(Reading time: 11 - 21 minutes)

“ஹான்.. சொல்லுங்க அண்ணி.. .. ஒஹ்.. அப்படியா.. சரி... வேற ஒன்னும் இல்லீங்க.. வீட்டிலே எல்லோரையும் கேட்டதா சொல்லுங்க” என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே எதிர்புறம் போனை வைத்து விட, தானும் வைத்தாள்.

மைதிலி சபரியிடம் என்னவென்று கேட்க

“சம்பந்தி அம்மா தான் பேசினாங்க.. அவங்க மித்ராக்கு புடவை எடுத்துட்டாங்களாம். ப்ளௌஸ் அனுப்பி இருக்காங்களாம். தைச்சு வச்சுக்க சொன்னங்க. அன்னைக்கு மண்டபத்துலே வந்து வாங்கிக்குவாங்களாம்”  என, அங்கே சற்று நேரம் அமைதி நிலவியது.

மித்ராவின் பாட்டிதான் “அட நல்லதா போச்சு.. அதுக்கு ஒரு தடவை அவங்க அலையனுமேன்னு நினைச்சேன். சரி சரி.. மத்த ரவிக்கையோட இதையும் தைக்க கொடுத்துடு” என, மைதிலி

“ அது சரிதான் பெரியம்மா.. அதில் ப்ளௌஸ் கலர் வைத்து நாம மேட்சிங் நகை எல்லாம் எடுக்க முடியுமா? அவங்க போடுறத தவிர மத்தது நாம தானே எடுக்கணும். “

“அதுக்கு என்ன..? எல்லாம் வைரத்துலே போட்டு விட்டா எல்லா கலர்க்கும் எடுக்கும். சபையும் நிறையும்.”

அவர்களின் முடிவை கேட்ட மற்றவர்கள் அவரை எரிச்சலுடன் பார்க்க, மித்ராவோ எதுவும் சொல்லாமல் நின்றாள்.

வேறு வழி இல்லாமல் அதையே முடிவாக எடுத்து விட்டு வீட்டிற்கு திரும்பிய மைதிலி ராமிடம், இரவு படுக்க தங்கள் அறைக்குள் சென்ற பின்

“மித்ராவிற்கு கல்யாணத்துக்கு சரின்னு சொன்னது தப்போன்னு தோணுது ராம்” என்றாள்.

அவளை தோளோடு அணைத்து “எதுக்கு மிதுமா அப்படி சொல்ற?”

“மாப்பிள்ளை.. இன்னும் மித்ராவிடம் பேசவே இல்லையாம். மித்ராவோ ஷ்யாம் அத்தான் தான் எனக்கு நல்லா செலக்ட் பண்ணிதருவார்ன்னு சொல்றா. அந்த பெரியம்மா என்னடான்னா இந்த சம்பந்தத்தை ஓஹோன்னு சொல்றாங்க.. ஆனால் அவங்க நிச்சய புடவை பற்றிய அபிப்ராயம் கூட மித்ராவை கேட்கலை.. எனக்கு என்னவோ சரியா படல ராம்”

“ஹ்ம்ம். நீ சொல்றது யோசிக்க வேண்டிய விஷயம் தான். ஆனால் இப்போ மற்றவங்க விஷயத்தில் நாம தலையிட முடியாது. வேணும்னா ஷ்யாமை மித்ராவிடம் பேச சொல்றேன். ஒரு வேளை அவ ஷ்யாமை மிஸ் பன்னுறாளோ என்னவோ. அவன் கிட்டே பேசினால் அவளும் கலகலப்பகிடுவா”

என்று தன் மனைவிக்கு ஆறுதல் கூறினான். அவனின் பதிலில் சற்று தெளிந்த மைதிலி, அன்றைக்கு கடையில் அடித்த லூட்டிகளை பற்றி சொல்ல, இருவரும் சிரித்தனர்.

