(Reading time: 4 - 8 minutes)

21. பொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்

PEPPV

ஜாக்குலினிடம் அவ்வபோது வந்து பார்க்கிறேன் என்றபடி சந்தா கிளம்ப, ப்ரசன் அவளை அவளது வீட்டில் விட முன்வந்தான்… மறுத்தவளிடம் கலைவாணி பேச சம்மதிக்க வைத்திட, சரி என்றாள் அவளும் வேறு வழியில்லாமல்…

சில மணித்துளிகள் மௌனமே காரினில் நீடிக்க, பின் நினைவு வந்தவனாக, “நீங்க எங்கிட்ட ஜாக்குலின் பத்தி எதோ சொல்ல வந்தீங்க… அப்ப பார்த்து அவங்க என்னென்னமோ பேசி…. சாரி… நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க…” என கூறிட,

“நான் சொல்ல வேண்டியதை தான் நீங்களே சொல்லிட்டீங்களே அந்த இடத்துல….” என்றாள் அவளும் மெதுவாக…

புரியாத பாவனையில் அவன் அவளைப் பார்த்திட, “ஜாக்குலினுக்கு எந்த சம்பிரதாயமும் செய்ய வேண்டாம்னு சொல்ல வந்தேன்… ஆனா அதுக்குள்ள நீங்களே அங்க இருக்குறவங்க கிட்ட அதைப் பத்தி சொல்லிட்டீங்க இல்லையா?... அத தான் சொன்னேன்…” என்றதும், அவனுக்கு புரிந்தது…

“ஜாக்குலின் கிட்ட நீங்க கிளம்பும்போது சொன்னது உண்மைதான?...”

அவனின் வார்த்தைகளில் கேள்வி தோரணை இருந்ததை விட, ஆதங்கமே இருந்திட்டது மேலோங்கி…

அவனின் ஆதங்கம் புரிந்ததா?... இல்லை வேறு எதுவுமா அறியவில்லை அவள்…

என்ன நினைத்தாளோ?.. சட்டென “கண்டிப்பா வருவேன்…” என்றாள் தன்னையும் மீறி…

அவனிடம் இறுக்கம் குறைந்து மனமானது லேசான வேளையில், அவளது வீடு வந்திட்டது…

“ரொம்ப தேங்க்ஸ் சார்…” என்றவள் இறங்க முற்படுகையில்,

“என்னால தான் இவ்வளவு நேரம் லேட் ஆகிடுச்சு… நானே வீட்டுல சொல்லி விட்டுட்டு போறேன்…” என்றான் அவன்…

“இல்ல பரவாயில்லை…” என அவள் சொல்லிக்கொண்டிருக்கையிலே,

“சந்தா…” என்றபடி வந்தார் அவளின் அன்னை…

“அம்மா… நான் போன்ல சொன்னேன்ல… என்னை காப்பாத்தினது இவர் தான்…”

சந்தா தன் அன்னையிடன் அறிமுகம் செய்து வைத்திட, இருகரம் குவித்து அவரை பார்த்திட்டான் அவன்…

ஏனோ, அவனையும், அவளையும் அங்கே ஒன்றாக பார்க்க நேர, அவரின் மனதில் சட்டென ஒரு தென்றல் தவழ்ந்திட்டது அவரையும் அறியாமல்…

“இந்த மாதிரி நம்ம பொண்ணும் புருஷனோட இப்படி ஜோடியா பக்கத்துல நின்னா?...”

அவரின் மனமானது கண நேரத்தில், எண்ணிட, மறுகணமே இது என்ன கடவுளே சோதனை?... என முரண்பட்டபடி, வந்தவனைப் பார்த்திட்டார் அவர்…

அவனின் முகத்தில் அவனையும் மீறிய சோகம் நிழலாட, அதை கண்டுகொண்டார் அவர்…

“வாங்க தம்பி… சந்தா எல்லாம் சொன்னா... இப்போ அந்த பொண்ணுக்கு ஆதரவா நீங்க எல்லாரும் தான் இருக்கணும்… நீங்களும் இப்படி வருத்தப்பட்டு அந்த பொண்ணு முன்னாடி நின்னா, அவ நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாருங்க?...”

