(Reading time: 11 - 21 minutes)

“ஒஹ். “ என்றவள், “சரிம்மா.. இப்போ ஹாப்பியா? வா . இதுக்கு மேட்சா நகை எடுக்கலாம்.”

“இருங்க அத்தை. நம்ம சுமி, சந்து ரெண்டு பேரும் அவங்களுக்கு புடவை எடுக்கட்டும்.”

“அவங்களுக்கு எதுக்கு? உனக்குத்தானே நிச்சயம்”

“அத்தை.. அவங்க ரெண்டு பேரும் தான் என்கூட புல்லா நிக்க போறாங்க. அவங்களும் நல்லா இருக்க வேண்டாமா?

“அதுதான் வீட்டிலே ஏகப்பட்ட புடவை இருக்கே. அதில் ஒன்னு எடுத்து கட்டிக்கட்டும்”

சுமி, சந்து இருவரும் “அம்மா,” பெரியம்மா “ என்று கத்தியவர்கள்

“எங்கள கண்டால் உங்களுக்கு என்ன காண்டு? கல்யாண பொண்ணு அவளே என் தோழிகளும் அழகா இருக்கட்டுமேன்னு சொல்றா .. நீங்க நடுவில் என்ன நாட்டாமை பண்ணிக்கிட்டு. மித்துக்கு செலக்ட் செய்து கொடுத்துடீங்கள்ள. போங்க.. போய் உங்க பேரிளம்பெண் கூட்டத்தோட ஐக்கியமாகுங்க” என்று விரட்டி விட்டனர்.

“அடிங்க.. என்கிட்டயவே உங்க வேலைய காட்டறீங்களா? இரு நான் இப்போ சுமி அப்பாவ வர சொல்றேன்” என்று மிரட்டினாள் மைதிலி.

“ஐயோ.. எங்கள ஆள விட்டுடுங்க.. இப்போ நாங்க தல அட்வைஸ் கேக்குற நிதானத்துலே இல்லை . மைதிலி மா.. ப்ளீஸ்.. என் செல்லம்லே.. நாங்க புடவை எடுத்துக்கரோமே.. “ என்று கெஞ்சினார்கள்.

அவர்களின் கெஞ்சலில் மனமிரங்கி அவர்களிடம் சரி என்றாள் மைதிலி.

அவர்கள் சேலை எடுக்க அடித்த லூட்டியை பார்த்த மைதிலி தலையில் அடித்துக் கொண்டாள். எல்லாம் செட்டாக எடுத்து விட்டு வீட்டிற்கு கிளம்பினார்கள்.

காரில் செல்கையில்

“வானரங்களா.. உங்களை எல்லாம் இத்தனை நாள் எப்படித்தான் என் பிள்ளை சமாளிச்சான்ன்னு தெரியல.. புடவை எடுக்க இந்த அலும்பாடி பண்ணுவீங்க?”

சுருதி “ஐயோ மைதிலி அக்கா.. நான் ஒருதடவை இவங்ககிட்டே மாட்டிகிட்டு பட்ட பாடு போதும் போதும்ன்னு ஆயிடுச்சு. அதுலேர்ந்து இவளுங்க ஷாப்பிங்ன்னு சொன்னாலே எனக்கு ஜுரம் வந்துடும்”

“ஹ.. உங்களுக்கு எல்லாம் திறமை பத்தாது.. இதுக்கு எல்லாம் எங்க தல தான் கெத்து”

“யாரு.. சுமி அப்பாவா?”

“ஐயோ.. அவர எதுக்கு கூபிடுறீங்க? நாங்க ஷ்யாம் அண்ணாவ சொன்னோம். எங்க கேங்க்கு தலைன்னா அது ஷ்யாம் அண்ணாதான்.”

“ஹ.. அதான பார்த்தேன்”

கலாட்டாவாக சபரி வீடு வந்து சேர்ந்தவர்கள் , புடவை எல்லாம் எடுத்து சபரி மாமியாரிடம் காண்பித்தனர்.

பார்த்தவுடன் அவர் “உன்கிட்ட என்ன சொன்னேன்?” என்று மித்ராவிடம் ஆரம்பிக்க போக, மைதிலி குறுக்கிட்டு

“பெரியம்மா.. மித்து நாலஞ்சு புடவை எடுத்து எங்கிட்ட காமிச்சா. நாந்தான் இந்த ரெண்டு கலரும் அவளுக்கும் பொருத்தமா இருக்கும், மேடையிலும் பளிச்சுன்னு தெரியும்ன்னு சொல்லி எடுத்துக்க சொன்னேன்” என்று கூறிவிட, அதற்கு மேல் அதை பற்றி எதுவும் பேசாமல் விட்டு விட்டார் மித்ராவின் பாட்டி

“மித்துமா.. ரெண்டு புடவைக்கும் ப்ளௌஸ் தைத்து வைத்துக்கோ.. அந்த சமயத்துலே நிச்சயத்துக்கு முன்னாடி, ஒரு புடவையும், அவங்க தந்தத கட்டிட்டு திருப்பி மாத்திக்க இன்னொன்னும் வச்சுக்கோ” என்ற மைதிலி

“சபரி. அவங்க நிச்சய புடவை எடுக்க எப்போ வராங்களாம்?

“தெரியல அண்ணி. இன்னிக்கு அவர் வந்தப்புறம் பேசலாம்ன்னு இருக்கேன்

“ஆமாமா.. ரெண்டு நாளில் அவங்கள வந்து எடுக்க சொன்னாதான் எல்லா ப்ளௌஸ்சும் தைச்சு வர கரெக்டா இருக்கும்”

“ஆமாம் அண்ணி.. நானும் அவங்க வந்து மித்துவ கூட்டிட்டு போவாங்களே, அன்னிக்கே எல்லாம் சேர்த்து எடுத்தரலாம்னு நினைச்சேன். அப்புறம் என்னவோ அவங்க இன்னும் வராததால் இன்னிக்கு போய் எடுத்துடுவோம்ன்னு பிளான் பண்ணி உங்கள எல்லாம் கூப்பிட்டேன். இதுக்கு அப்புறம் நமக்கு வேற வேலைகள் இருக்கே அண்ணி.”

“அதுவும் சரிதான் சபரி. மித்துமா அவங்க என்ன விலையில் எடுக்க சொல்றாங்களோ அதில் உனக்கு பிடிச்சத எதுத்துக்கோ சரியாடா”

மித்ரா தலையாட்ட , சுமி, சைந்தவி இருவரும்

“அது என்ன? அவங்க பட்ஜெட்லே நாம எடுக்கறது? நாங்க எடுக்கறத அவங்க பட்ஜெட்டா மாத்த சொல்லுங்க”

“அடி.. ரெண்டு பேருக்கும். இது எல்லாம் உங்க மாமியார் கிட்டே நீங்க பேசிக்கோங்க. இப்போ அவளை குழப்பாதீங்க”

இப்படி கலாட்டாவாக பேசிக் கொண்டு இருக்கும்போது போன் வர, எடுத்து பேசிய சபரி, அவர்களை பார்த்து ரிசீவர் வாய் மூடி

“சம்பந்தி அம்மா” என்று விட்டு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.