மித்ராவிற்கோ இங்கே ஒவ்வொன்றிலும் குழப்பம்.. இதற்கு முன் அவள் எதற்கும் தயங்கினது இல்லை. ஆனால் கொஞ்ச நாட்களாக என்னவோ தன் வீட்டினரிடத்தில் பேசக் கூட அவளுக்கு தயக்கமாக இருந்தது. அது ஏன் என்பதை ஆராய. அவளின் அத்தான் ஊரில் இல்லாததால், எல்லாவற்றிலும் ஒரு குறை இருந்தார் போலவே தோன்றியது.

அவளின் வாய்ஸ் மெசேஜ்க்கு ஷ்யாம் எந்த பதிலும் அனுப்பவில்லை என்றாலும், புடவை விஷயத்தில் அவளுக்கு இன்னும் இரட்டை மனதாக இருப்பதால், ரெண்டு புடவை இமேஜ் மட்டும் அனுப்பி வைத்தாள்.

ஷ்யாம் அவன் வேலை பிஸியில் எந்த பர்சனல் மெசேஜ் பார்க்காதவன், மித்ராவின் மெசேஜ் மட்டும் பார்த்தான். அதிலும் அந்த ஆடியோவை பார்த்தவன், அதை கேட்காமல், அவள் அனுப்பி இருந்த புடவை மட்டும் பார்த்து விட்டு அதில் ஒன்றை அவன் செலக்ட் செய்து அனுப்பி வைத்தான்.

அதை அனுப்பும்போது எதற்கு இப்போ புடவை என்ற யோசனை தோன்றினாலும், யாரவது பிரெண்ட் வீட்டில் விசேஷமா இருக்கும் என்று தானாகவே முடிவு செய்தவன், அவளின் வாட்ஸ்அப் ப்ரோபைல் படம் பார்த்து “லூசு.. உனக்கு எல்லாத்திலும் குழப்பம் தானா” என்று செல்லமாக திட்டி விட்டு அவன் வேலையை பார்க்க சென்றான்.

அந்த கண்காட்சியை நல்ல முறையில் முடித்த திருப்தியில் தன் அறைக்கு வந்து படுத்தவன் எழுந்தது மறுநாள் மதியம் தான். எழுந்தவுடன் சற்று நேரம் தன் வேலை எல்லாம் முடித்து விட்டு, வீட்டிற்கு பேச எண்ணி மணியை பார்க்க அங்கு இன்னும் யாரும் வீட்டிற்கு வந்து இருக்கா மாட்டார்கள் என்று விட்டு விட்டான்.

பிறகே நினைவு வந்தவனாக பர்சனல் மெயில் செக் பண்ண லேப்டாப் எடுத்தவன், தன் மொபைலில் மித்ராவின் வாய்ஸ் மெசேஜ் ஓட விட,

அதில் மித்ராவின் “அத்தான்” என்ற அழைப்பை கேட்டு அதிர்ந்தான். ஏன் எனில் அது அவனை எப்போதும் கூப்பிடும் அழைப்பு அல்ல. ஒரு மாதிரி குரல் கட்டி, தொண்டை அடைக்க கூப்பிட்ட மாதிரி இருந்தது.

மித்ரா அழுது இருக்கிறாளோ என்று பதறியவன், மேலும் அந்த மெசேஜ் ஓட விட்டு கேட்க கேட்க அவன் முகம் வேதனை சுமந்தது. அவனின் பர்சனல் மெயிலிலும் எல்லோரும் போட்டிருந்த விபரம் பார்த்தவன், அவர்களுக்கு அழைக்கக் எண்ணிய போதுதான் தேதியை பார்த்தான்.

அன்றைக்கு தான் மித்ராவிற்கு நிச்ச்சயதார்த்தம். எல்லோரும் மண்டபத்தில் இருப்பார்கள் என்று உணர்ந்து கொண்டான்.

“ம்ச்.“ தன் தலையில் தட்டியவன், வேதனையோடு கண்கள் மூடிக் கொண்டான்.

தொடரும்

Episode # 05

Episode # 07

{kunena_discuss:1187}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.