அவரின் அவ்வார்த்தைகள் அவனுக்கும் புரிய, “புரியுதும்மா… கண்டிப்பா ஜாக்குலினை கவலைப்பட விடமாட்டேன்ம்மா…” என்றான் அவனும் உறுதியுடன்…

“உள்ள வாங்க தம்பி…”

அவர் அழைத்திட, சந்தாவோ பதிலே பேசிடவில்லை… அவன் தயங்கி நிற்க, “வாங்க…” என்றாள் மெல்ல…

அவனும் உள்ளே செல்ல, இயல்பான சராசரி மிடில் க்ளாஸ் குடும்பத்தை பிரதிபலித்திட்டது அவளது வீடு…

“இந்தாங்க தம்பி… காஃபி…”

சந்தாவின் தாயார் அவனிடம் நீட்ட, அவனோ எப்படி உண்பது என யோசித்தான்…

“என்ன தம்பி யோசிக்குறீங்க?...”

“தப்பா நினைக்காதீங்கம்மா… எனக்கு எதுவும் வேண்டாம்…”

அவன் சட்டென்று சொல்லிட, அவரின் முகத்திலோ யோசனை ரேகைகள்…

“இல்லம்மா… வீட்டுல யாரும் சாப்பிட்டிருக்கமாட்டாங்க… போய் தான் பேசி முதல்ல அவங்க எல்லாரையும் சாப்பிட வைக்கணும்…”

சொல்லும்போதே அவன் குரல் உடைவது புரிந்திட்டது அவருக்கு…

“பரவாயில்லை தம்பி… உங்க நிலைமை புரியுது… வீட்டுக்கு போயிட்டு எல்லாரையும் சாப்பிட வச்சிட்டு நீங்களும் சாப்பிட மறக்காதீங்க…”

“சரிம்மா…” என்றவன், பின் சந்தாவை பார்த்துவிட்டு, “ஜாக்குலின் சந்தாவை பார்க்கணும் பேசணும்னு நினைக்குறா… உங்களுக்கும், உங்க வீட்டுல உள்ளவங்களுக்கும் ஆட்சேபனை இல்லன்னா, அவங்களை கொஞ்சம் அப்பப்போ வந்து ஜாக்குலினை பார்த்து பேசிட்டு வர சம்மதம் சொல்லுவீங்களாம்மா?...” என்றவன் நிதானமாக தயங்கியபடி சொல்லிவிட்டு நிமிர,

அவனின் அந்த பணிவான வேண்டுகோள் அவரை வெகுவாகவே அசைத்திட்டது…

“அவ வருவா தம்பி… கவலைப்படாதீங்க… சந்தா அப்பாவும் எதுவும் சொல்லமாட்டார்…”

அவர் அவனுக்கு உறுதியளித்திட, சற்றே கிட்டிய மன ஆறுதலுடன் எழுந்து கொண்டான் அவன்…

ஆயிரம் தான் அவள் தான் வருகிறேன் என்று கூறினாலும், அவள் இருக்கும் சூழ்நிலையில், அவள் வீட்டில் உள்ளவர்கள் அவளின் முடிவிற்கு சம்மதிக்க வேண்டுமே என்ற பயம் அவனுள் எழுந்தது உண்மையே… ஆனால் அதுவும் சந்தாவின் அன்னையைப் பார்த்த பிறகு அது அத்தனை கடினம் என்று அவனுக்கு தோன்றவில்லை…

எனினும், தன் குடும்பத்தில் உள்ளவர்களின் சந்தோஷத்திற்காக அவள் வருகிறேன் என சம்மதித்திருக்கிறாள்… அது அவளின் குடும்பத்தில் நெருடலை கொடுக்காது இருந்திட வேண்டுமே என்ற பதட்டம் உண்டான தருணமே, அதுபற்றி அவன் நேரடியாக அவரிடமே வினவிட, இப்போது அவர் சொல்லிவிட்ட பதிலில் அவன் மனம் சற்றே ஆசுவாசமடைந்திட்டது…

எழில் பூக்கும்...!

Episode # 20

Episode # 22

{kunena_discuss:1122}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.