... அவளிடம் பேசவே மாட்டான்..

ஆனால் வேல்விழியிடம் நன்கு பேசுவான்... அதை பார்க்கும் பொழுதே தேன்நிலாக்கு ஏனோ கோபம் வரும் அவளுக்கு தெரிந்தது அவளை போல வேல்விழியும் அவனது அத்தை மகள் என்று...

அதுவுமில்லாமல் அவள் வளர்ந்தப்பிறகு மற்றவர்கள் பேசுவதை வைத்து அவள் புரிந்துக் கொண்டாள் அவள் தேவிம்மாக்கு பிறந்தவள் என்று... இருந்தாலும் அவள் அன்னத்தையே அம்மா என்று அழைத்தாள்...

ஒரு விழாவிற்கு அவளை ஒருமுறை அன்னம்  அழைத்துச் சென்றிருந்தார்... அப்பொழுது  அவர்களது காதில் விழும்படி பேசினர்... அதில் அன்னம் அழுதுவிடவே அதைப் பார்த்துக் கொண்டிருந்த தேன் நிலாவிற்கு புரிந்தும் புரியாமல் இருந்தாலும் தனது அன்னையிடம் அவள் அதைப்பற்றி கேட்கவில்லை...

அதன் பிறகு அவள் பலமுறை அடுத்தவர்கள் பேசுவதைக் கேட்டும் எதையும் தனது பெற்றவர்களிடம் அவள் கேட்கவில்லை..

மதிவேந்தன் அதனால் தான் தன்னிடமிருந்து ஒதுங்கிப்போகிறான் என்று அவளுக்கு புரிந்திருந்தது...

எல்லாரைப்போலவும்  தான் அவளுக்கும் அவனது அத்தை மகன் மீது ஒரு வித ஈர்ப்பு இருந்தது...அவன் சரியாக பேசி இருந்தால் ஒருவேளை அவளுக்கு அவன் மீது வந்த ஈர்ப்பு போய் இருக்குமோ என்னவோ...

தனது தாய்,தந்தை,பாட்டி என்று அனைவரும் பேசுவதிலிருந்து தனது அத்தை வாழ்க்கை இப்படி ஆனதற்கு  தனது மாமாவும் அவரது மனைவியும் தான் காரணம் என்ற  நினைப்பு  அவனது மனதிற்குள்ளும் விழுந்தது...

தனது அத்தையை ஒதுக்கி விட்டு வேறு ஒருவரை கல்யாணம் பண்ணிக் கொண்ட கதிரேசன் மீது அவனுக்கு அளவிட முடியாத கோபம் இருந்தது...

அதனால் அவன் தேன் நிலாவிடம் பேசுவதையே நிறுத்திவிட்டான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.